குடலில் பிரச்சனை.. மருத்துவமனையில் தாடி பாலாஜி.. விஜய்க்கு உருக்கமான கடிதம்.. சேகுவேரா சொல்வது என்ன?

சென்னை: நகைச்சுவை நடிகரான தாடிபாலாஜ, பிரகாஷ்ராஜ் மற்றும் சுஹாசினி நடித்த நந்தினி படத்தில் சிறுகதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். பின் சன் தொலைக்காட்சியில் மாயா மச்சீந்திரா தொடரில் எம்.எஸ்.பாஸ்கருடன் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர். அதைத்தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்த தாடி பாலாஜி,விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்துள்ளனார். தற்போது தாடி பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில்,Realone Media யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில், தாடி பாலாஜி வயிற்று வலி காரணமாகவே ஒரு மாதத்திற்கு மேலாக அவதிக்கப்பட்டுள்ளார். தற்போது மருத்துவமனையில் அதற்காக சிகிச்சை பெற்று வருகிறார். அவரிடம் நான் போனில் தொடர்பு கொண்டு பேசினேன். அப்போது அவர், மருத்துவமனையில் அனுமதிக்க பட்டிருப்பது உண்மைதான், குடல் பிரச்சனையை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க இருப்பதாகவும் கூறினார். எந்த மருத்துவமனையில் இருக்கிறீர்கள் என கேட்டேன், எந்த மருத்துவமனை என யாருக்கும் தெரிய வேண்டாம். ஏனென்றால், நண்பர்கள் இருக்கிறார்கள் தவெக தொண்டர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் கூடி விடுவார்கள் என கூறினார் மற்றபடி, நான் நலமாக இருப்பதாகத்தான் இருக்கிறேன் என்றார்.

thadi balaji hospitalized Che Guevara
Photo Credit:

தாடி பாலாஜி: கடந்த இரண்டு வருடங்களாகவே தாடி பாலாஜி குடிப்பதை நிறுத்தி விட்டேன் என்றார். ஆனால், அதற்கு முன்பு குடித்ததன் விளைவாகக்கூட தற்போது அவருக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம். ஆனால், தமிழக வெற்றி கழகம் தரப்பினரிடம் கேட்கப்பட்ட போது அவர் விஜய்க்கு உருக்கமாக கடிதம் ஒன்றை எழுதி இருப்பதாக சொல்லப்படுகிறது. அந்த கடிதம் விஜயின் கையில் கிடைத்ததா என்று கூட தெரியவில்லை. தாடி பாலாஜி பலருக்கு பல உதவிகளை செய்து இருக்கிறார். ஆனால், அவர் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளவில்லை. பாலா தான் செய்த உதவியை விளம்பரப்படுத்திக் கொண்டதால் தான் இவ்வளவு பெரிய சிக்கலில் அவர் சிக்கி இருக்கிறார். அந்த தனியார் தொலைக்காட்சியில் வேலை செய்யும் பலரும் யாருக்கும் தெரியாமல் பல உதவிகளை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். அந்த தொலைக்காட்சியின் மூலம் பலரும் பிரபலமாகி உச்சத்தை அடைந்து இருக்கிறார்கள். ஆனால், அண்மை காலமாக அந்த தொலைக்காட்சியில் பிரபலமானவர்கள் அனைவரும் ஏதாவது ஒரு பிரச்சனையில் சிக்குகின்றனர். அந்த சேனலின் ராசி அப்படி போல, ஒன்று விவாகரத்து ஆகிவிடுகிறது, இல்லை என்றால் உயிரிழந்து விடுகிறார்கள் அந்த தனியார் தொலைக்காட்சிக்கு கண் திருஷ்டி பட்டு இருக்கிறது என சேகுவாரா அந்த பேட்டியில் பேசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X