»   »  ஒத்தப் பாட்டுக்கு டபுள் ஓகே..

ஒத்தப் பாட்டுக்கு டபுள் ஓகே..

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஒத்தப் பாட்டாக இருந்தாலும், குத்துப் பாட்டாக இருந்தாலும் எனக்கு டபுள் ஓ.கே.என்று நெஞ்சை நிமிர்த்தி கூறுகிறார் துலீப் ஜோஷி.

பாப்பா பேருதான் புதிசு, ஆனால் தமிழுக்கு கொஞ்சம் போல தெரிஞ்ச முகம்தான்இந்த ஜோஷி. அம்மணியைத்தான் வாத்தியார் படத்தில் அர்ஜூனுக்கு ஜோடியாகமுதலில் போட்டிருந்தார்கள். பெயரை அஞ்சலி என்று மாற்ற வேண்டும் என்றுஇயக்குனர் வெங்கடேஷ் கூறியதால் கடுப்பான துலீப் அதெல்லாம் முடியாது என்றுகூறி மறுத்தார்.

அத்தோடு ஏகப்பட்ட பந்தாக்களையும் அவிழ்த்து விட்டார் துலீப். பார்த்தார்வெங்கடேஷ், துலீப்புக்கு டுமீல் விட்டு விட்டு மல்லிகா கபூரைப் பிடித்து படத்தைஎடுத்து முடித்து ரிலீஸும் செய்து விட்டார்.

தன்னைத் தேடி வந்த முதல் தமிழ்ப் படவாய்ப்பே நழுவிப் போனது ஜோஷிக்குஇன்னும் மனசை வருத்திக் கொண்டுள்ளதாம். இருந்தாலும் காயத்தை பீரைப்போட்டு ஆற விட்டு விட்டு துலீப், தமிழ்ப் படங்களில் நடிக்க ரொம்ப ஆர்வமாகஉள்ளாராம்.

தமிழ்ப் பட வாய்ப்பு வரும் வரை சும்மா இருக்காமல், இந்தியில் புக் ஆகி இந்திரசிகர்களை புளகாங்கிதமடைய வைக்க திட்டமிட்டுள்ளாராம். இந்தியில் இப்போதுதுலீப் கையில் ஹாஸ்டல், சூன்யே என தோ படங்கள் உள்ளதாம். இரண்டிலுமேகிளாமரில் துள்ளி விளையாடியுள்ளாராம்.

இப்போதைக்கு இந்தியில்தான் நிலை கொண்டிருந்தாலும் தனது நடிப்பு பிளஸ்கவர்ச்சிப் புயலால் தென்னிந்திய ரசிகர்களை குறிப்பாக தமிழ் ரசிகர்களை தட்டுத்தடுமாறி அலைய வைக்காமல் விட மாட்டேன் என படு உறுதியாக கூறுகிறார் துலீப்.

எனக்கு எப்படிப்பட்ட ரோல் என்றாலும் ஒ.கே.தான். அதற்காக ஓவர் கிளாமர்முடியாது. குத்துப் பாட்டாக இருந்தாலும் கூட பரவாயில்லை. நிச்சயம் செய்வேன்.பாட்டு சிங்கிளாக இருந்தாலும் நாம் அந்தப் படத்தில் இருக்கிறோம் என்பதுதானேமுக்கியம் (ஆமாமா ரொம்ப ரொம்ப முக்கியம்!)

எனது நடிப்புத் திறமையை முழுமையாக காட்டத் தயாராக இருக்கிறேன். பாடலாகஇருந்தாலும் அதிலும் எனது திறமை பளிச்சென தெரியும் என்கிறார் துலீப்.

பளிச்சென்று நடிப்பு மட்டும் தெரிந்தால் போதும்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil