»   »  'ரீமேக் எனக்குப் பிடிக்காது; ஆனாலும்...' - மீண்டும் ஒரு காதல் கதை மித்ரன் ஜவஹர்!

'ரீமேக் எனக்குப் பிடிக்காது; ஆனாலும்...' - மீண்டும் ஒரு காதல் கதை மித்ரன் ஜவஹர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

யாரடி நீ மோகினியில் ஆரம்பித்து, கடைசியாக குட்டி வரை அனைத்துமே தெலுங்கு ரீமேக் படங்களாக, அதுவும் தனுஷுடன் மட்டுமே இணைந்து செய்த இயக்குநர் மித்ரன் ஜவஹர், இந்த முறை ஒரு மலையாள ரீமேக்கோடு வந்திருக்கிறார். அதுதான் மீண்டும் ஒரு காதல் கதை.

மலையாளத்தில் வெளியாகி ஹிட்டடித்த தட்டத்தின் மறையத்து படத்தின் தழுவல் இந்தப் படம்.


அவருடன் ஒரு சந்திப்பு...


"மீண்டும் ஒரு காதல் கதை என்று படத்திற்கு தலைப்பு வைத்துள்ளீர்கள்.. இது என்ன மாதிரியான ஒரு படமாக இருக்கும் என்று எல்லோரும் கேட்கிறார்கள்.


இது மிகவும் எளிமையான ஒரு காதல் கதை. இன்றைய காலகட்டத்தில் பேய் படங்கள் மற்றும் நகைச்சுவைப் படங்கள்தான் வந்து கொண்டு இருக்கின்றன. இக்கால கட்டத்தில் மீண்டும் ஒரு காதல் கதை வருகிறது என்பதை மக்களுக்கு தெரிவிக்கத்தான் நாங்கள் இந்த தலைப்பை தேர்ந்தெடுத்தோம்.


Director Mithran Jawahar interview

இது ஒரு ஹிந்து பையனுக்கும் இஸ்லாமிய பெண்ணுக்கும் இடையேயான காதலைப் பற்றிப் பேசும் படம். ஹிந்து மதத்தை சேர்ந்த ஒரு பையன் இஸ்லாமிய பெண்ணை காதலித்தால் அவன் எவ்வித பிரச்னையை எல்லாம் சந்திக்க நேரிடும் என்பதை மிகவும் யதார்த்தமாக கூறியுள்ளோம்.


ஹிந்து முஸ்லிம் படம் என்றதும் இது மதம் சார்ந்த படமா ? அல்லது அரசியல் பற்றிய படமா என்று எல்லோரும் யோசிக்கிறார்கள்.. இது பாம்பே படத்திற்கு பிறகு ஹிந்து முஸ்லிம் காதல் கதையை இப்படத்தில் கையாண்டுள்ளோம். இப்படத்தில் ஒரு பையனின் காதல்தான் பிரச்னைக்கு மூல காரணமாக இருக்குமே தவிர்த்து மதமோ அல்லது அதனுள் இருக்கும் அரசியலோ கிடையாது. இப்படத்தின் தலைப்பில் ஏற்கனவே ஒரு படம் வெளி வந்துள்ளது அப் படத்தை இயக்குநர் பிரதாப் போதன் இயக்கி இருந்தார். தேசிய விருது பெற்ற படம் அது.


Director Mithran Jawahar interview

தயாரிப்பாளர் சங்கிலி முருகன் அவர்களைச் சந்தித்து நாங்கள் எடுக்கவிருக்கும் படத்திற்கு இந்த தலைப்பு சரியாக இருக்கும் என்று எடுத்து கூறினோம். அவர் எங்களை படத்தை தயாரித்த ராதிகா மேடத்தைச் சென்று சந்தித்து பேசும் படி கூறினார்.ராதிகா மேடம் எங்களிடம் இப்படத்தின் தலைப்பை நீங்கள் தாராளமாக பயன்படுத்தலாம் என்று கூறினார்.


என்னைப் பொறுத்த வரை ரீமேக் என்பது ஒரு கடினமான ஒரு விஷயமாகும். ரீமேக் படங்கள் இயக்குவதில் எனக்கு எப்போதும் உடன்பாடு கிடையாது. யாரடி நீ மோகினி படம் வெளியான சமயத்தில் இருந்தே நான் இதை கூறி வருகிறேன்.


ஒரு படம் வெற்றி அடைந்துவிட்டால்அதை போன்ற ஒரு படத்தை இயக்கும்படி எல்லோரும் கேட்பது இயல்பு. நான் இயக்கிய ரீமேக் படங்கள் வெற்றி பெற்றதால் என்னை மீண்டும் ரீமேக் படங்களை இயக்கும் படி எல்லோரும் கேட்கிறார்கள். ரீமேக் படம் என்றாலும் இப்படத்தில் என்னுடைய முத்திரை என்பது நிச்சயம் இருக்கும். இப்படத்தில் வேறு விதமான பாடல்கள் இருக்கும், காட்சி அமைப்பு வேறு விதமாக இருக்கும். எங்கள் ஒளிப்பதிவாளரிடமிருந்து தட்டத்தின் மறையத்து படத்தில் இருந்து முற்றிலும் வேறு மாதிரியான ஒளிப்பதிவை நீங்கள் பார்க்கலாம்.


Director Mithran Jawahar interview

மீண்டும் ஒரு காதல் கதை தட்டத்தின் மறையத்து படத்தின் மூலக்கதையை மட்டும் எடுத்துக்கொண்டு, படத்தை நாங்கள் வேறு விதமாக எடுத்துள்ளோம். மீண்டும் ஒரு காதல் கதைக்கு என்ன தேவையோ அதை நாங்கள் சரியாக செய்துள்ளோம். அங்கே நிவின் வேறு இங்கே வால்டர் என்னும் அறிமுக நாயகன் என்பதை மனதில் வைத்து இப்படத்தை நாங்கள் செய்துள்ளோம்.


வால்டர் என்பவர் புதியவர் அவருக்கு என்ன வரும், அவரால் எவ்வளவு பேச முடியும் என்பதை யோசித்து அவருக்கு ஏற்றவாறு இப்படத்தை உருவாக்கியுள்ளோம். இஷா தல்வார் ஏற்கனவே 'தட்டத்தின் மறையத்து' படத்தில் நடித்து புகழ் பெற்றவர். இவர்கள் இருவரையும் எப்படி நாம் காண்பிக்கப் போகிறோம்... இது ஒரு மென்மையான் காதல் கதையாகும் இக்கதையில் எப்படி இவர்கள் இருவரையும் பொருத்தி நடிக்க வைக்க போகிறோம் என்பதை யோசித்துதான் படபிடிப்புக்கு சென்றோம்.இப்படத்தில் மொத்தம் ஐந்து, ஆறு கதாபாத்திரங்கள்தான். முக்கியமாக இவர்கள் இருவரின் கதாபாத்திரத்தை மைய்யபடுத்திதான் இப்படத்தின் கதை நகரும். மீண்டும் ஒரு காதல் கதையின் ஸ்கிரிப்ட் என்னால் எழுதப்பட்டது. அதை எப்படி சிறப்பாக எடுக்க முடியுமோ அவ்வளவு சிறப்பாக எடுத்துள்ளோம். இப்படத்தை வேறு தளத்திருக்கு கொண்டு சென்றது ஜி.வி.பிரகாஷ் குமாரின் பாடல்கள். படத்திற்கு பின்னணி இசை 'தட்டத்தின் மறையத்து' படத்துக்கு இசையமைத்த ஷான் ரஹ்மான். படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நாசர் மற்றும் தலைவாசல் விஜய் ஆகியோர் நடித்துள்ளனர். மனோஜ் கே ஜெயன் படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார். வனிதா மேடம் அம்மா வேடத்தில் நடித்துள்ளார். இதைத் தவிர்த்து சிங்கமுத்து சார் செய்திருக்கும் கதாபாத்திரம் நகைச்சுவை கலந்த பாத்திரமாகும்.


படத்தை பார்த்துவிட்டு தாணு சார் என்னிடம், 'படத்தை நன்றாக எடுத்துள்ளாய்...' என்று கூறியது எனக்கு மகிழ்ச்சியான ஒரு விஷயமாகும் என்று. என்னிடம் கூறியதையெல்லாம் தாண்டி தயாரிப்பாளர் சங்கத்தில் வைத்து எங்கள் படத்தை பற்றி அவர் பாராட்டி பேசியதாக எனக்கு என் நண்பர் மூலம் தகவல் வந்தது இது மிகவும் மகிழ்ச்சியான ஒன்றாகும்."


#IshaTalwar' Exclusive Interview on #MeendumOruKadhalKadhai


English summary
An interview with Meendum Oru Kadhal Kathai director Mithran Jawahar.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil