twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    என்ஜாய்...என்சாமி பாடல் மூலம் புகழ் பெற்ற அறிவு...யாருடன் செல்ஃபி எடுக்க ஆசைப்பட்டார் தெரியுமா ?

    |

    சென்னை: எனது பாடல்களில் சமுதாய கருத்து கண்டிப்பாக இருக்கும் என்று என்ஜாய்... என்ஜாமி.. பாடலை பாடிய அறிவு சமீபத்தில் கூறினார்.

    Recommended Video

    Singer Arivu | Selfie Movie | என் பாட்டில் எப்போதும் சமுக கருத்து இருக்கும் | Filmibeat Tamil

    தற்போது செல்ஃபி படத்திற்கு பாடல்களை எழுதியுள்ள அவர் மேலும் கூறுகையில், பாடல்கள் மூலம் தான் நாம் மக்களை சென்றடைய முடியும் என்றும், எனது பாடலின் மையக்கருத்தினை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

    செல்பி பட விழாவில் கலந்து கொள்ள வந்திருந்த என்ஜாமி.. என்ஜாமி.. பாடகர் அறிவு, நமது பிலிம்பீட் வினோத்துக்கு அளித்த சிறப்பு பேட்டி இங்கு பார்க்கலாம்.

    லிங்குசாமி இயக்கத்தில் உருவாகிறது ரன் 2... மாதவன் நடிப்பாரா? லிங்குசாமி இயக்கத்தில் உருவாகிறது ரன் 2... மாதவன் நடிப்பாரா?

     6 பாடல்களை எழுதிய அனுபவம்

    6 பாடல்களை எழுதிய அனுபவம்

    கேள்வி: நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் செல்பி படத்தில் உங்களது பங்களிப்பு என்ன?

    பதில்: என்ஜாமி...என்ஜாமி.. பாடலுக்கு பிறகு வித்தியாசமான முயற்சிகள் செய்து வந்தேன். நிறைய அனுபவம் கிடைத்தது. சினிமாவிலும் Rapper Song மட்டுமின்றி மெலோடி மற்றும் சோகமான பாடல்களும் எழுதி வருகின்றேன். இதன் தொடக்கம் தான் செல்பி பாடத்தில் நான் எழுதியுள்ள பாடல்கள். இந்த படத்தில் 6 பாடல்களை எழுதியுள்ளேன். இதில் நான்கு பாடல்களை நான் பாடியுள்ளேன். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன் என்றார்.

     சுதந்திரம் கிடைத்தது

    சுதந்திரம் கிடைத்தது

    கேள்வி: செல்பி படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குறித்து நீங்கள் கூற விரும்புவது....

    பதில்: ஜி.வி.பிரகாஷ் இசை மக்களிடம் எந்தளவுக்கு சென்றடைந்துள்ளது என்பது நம் எல்லோருக்கும் தெரியும். செல்பி படத்திற்காக நான் எழுதிய எல்லா பாட்டும் அவருக்கு பிடித்திருந்தது. எல்லா பாட்டுக்கும் அவர் கொடுத்த Input தான் முக்கியமாக இருந்தது. ஒவ்வொரு பாட்டுக்கும் எனக்கு அறிவுரை வழங்கினார். இந்த பாட்டு இப்படி வந்தா நன்றாக இருக்கும் என்றார். அவர் சொன்னதை அப்படியே செய்திருக்கிறேன். இந்த படத்தின் பாடல்களும் எனது விருப்பப்படி எழுதுவதற்கு முழு சுதந்திரம் அளித்தார். பாடல்களும் நன்றாக வந்துள்ளது என்றார்.

    மையக்கருத்து

    மையக்கருத்து

    கேள்வி: என்ஜாமி... என்ஜாமி... பாடலுக்கு வந்த வாழ்த்துக்களில் மறக்க முடியாதது எது?

    பதில்: வாழ்த்துக்களை விட என்ஜாமி.. என்ஜாமி பாடல் மூலம் எனக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதை சந்தோஷமாக நினைக்கிறேன். ஒரு சமுதாயத்தின் பார்வை மாறியுள்ளதாக கருதுகிறேன். என்ஜாமி.... என்ஜாமி.... பாடலின் மையக்கருத்தை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். எனது பாடலுக்கு கிடைத்த வரவேற்பு தான், எனக்கு கிடைத்த பரிசாக நினைக்கிறேன் என்றார்.

