twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'பெப்சிக்கு ஆதரவு - அமீர் மீது நடவடிக்கை' - சொல்கிறார் சேரன்

    By Shankar
    |

    சென்னை: பெப்சி இல்லாமல், படம் எடுக்க முடியாது என்று பேசியதற்காக இயக்குநர் அமீர் மீது நடவடிக்கை எடுப்போம், என்று இயக்குநர் சேரன் கூறினார்.

    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, இயக்குநர்கள் சங்கத்தின் துணைத் தலைவரான சேரன் அவருடன் இருந்தார்.

    அப்போது, 'பெப்சி இல்லாமல், படம் எடுக்க முடியாது' என்று டைரக்டர் அமீர் பேசியிருக்கிறாரே?'' என்று நிருபர்கள் கேட்டார்கள்.

    அதற்கு பதில் அளித்த சேரன், "பெரிய தயாரிப்பாளர்கள் பற்றியும், பெரிய பட்ஜெட் படங்களை பற்றியுமே அமீர் பேசியிருக்கிறார். சிறு பட தயாரிப்பாளர்கள் பற்றி அவர் கவலைப்பட்டதாக தெரியவில்லை. அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    '3 பேர் 3 காதல்' என்ற படத்தின் வெளிப்புற படப்பிடிப்பின்போது, பெப்சி தொழிலாளர்கள் ஒரு வாரத்துக்கு பழைய சம்பளம் வாங்கிக்கொண்டு வேலை செய்தார்கள். பிறகு, புதிய சம்பளம் கொடுத்தால்தான் வேலை செய்வோம் என்று கூறியதால், சூழ்நிலை காரணமாக அதற்கு தயாரிப்பாளர் ஒத்துப்போக வேண்டியதாகி விட்டது.

    பெப்சி இல்லாமல் படம் எடுக்க முடியாது என்று அமீர் கூறியிருக்கிறார். டிஜிட்டல் சினிமா எடுப்பதற்கு மேக்கப்மேன், லைட்மேன் போன்றவர்கள் கூட தேவையில்லை. அப்படி படம் எடுத்தால், நிறைய யூனியன்களுக்கு வேலையே இல்லாமல் போய்விடும்.

    டிஜிட்டல் சினிமா வளர்ந்தால், 'பெப்சி' என்ன செய்யும்... பெரிய ஆபத்தில் சிக்கிக் கொள்ளும்," என்றார்.

    English summary
    Director Cheran told that Directors union would be taken action on director Ameer for supporting FEFSI.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X