எம்.ஆர்.ராதாவின் 4வது மனைவி கீதா.. பல கோடி சொத்து.. கண்ணீரில் ராதிகா.. சேகுவேரா சொன்ன தகவல்!

சென்னை: மறைந்த நடிகர் எம்.ஆர்.ராதாவின் மனைவியும், நடிகை ராதிகா, நிரோஷாவின் தாயுமான கீதா வயது மூப்பு காரணாக நேற்றிரவு உயிரிழந்தார். 86 வயதான கீதா மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்தனர். அவரது உடல் போயஸ் கார்டன் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. கீதாவின் உடலுக்கு திரையுலகைச் சேர்ந்த பிரபு, நாசர் உள்ளிட்ட பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். இறுதி சடங்கு இன்று மாலை 4.30 மணி அளவில் பெசன்ட் நகர் மின் மயானத்தில் நடைபெற்றது.

மூத்த பத்திரிக்யாளரான சேகுவேரா, Realone Media யூடியூப் சேனலுக்கு அளித்து இருக்கும் பேட்டியில், எம்.ஆர். ராதா அவர்களின் நான்காவது மனைவி தான் கீதா ராதா. பொதுவாகவே எம்.ஆர்.ராதா, 5 மனைவிகளுடன் வாழ்ந்தாலும், யாரையும் பொது நிகழ்ச்சிக்கு அழைத்து வந்தது இல்லை. கீதா எம்.ஆர்.ராதாவின் மனைவி என்ற அங்கீகாரத்துடன் தான் இருந்தார். ஆனால், பிற்காலத்தில் பெயரை வாங்கி கொடுத்தது ராதிகா தான். இப்போது அனைவருக்கும் கீதாவை, ராதிகாவின் அம்மாவாக தான் அனைவருக்கும் தெரிகிறது. கீதா ஒரு நடிகையும் இல்லை, பாடகையும் இல்லை, வெளியே தெரியாத ஒரு முகமாகத் தான் இருந்தார். அவர் இறந்த செய்தி வெளியான மிக பிறகுதான் புகைப்படத்தின் வழியாக அவரது முகத்தை அனைவரும் பார்க்கிறோம்.

Radhika MR Radha Geetha death
Photo Credit:

ராதிகாவின் அம்மா: எம்.ஆர். ராதாவிற்கு 5 மனைவிகள், ஐந்து மனைவிக்குமே ஒரு அங்கீகாரம் கொடுத்து தான் வாழ்ந்து வாந்தார். எங்கு நாடகம் நடக்கிறதோ அந்த இடத்தில் இரண்டு மூன்று மாதங்கள் தங்கி இருக்கும் நிலையில், ஒருவரை திருமணம் செய்துவிடுவார். அப்படித்தான் கீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கீதா, எம்.ஆர்.ராதாவிற்கு பிறந்தவர்கள் தான் ராதிகா மற்றும் நிரோஷா. அவருக்கு பல கோடியில் சொத்துக்கள் இருந்தன. அவருடைய மறைவுக்கு பிறகு யாரும் எனக்கு சொத்து கிடைக்கவில்லை, உனக்கு சொத்து கிடைக்கவில்லை என தெருவில் வந்து சண்டை போடவில்லை. அனைவரையும் சமமாகத்தான் நடத்தினார். ஆனால், அவரின் கடைசி காலத்தில், தேனாம்பேட்டையில் உள்ள வீட்டில், ராதா ரவியின் அம்மாவுடன் தான் வாழ்ந்தார். தற்போது அந்த வீட்டில் தான் ராதா ரவி வாழ்ந்து வருகிறார்.

திட்டுவார்கள்: எம்.ஆர்.ராதா. ஐந்து மனைவிகளுடன் வாழ்ந்ததை ஆச்சரியமாகவும். கேலியாகவும். கிண்டலாகவும் பலர் பேசி வருகிறார்கள். அதுவே அவருடைய மகன் ராதாரவி, ஒரே ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு அவருடனே வாழ்ந்து வருகிறார். அவரைப் பற்றி யாரும் பெருமையாக பேசவில்லையே, தந்தையின் அவப்பெயரை நீக்கியவரே ராதாரவி தான். இதை நான் பேசினாலும், காசு விட்டு பேசுகிறார் என்று சொல்வார்கள். இந்த நேரத்தில் விமர்சனத்தை எல்லாவிட்டு விட்டு, ராதிகா என்ற ஆளுமையை பெற்ற கீதாவின் பெருமையைத்தான் நாம் பேச வேண்டும் என சேகுவேரா அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X