     வலியை கலை வடிவத்தில் மாற்ற வேண்டும்

    வலியை கலை வடிவத்தில் மாற்ற வேண்டும்

    கேள்வி: கல்லூரி மாணவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?

    பதில்: கலை என்பது மக்களுக்கானது. மக்களின் பிரச்னைகள், மக்களின் வாழ்க்கை முறையினை கலை வடிவத்தில் பேச வேண்டும். சமூகத்தில் நடக்கின்ற பிரச்சனைகள் நம்மை பாதிக்கும்பட்சத்தில் நமக்கு வலி ஏற்படுகிறது. அந்த வலியை அப்படியே கொடுக்கும்பொழுது மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அந்த வலியை கலை வடிவத்தில் மாற்றி, அவற்றுக்கு வர்ணங்கள் பூசி பாடல்களாக கொடுக்கிறோம். அவ்வாறு கொடுக்கும்பொழுது, பாடல்களை மக்கள் ரசிப்பது மட்டுமின்றி, பாடல்களின் கருத்தையும், சமூக விழிப்புணர்வையும் மக்கள் மனதில் நிலைநிறுத்தும்போது நமக்கு சந்தோஷம் ஏற்படுகிறது.

     நண்பர்கள் அடித்தளம்

    நண்பர்கள் அடித்தளம்

    கேள்வி: பாடல்கள் எழுதவேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு எப்பொழுது தோனறியது?

    பதில்: கல்லூரி காலத்தில் தான். கல்லூரிக்கு முன்பே நான் கவிதை எழுதுவேன். கவிதை புத்தகமும் போட்டு இருக்கிறேன். பாடல்கள் மூலம் தான் மக்களை சென்றடைய முடியும் என்பதை கல்லூரியில் சேர்ந்த பிறகு தான் தெரிந்து கொண்டேன். அதன் பின்பு நண்பர்கள் இணைந்து மியூசிக் பேண்ட் உருவாக்கினோம். கல்லூரி, நட்பு, காதல் போன்றவை குறித்து பாடல்கள் எழுதலாம் என்று எதார்த்தமாக பேசி தொடங்கியது தான். எனது நண்பர்கள் தான் இதற்கு அடித்தளம் அமைத்து கொடுத்தனர்.

     கரடு, முரடாக இருக்கக்கூடாது

    கரடு, முரடாக இருக்கக்கூடாது

    கேள்வி: ரசிகர்களுக்கும், உங்களை போன்ற இளம் கலைஞர்களுக்கும் நீங்கள் கூறும் அறிவுரை?

    பதில்: சமூகத்தை புரிந்து கொள்ள வேண்டும். சமூகத்தை ஆழமாக உள்வாங்கும்பொழுது, நமது படைப்புகளில் அது எதிரொலிக்கும். நமது படைப்புகள் தான்நம்மை அனைவரிடமும் கொண்டு சேர்க்கும். படைப்புகளில் மையக்கருத்தை மிகவும் கவனமாக வைக்க வேண்டும். நாம் உண்மையாக இருக்க வேண்டும், சமூகத்தின் பிரச்னைகளை பாடல்களில் பேச வேண்டும் என்று நினைத்து கரடு முரடான, கோபம் நிறைந்த பாடலாக அமைத்து விடக்கூடாது. நீங்கள் சொல்ல விரும்பும் சமுதாயத்தின் மீதான கருத்தை சரியாத விதத்தில், எல்லோரும் ரசிக்கும்படியாக அமைக்க வேண்டும் என்பது எனது கருத்து என்றார்.

    யாருடன் செல்ஃபி

    கேள்வி : படத்தின் தலைப்பு செல்ஃபீ , நீங்கள் யாருடன் எடுக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் ?

    பதில் : செல்ஃபீ என்கிற இந்த கலாச்சாரம் மீது எனக்கு அதிகம் பற்று கிடையாது தான். இருந்தாலும் கூட ஒரு பாண்டஸி சிந்தனையுடன் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்றால் அம்பேத்கர் அவர்களுடன் தான் செல்ஃபீ எடுக்க வேண்டும் என்று தனது ஆசையை பதிவு செய்தார் .இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ்யூட்யூப்சேனலிலும் https://youtu.be/T5yyiYKvIYk இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம். பில்மிபீட் ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் வினோத் மற்றும் அறிவு இன்னும் நிறைய விஷயங்களை ஸ்வாரசியமாக பேசி உள்ளனர். மறக்காமல் முழுவீடியோவையும் பாருங்கள்

    English summary
    Enjoy Enjaami Fame Arivu Special Interview
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X