»   »  டாட்டா காட்டும் தியா

டாட்டா காட்டும் தியா

Subscribe to Oneindia Tamil

கல்யாணம் கட்டிக் கொண்டு இல்லத்தரசியாக போவதால், சினிமாவுக்கு முதலும், கடைசியுமாக டாட்டாகாட்டுகிறார் தியா.

தீ அழகியாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி, கொஞ்ச காலம் ரசிகர்களை குதூகலப்படுத்தியவர் தியா.கோலிவுட் வானில் அடை மழையாக அசத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலை மாறி, அவ்வப்போது வந்துசெல்லும் தூறல் மழையாகவே இருந்தார் தியா.

இப்போது கல்யாணத்திற்கு ரெடியாகி விட்டார் தியா. தியாவுக்கு கேரளாவில் மாப்பிள்ளை பார்த்துள்ளனர்.கல்யாணத்திற்குப் பிறது தியா சினிமாவில் நடிக்க மாட்டாராம்.

கல்யாணமாகிப் போகப் போகிறாரே, கட்டக் கடைசியாக பார்த்து விடுவோம் செவன் படப்பிடிப்பில் இருந்ததியாவிடம், வாழ்த்துக்கள் (கனத்த இதயத்தோடுதான்..) சொல்லி விட்டு, அப்புறம் என்றோம்.

கல்யாணத்திற்குப் பிறகு சினிமாவுக்கு டாட்டா காட்டி விடுவேன். இப்போது செவன் படத்தில் மிச்சமுள்ளகாட்சிகளை வேகமாகமுடித்துக் கொடுத்து வருகிறேன். பாடல் காட்சி மட்டுமே இதில் பாக்கி (கடைசி கிளாமர்பாடல்?)

செஞ்சுரி ராகம் என்ற படத்தில் ஒப்பந்தமாகியிருந்தேன். கல்யாணம் காரணமாக அதிலிருந்து விலகி விட்டேன்.சூறாவளி என்று ஒரு படம். அந்தப் படம் எடுக்கப்படுவது போலவே தெரியவில்லை.

எனவே செவன்தான் எனது கடைசிப் படமாக இருக்கும் என நினைக்கிறேன். 11ம் தேதியுடன் சினிமாவுக்குமுழுக்குப் போடுகிறேன். அதன் பிறகு நடிக்க மாட்டேன் என்று கன்னக் குழி விரிய சிரித்தபடி சொன்னார் தியா.

ம்ஹூம், இன்னொரு கிளாமர் தேவதை விடைபெறுகிறது, எங்கிருந்தாலும் வாழ்க..

Read more about: dhiya to leave cinema
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil