»   »  சந்திப்போமா?

சந்திப்போமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

வெளிநாட்டு குடியரசுத் தலைவர் ஒருவர் தன்னை செக்ஸ் உறவுக்கு அழைத்ததாக முன்னாள் உலக அழகியும்,இந்நாள் நடிகையுமான டயானா ஹைடன் பரபரப்பாக கூறியுள்ளார்.

இந்தியாவின் சார்பில் உலக அழகிப்போட்டிகளில் கலந்து கொண்டு உலக அழகிப் பட்டத்தை வென்றவர்கள்எல்லாம் ஒரு வருடத்தில் சினிமாவுக்கு வந்து விடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

ஐஸ்வர்யா ராய், சுஷ்மிதா சென், லாரா தத்தா, யுக்தா முகி, ப்ரியங்கா சோப்ரா என அனைவரும் கெளரவஅழைப்பின் பேரில் வரும் அழைப்புகளை ஏற்று ஒரு வருடம் வெளிநாட்டு டிரிப் அடித்து விட்டு சினிமாவில்செட்டிலாகி விட்டார்கள்.

டயானா ஹைடனும் அதற்கு விதிவிலக்கல்ல. ஆங்கிலோ இந்தியப் பெண்ணான டயானாவின் நடிப்பில் உருவானஅப் பாஸ் என்ற இந்திப் படம் விரைவில் வெளிவர இருக்கிறது.

அண்மைக்காலமாக கலாச்சார அதிர்ச்சிகளை ஏற்படுத்தும் நோக்கில் பாலிவுட் படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன.அப் பாஸ் படமும் அத்தகைய படம்தான்.

திருமணம் ஆன தம்பதிகள் அன்றாட வாழ்வில் சந்திக்கும் செக்ஸ் ரீதியான பிரச்சினைகளை மையமாக வைத்துஇந்தப் படம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

படம் குறித்து டயானாவிடம் கேட்டபோது பெண்களுக்கு ஏற்படும் பாலியல் ரீதியான பிரச்சினைகள் குறித்தும்,அப்படிப்பட்ட பிரச்சினைகளை தான் சந்திக்க நேர்ந்தது குறித்தும் மனம் திறந்து பேசினார்.

இந்த படத்தில் செக்ஸ்க்கு வேறு பெண்களை நாடும் ஒருவரின் மனைவியாக நான் நடித்து இருக்கிறேன்.அவருக்கு வாழ்நாளில் என்றும் மறக்க முடியாத படிப்பினையை வழங்கும் பாத்திரப் படைப்பு அது. நம்மைச்சுற்றிநடக்கும் சம்பவங்களைத்தான் இந்த படம் பிரதிபலிக்கிறது.

நமது நாட்டில் திருமணம் ஆன எல்லா ஆண்களுமே ஒவ்வொரு விநாடியும் மனைவி அல்லாத வேறொருபெண்ணுடன் தங்கள் படுக்கையை பகிர்ந்து கொள்ள தயாராகவே இருக்கிறார்கள். இப்போதுதான் இப்படிநடக்கிறது என்று இல்லை. பழங்காலமாகவே இதுதான் நிலை.

நான் இத்தகைய ஆண்களை நெருங்க விடுவதே இல்லை. வெளிநாட்டைச் சேர்ந்த ஜனாதிபதி ஒருவரே என்னைஉறவுக்கு அழைத்து இருக்கிறார். நான் திடமாக அதை மறுத்திருக்கிறேன். இதேபோல் பெரிய பெரிய தொழில்அதிபர்கள், மிக முக்கிய பிரமுகர்களை எல்லாம் நான் நிராகரித்து இருக்கிறேன்.

பிரபலங்கள் மட்டும் இல்லை. சாமானியர்கள் கூட எனக்கு செக்ஸ் ரீதியில் பிரச்சினைகள் தந்தபடிதான்இருக்கிறார்கள். எனக்கு வந்த ஆயிரக்கணக்கான எஸ்.எம்.எஸ். தகவல்களே இதற்கு சாட்சி.

ஆனால், இப்படிப்பட்ட அநாகரீகமான வேலையில் சினிமாத் துறையினர் இறங்க வில்லை. இதற்கு நான் நன்றிசொல்லியாக வேண்டும் என்று பொங்கித் தீர்த்தார்.

அப் பாஸ் படத்தையடுத்து, அடா வில் கில் யூ என்ற படத்தில் டயானா நடிக்கிறார். இதுவும் ஒரு பரபரப்பானபடம்தான். மறைந்த இங்கிலாந்து இளவரசி டயானா, அவரது காதலர் டோடி அல் பயத் மற்றும் இளவரசர் சார்லஸ்ஆகியோருக்கு இடையேயான முக்கோண காதல் கதைதான் படத்தின் மையக் கரு.

இளவரசி டயானவாக, டயானா ஹைடன் நடிக்கிறார். கமீலா பார்க்கர் கேரக்டரில் வசுந்த்ரா தாஸ் நடிக்கிறார்.இந்தப் படம் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் வெளியாகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil