லவ் ஃபெயிலியர் ஆனவுடனே குறளுக்கு பாரி மீது எப்படி லவ் வந்துச்சு.. கீர்த்தீஸ்வரனின் அடடே விளக்கம்!
சென்னை: தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டியூட் திரைப்படம் ஜென் ஸி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், அந்த படம் 100 கோடிக்கும் மேல் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடித்ததாக தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டது.
படத்தை பார்த்த பலரும் லவ் டுடே, டிராகன் அளவுக்கு இந்த படம் இல்லை என்றும் தாலி அறுக்கும் தமிழ்நாட்டு ஹீரோ என ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்களையும் முன் வைத்தனர். விமர்சனங்களை கடந்து படம் வசூல் ரீதியாக வெற்றிப் பெற்ற நிலையில், ஹாட்ரிக் 100 கோடி வெற்றி கொடுத்ததற்காக மக்களுக்கு நன்றி தெரிவித்து பிரதீப் ரங்கநாதன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், படம் வெளியான பிறகு இயக்குநர் கீர்த்தீஸ்வரன் பரத்வாஜ் ரங்கன் உடன் நடத்திய நேர்காணலில் பாரிக்கும் குறளுக்கும் எப்படி காதல் வந்தது என்கிற கேள்விக்கு அவர் எழுதி இயக்கிய திரைக்கதையை கூறியுள்ளார்.
சூப்பர் படம்.. குப்பை படம்: ஜிகர்தண்டா படத்தில் ஆரம்பத்தில் ஹீரோவின் குறும்படத்தை பார்த்துவிட்டு ஒருவர் குப்பை படம் என்றும் ஒருவர் சூப்பர் படம் என்றும் சொல்வது போலத்தான் டியூட் படத்தை பார்த்தவர்கள் இரு தரப்பு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். தாலி அறுப்பது, ஃபேக் மேரேஜ் உள்ளிட்ட விஷயங்கள் ட்ரோல் செய்யப்படுவதும், ஆணவக் கொலைக்கு எதிராக படம் பேசியுள்ள விஷயத்துக்காக பாராட்டுக்கள் குவிந்து வருவது என டியூட் படம் வெற்றிப் பெற்றுள்ளது.
டியூட் படக்கதை: டியூட் படத்தில் அகனின் காதலி இன்னொருவரை திருமணம் செய்துக் கொள்ள அங்கே சென்று மணப்பெண்ணின் கழுத்தில் கட்டியிருந்த தாலியை தவறுதலாக அகன் அறுத்துவிட ஒட்டுமொத்த கல்யாண கோஷ்டியும் அகனை அடி வெளுத்து போலீஸில் ஒப்படைக்கும். அங்கே இருந்து அவனை காப்பாற்றும் மாமாப் பொண்ணு குறல் அகனை காதலிப்பதாக ப்ரோபோஸ் செய்ய, உன் மீது ஃபீலிங் இல்லை என ஒதுக்கி விடுவார். அதன் பின்னர், படிக்க பெங்களூருவுக்குச் செல்லும் குறள் பாரியை காதலித்து இருப்பார். குறள் மீது திடீரென அகனுக்கு காதல் வர மாமாவிடம் சொல்லி திருமண ஏற்பாடுகளை செய்வார். திருமணத்துக்கு வரும் குறள் தான் பாரியை காதலிப்பதாக சொல்ல, மாமாவிடம் இருந்து குறளை காப்பாற்ற தானே திருமணம் செய்துக் கொள்வார் அகன்.அதன் பின்னர், ரகசியமாக வெளிநாட்டுக்கு பாரி மற்றும் குறளை அனுப்பி வைக்க ஏற்பாடு செய்ய இறுதியில் என்ன ஆனது என்பது தான் டியூட் படக்கதை.

பாரிக்கும் குறளுக்கும் லவ் எப்படி வந்தது?: அகனை காதலித்து விட்டு 6 மாதம் கல்லூரிக்குச் சென்ற கேப்பில் பாரியுடன் காதல் ஏற்பட்டு குழந்தை பெற்றுக் கொள்ளும் அளவுக்கு குறள் எப்படி மாறினாள் என்கிற கேள்வி ரசிகர்களுக்கு இருந்த நிலையில், அதே கேள்வியை இயக்குநர் கீர்த்தீஸ்வரனிடம் பரத்வாஜ் ரங்கன் எழுப்பினார்.
குறள் சூசைடை தவிர்த்த பாரி: அகன் கிடைக்கவில்லை என்றதும் கல்லூரியில் மனமுடைந்து போகும் குறள் மாடியில் இருந்து சூசைட் செய்துக் கொள்ள முடிவெடுத்து குதிக்க நிற்கும் போது பாரி அங்கே வந்து, சிகரட் பற்ற வைக்க லைட்டர் கேட்பார். அதன் பின்னர், குறளின் தற்கொலை எண்ணத்தை தவிர்க்கவே அவர் இபப்டி செய்தார் என்பதை அறிந்துக் கொண்ட உடனே குறள் அவர் மீது காதலில் விழுவார். இதுபோன்ற காட்சிகள் எடுத்தோம். ஆனால், படத்தில் வைக்க முடியவில்லை என விளக்கம் கொடுத்துள்ளார்.
கலாய்க்கும் ரசிகர்கள்: நல்லவேளை பாரியை அவ்ளோ சூப்பரா பில்டப்புடன் காட்டிவிட்டு கவுண்டமணியிடம் அடிவாங்கும் செந்தில் போல பிரதீப் ரங்கநாதனிடம் அடிவாங்கும் காட்சிகளை இடைவேளைக்கு பிறகு வைத்திருந்தால் படம் படுத்தே இருக்கும் என்று ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











