லோகேஷ் கனகராஜோட வொர்ஸ்ட் ரைட்டிங்னா அது இந்த படம் தான்.. ரஜினி ரசிகர் சத்யன் ராமசாமி ஓபன் டாக்!
சத்யன் ராமசாமி தமிழ் ஃபிலிமிபீட்டுக்கு அளித்துள்ள புதிய பேட்டியில், "லியோ படத்தைவிட மோசமான திரைக்கதை என்றால் அது கூலி படத்தினுடையது தான்" என்று சொல்லிவிட்டு, அய்யய்யோ இல்லை, லியோ தான் லோகேஷ் கனகராஜின் வொர்ஸ்ட் படம் என்றார். இந்த அதிரடியான விமர்சனம் லோகேஷ் கனகராஜ் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த கூலி திரைப்படம் பற்றிய தனது நேர்மையான கருத்துக்களையும் சத்யன் பகிர்ந்துகொண்டார்.
சத்யன் தனது சினிமா பயணத்தை விவரிக்கும்போது, லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தை எடுத்தபோது தனக்கு ஒரு புது அனுபவமாக இருந்தது என்றும், அது மிகவும் பிடித்திருந்தது என்றும் கூறினார். ஆனால், கூலி திரைப்படம் விக்ரம் படத்தின் சாயலில் இருந்ததால், அந்த அளவுக்கு ஈர்க்கவில்லை என தெரிவித்தார்.

லியோ திரைப்படம் யு/ஏ சான்றிதழ் வாங்குவதற்கு படக்குழுவினர் போராடியதை சுட்டிக்காட்டிய சத்யன், கூலி திரைப்படத்திற்கு ஏ சான்றிதழ் கிடைத்தாலும் பரவாயில்லை என்று லோகேஷ் உறுதியாக இருந்ததாகக் குறிப்பிட்டார். மேலும், மாஸ்டர் படம் சாதாரணமான விஜய் படம் என்றும், அதில் லோகேஷ் கனகராஜூக்கு பெரிதாக ஸ்கோப் எதுவும் இல்லை என்றும் கூறினார்.
கூலி திரைப்படத்தில் ரஜினி சிறப்பாக நடித்திருந்தாலும், அனிருத்தின் இசை சிறப்பாக இருந்தாலும்கூட, லோகேஷிடம் இருந்து ரசிகர்கள் இன்னும் அதிகமாக எதிர்பார்த்ததாக சத்யன் தெரிவித்தார். கமல் சாருக்காக விக்ரம் போன்ற ஒரு படத்தை கொடுத்த லோகேஷ், விஜய்க்காக மாஸ்டர், லியோ போன்ற படங்களை கொடுத்தார். ஆனால், ரஜினிக்காக அவர் இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம் என்பது சத்யனின் கருத்து.
லோகேஷ் கனகராஜின் முந்தைய படங்களான கைதி, விக்ரம், மாநகரம் ஆகிய படங்களை ஒப்பிடும்போது, கூலி திரைப்படம் தனக்கு ஏமாற்றத்தை அளித்ததாக சத்யன் கூறினார். மேலும், ஜெயிலர் திரைப்படம் ஒரு ஜாலியான படம் என்றும், கூலி திரைப்படம் மிகவும் சிக்கலான திரைக்கதை கொண்ட படம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சத்யன் ராமசாமி தனது பேட்டியில், ரஜினி ரசிகர்கள் கூலி திரைப்படத்தை கொண்டாடுவார்கள் என்றும், அதே நேரத்தில் லோகேஷ் கனகராஜின் தீவிர ரசிகர்கள் ஏமாற்றம் அடையக்கூடும் என்றும் கூறினார். எது எப்படியோ, வரும் காலங்களில் இது 1000 கோடி வசூலை ஈட்டுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் என்றார்.


Click it and Unblock the Notifications











