»   »  சந்திப்போமா?

சந்திப்போமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ் திரையுலகம் மிகவும் மகிழ்ச்சியோடு இருக்கிறது. காரணம் திவ்யா உன்னி. ஸ்ரீதேவி மாதிரி இருக்கிறார் என்கிறார்கள் சிலர்.

தமிழுக்குத்தான் இவர் புதுமுகம். கேரளாவில் சுமார் இருபத்தைந்து படங்களில் நடித்து முடித்த நட்சத்திரம்.

மலையாள முன்னனி ஹீரோக்களான மம்மூட்டி, மோகன்லால் , சுரேஷ்கோபி, ஜெயராம் என்று அனைவருடனும் நடித்து தூள் கிளப்பியவர் தான் திவ்யாஉன்னி.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ஹோட்டல் மெளரியாவில் திவ்யா உன்னியை சந்தித்தோம். இன்டியா.இன்ஃபோ.காம்க்காக அவர் அளித்த ஸ்பெஷல்பேட்டி:

பொதுவாக, புதுமுகங்கள் நடித்து ஒரு படம் ரிலீசான பிறகு தான் அவரை மற்றப்படங்களில் புக் பண்ணுவார்கள். ஆனால் எனக்கு "கண்ணன் வருவான்"படம் வெளிவரும் முன்பே 3 படங்களில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. மிகவும் பெருந்தன்மை உடையவர்கள் தமிழ்திரையுலகில் இருக்கிறார்கள்.

முதலில் "கல்வெட்டு" என்கிற படத்தில் முரளிக்கு ஜோடியாக நடிப்பதற்காகத்தான் என்னை அழைத்தார்கள். அந்தப் படம் பாதி ஷூட்டிங்குடன்நிற்கிறது. இதற்கிடையில் டைரக்டர் சுந்தர்.சி "கண்ணன் வருவான்" படத்திற்காக என்னை நடிக்க அழைத்தார். இன்று படம் நன்றாகஒடிக்கொண்டிருக்கிறது என்று சந்தோஷமாக சிரிக்கிறார்.

மலையாளத்தில் முன்னனி நடிகையான நீங்கள் தமிழ் சினிமாவுக்கு வர ஸ்பெஷல் காரணங்கள் ஏதும் உண்டா திவ்யா?

தமிழ் சினிமா எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆரம்பத்திலிருந்தே தமிழ் சினிமாக்களை ஒன்று விடாமல் பார்த்து வருகிறேன். தமிழ் திரைப்படங்களில் நடிக்கவேண்டும் என்பது என் நீண்ட நாள் கனவு. அது இன்று நிறைவேறிய மகிழ்ச்சியில் இருக்கிறேன்.

தமிழ் சினிமாவில் நடித்தால் ஒரு தனி பெருமை..மரியாதை இருக்கிறது. நல்ல நல்ல கதாபாத்திரங்களிலும் நடிக்கலாம். இவற்றைத் தவிர வேறு எந்தஸ்பெஷல் காரணங்களும் இல்லை.

இந்தி நடிகைகளைத் தேடிப்போய் பட வாய்ப்புகளை வழங்கிக் கொண்டிருக்கும் தமிழ் படத் தயாரிப்பாளர்கள் பக்கத்து மாநிலத்தைச் சேர்ந்த என்னை தேடிவந்துவாய்ப்பு கொடுத்ததை நினைத்தால் பெருமையாக இருக்கிறது.

முதல் தமிழ் படத்தில் நடித்தது பற்றிச்சொல்லுங்களேன்.?

தமிழ் படத்தில் நடிக்க வந்துவிட்டேனே தவிர , தமிழ் வசனங்களை பேசி நடிக்க எனக்குள் ஒரு பயம் இருந்தது. முதல் நாள் நான் பேசி நடிக்க வேண்டியவசனங்களை மலையாளத்தில் எழுதி மனப்பாடம் செய்யவே பேனா நோட்டுடன் வந்த என்னை டைரக்டர் சுந்தர்.சி பார்த்துவிடடு சிரிக்க ஆரம்பித்துவிட்டார்.

பேனா நோட்டு எல்லாம் வேண்டாம். நான் சொல்லுகின்ற வசனத்தை கேட்டு பேசினால் போதும் எனக்கு வேண்டியது லிப் மூவ்மெண்ட்தான்.எப்படியும் உனக்கு வேறு ஒருவர்தான் டப்பிங் பேசுவார் என்று சொன்ன பிறகு தான் என் டென்ஷனே குறைந்தது.

மலையாளத்தில் நல்ல நடிகை என்று பெயரெடுத்தது மாதிரியே தமிழ் திரையுலகத்திலும் பெயரெடுக்க வேண்டும். திவ்யா இந்த காரெக்டருக்குத்தான்லாய்க்கு என்று முத்திரை குத்திவிடாதபடி எல்லா கதாபாத்திரங்களிலும், வித்யாசமாக நடித்து பெயரெடுக்கவேண்டும். இதுதான் என் லட்சியம்.

நடித்துக் கொண்டே படித்துக் கொண்டும் இருக்கிறீர்களாமே?

நடிக்க வந்ததால் படிப்பு போச்சு என்ற நிலை எனக்கு ஏற்படவில்லை. நடித்துக்கொண்டே படித்துக்கொண்டும் இருப்பேன். கொச்சி செயின் தெரசா கல்லூரியில்பி.ஏ. படித்துக்கொண்டிருக்கிறேன். முடிந்த அளவுக்கு காலேஜுக்கும் சென்று வருகிறேன்.

ஆயிரம் சொல்லுங்கள் கல்லூரி வாழ்கை என்பது தனிதான். அதில் உள்ள அனுபவங்களும்...சந்தோஷங்களும் கிடைக்கும் பொழுது பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

ஓரளவுக்கு சுமாராக பாடுவேன். சமையல் செய்ய ஆசை, வாய்ப்பு கிடைப்பதில்லை. பரத நாட்டியம் முறைப்படி கற்றுள்ளதால் நன்றாக நடனமாடுவேன்என்று சொல்லும் திவ்யா கார் ஒட்டுவது, நீச்சல் என்று ஒரு நடிகைக்குரிய எல்லா தகுதிகளையும் பெற்றிருக்கிறார்.

"கண்ணன் வருவான்" படத்திற்காக, ஷிசில் தீவுக்கு அவுட்டோர் போய் வந்தது தான் தன் முதல் வெளிநாட்டுப்பயணம் என்று சொல்லும் திவ்யாஉன்னி,தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களைக் குறிவைத்து வெற்றிக்காக காத்திருப்பதாகச் சொல்கிறார்.

கேரளாவில் திவ்யா உன்னிக்கு "பூக்களின் ராணி" என்கிற பட்டம் உண்டு. தமிழகத்தில் இந்தப் பூ இப்போது தான் மொட்டாகியிருக்கிறது.

இந்த மொட்டு மலர்ந்து திரையுலகத் தோட்டத்தில் தொடர்ந்து வாசம் வீசுமா?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil