»   »  இனிய தமிழ் மக்கள்..கோபிகா

இனிய தமிழ் மக்கள்..கோபிகா

Subscribe to Oneindia Tamil

தமிழ் மக்கள் மீதும், ரசிகர்கள் மீதும் கோபிகாவுக்கு ரொம்பப் பாசமாம், மரியாதையாம். நான் பார்த்த சினிமா ரசிகர்களிலேயே தமிழ் ரசிகர்கள்தான் அன்பானவர்கள் என்று சர்ட்டிபிகேட் கொடுக்கிறார் சந்தோஷமாக.

ஆட்டோகிராப் போட்ட கையோடு படு வேகமாக தமிழில் முன்னேறி வந்த கோபிகா, கனா கண்டேனுக்குப் பிறகு கப் சிப் என வேகம் குறைந்து போனார். கனா கண்டேனில் லேசு பாசாக கவர்ச்சி காட்டப் போய், அதை தமிழ் பத்திரிக்கைள் சகட்டு மேனிக்கு விமர்சிக்க, தமிழ் சினிமா மீது அவருக்கு லேசான கோபம் வந்து விட்டது போலும்.

இதனால் கோபித்துக் கொண்டு தாய் மொழியாம் மலையாளத்துக்குத் தாவி விட்டார். இடையில், எம் மகன் படத்துக்காக மீண்டும் தமிழுக்குத் திரும்பினார். பின்னர் தமிழ், மலையாளத்தில் தயாரிக்கப்பட்ட அரண் படத்தில் நடித்தார். இப்போது வீராப்புக்காக மீண்டும் தமிழுக்கு வந்துள்ளார்.

வீராப்பு படத்தில் துறுதுறுப்பான, ரப்பு பிடித்த பெண் கேரக்டரில் கலக்கலாக நடிக்கிறாராம் கோபிகா. அடிக்கடி தமிழில் நடிக்காவிட்டாலும் கூட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடிக்க ஆசையாக இருக்கிறாராம் கோபிகா.

தமிழ் சினிமாவையும், அதன் ரசிகர்களையும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். மிகவும் அன்பானவர்கள் தமிழ் ரசிகர்கள். நான் பார்த்த ரசிகர்களிலேயே தமிழ் ரசிகர்கள்தான் மரியாதையானவர்கள், அன்பானவர்கள். எனவே தமிழில் அதிக படங்களில் நடிக்க ஆர்வமாக உள்ளேன்.

ஆனால் என்ன செய்வது, மலையாளத்தில் நிறையப் படங்களை ஒத்துக் கொண்டு விட்டதால் தமிழுக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை.

எனக்கு கிளாமர் பிடிக்காது, அப்படி நடிக்கவும் மாட்டேன். ஹோம்லியான பெண்ணாகத்தான் நடிப்பேன். மலையாளத்துக்கு ஒரு அளவுகோல், தமிழுக்கு ஒன்று என்று பாரபட்சம் எல்லாம் காட்ட மாட்டேன். இரண்டிலுமே ஹோம்லியான கேரக்டர்களில்தான் நடிப்பேன் என்கிறார் கோபிகா.

கையில் இருக்கும் மலையாளப் படங்களை முடித்து விட்டு மறுபடியும் தமிழில் தீவிர கவனம் செலுத்தப் போகிறாராம் கோபிகா.

ஹோம்லி பார்ட்டிகள் கோபிகாவை அணுகலாம்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil