துணிந்த பின் கதையை எழுதியது மணிரத்னமா!?.. நவரசா இயக்குனர் சர்ஜூன் பேட்டி

சென்னை: மணிரத்னம் தயாரிப்பில் 9 இயக்குனர்கள், 9 கதைகள் என அந்தாலஜி திரைப்படமாக ஆகஸ்ட் 6ம் தேதி வெளிவரவுள்ளது நவரசா.

Recommended Video

எனது 15 வருட சினிமா போராட்டம் | Director Sarjun KM exclusive | Filmibeat Tamil

அதில் ஒரு கதையை இயக்குனர் சர்ஜுன் இயக்கியுள்ளார். அதில் அதர்வா, கிஷோர், அஞ்சலி ஆகியோர் நடித்துள்ளனர்.

நவரசா படம் குறித்து இன்னும் பல விஷயங்கள் குறித்தும் க்ளோஸ் கால் நிகழ்ச்சிக்கு பேட்டியளித்துள்ளார் இயக்குனர் சர்ஜுன்.

எதிர்பார்க்கும் கதை

எதிர்பார்க்கும் கதை

நவரசா படத்தில் நீங்கள் எதிர்பார்த்து காத்துள்ள கதை எது என்ற கேள்விக்கு, கவுதம் மேனன் "இயக்கியுள்ள கிட்டார் கம்பி மேலே நின்று" கதையை மிகவும் எதிர்பார்த்து காத்துள்ளதாக கூறியுள்ளார். இதில் சூர்யா, பிரயாகா மார்ட்டின் ஆகியோர் நடித்துள்ளனர். ரதிந்திரன் இயக்கியுள்ள கதையையும் எதிர்பார்த்து காத்துள்ளேன் என கூறியுள்ளார்.

ஸ்பெஷல் டாஸ்க் ஃபோர்ஸ்

ஸ்பெஷல் டாஸ்க் ஃபோர்ஸ்

சர்ஜுன் இயக்கியுள்ள கதையின் பெயர் துணிந்த பின். அது குறித்து பேசிய சர்ஜுன், இந்த கதை Special Task Force அதிகாரியை சார்ந்தது, அவர்கள் மேல் உள்ள நம்முடைய கண்ணோட்டத்தை தாண்டி அவர்கள் படும் கஷ்டங்களை ஆராய்ந்து இந்த கதையில் ஒரு பகுதியாக வைத்துள்ளோம் என கூறியுள்ளார்.

இயக்குனர் பாராட்டு

இயக்குனர் பாராட்டு

சர்ஜுன் இயக்கியுள்ள துணிந்த பின் கதையில் அதர்வா, கிஷோர், அஞ்சலி ஆகியோர் நடித்துள்ளனர். மூவரின் சிறப்பான நடிப்பையும் சர்ஜுன் பாராட்டி பேசியுள்ளார். படப்பிடிப்பு வன பகுதிகளில் நடந்ததால் அதனை திட்டமிட்ட படி முடிக்க அதர்வா சிறப்பாக ஒத்துழைத்ததாகவும் கூறியுள்ளார்.

பயத்துடன் பொறுப்புடன்

பயத்துடன் பொறுப்புடன்

தொடர்ந்து பேசிய சர்ஜுன் துணிந்த பின் கதையை மணி ரத்னம் தான் எழுதினார் என்ற சுவாரசியமான தகவலை கொடுத்துள்ளார். அதன் காரணமாக இந்த கதையை தான் பயத்துடனும், பொறுப்புடனும் இயக்கி இருப்பதாக கூறியுள்ளார் சர்ஜூன். நவரசா குறித்து இன்னும் பல விஷயங்களை இந்த பேட்டியில் பகிர்ந்துள்ளார் சர்ஜூன்

சர்ஜுன் பற்றி அதர்வா

சர்ஜுன் பற்றி அதர்வா

இயக்குநர் சர்ஜுன் KM உடன் இணைந்து பணிபுரிந்த அனுபவம் மற்றும் வெற்றி என்ற கதாபாத்திரத்தில் நடித்தது பற்றி, நடிகர் அதர்வா முரளி பல மீடியா நண்பர்களிடம் கூறியதாவது..இயக்குநர் சர்ஜுன் இந்த படத்தின் திரைக்கதையை பற்றி விவரிக்கும் போது, எந்த உணர்வை பற்றிய கதையை சொல்லப்போகிறார், என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தேன். இந்தப் படம் தைரியத்தை அடிப்படையாக கொண்டு உருவாக உள்ளது என்று அவர் விவரித்த பின்னர், என் மனம் சந்தோஷத்தின் உச்சிக்கு சென்றது. நான் ஸ்பெஷல் டாஸ்க் போர்சில் உள்ள ஒரு சிறப்பு அதிகாரியாக (Special Task Force officer) நடிக்கவுள்ளேன், என்று கூறியபோது ஆடம்பர காவல் அதிகாரி உடையில், மிக ஸ்டைலாக என்னை நானே கற்பனை செய்து கொண்டேன். இந்தப்படம் எனக்கு முற்றிலும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. இயக்குநர் சர்ஜுன் உடன் பணி புரிந்தது மற்றும் வெற்றி என்ற கதாபாத்திரத்தை செய்தது மிகவும் அற்புதமான அனுபவமாக இருந்தது என்று எல்லா ஊடக நண்பர்களிடமும் சொல்லி வருகிறார் .

ரசிகர்கள் ஆர்வம்

ரசிகர்கள் ஆர்வம்

திரைப்படமாக பார்ப்பது ஒரு ரகம் என்றால் ,அந்தாலஜி படத்திற்கென்று தனி ரசிகர்கள் உள்ளனர் .சின்ன சின்ன கதைகளாக இருந்தாலும் அதனை கையாளும் விதம் அனைவரையும் கவர்கிறது .அந்த வகையில் மிகவும் ஆர்வத்தையும், எதிர்பார்ப்பையும் கொண்டுள்ளது இந்த நவரசா . சமீபத்தில் வெளிவந்த அனைத்து அந்தாலஜி படங்களும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் ,அனைத்து முன்னணி இயக்குனர்களும் இந்த முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.தற்போது திரையரங்குகள் திறக்கப்படாத நிலையில், OTT தளங்களில் அந்தாலஜி படங்களை வெளியிடுவதால் நல்ல வரவேற்பு கிடைக்கின்றது என்று திரைபிரபலங்களின் கருத்தாகவும் உள்ளது.கண்டிப்பாக நவரசா நவரசங்களையும் கொண்டு இருக்கும் என்று இயக்குனர் கூறியுள்ளார்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X