நாய்களை விட குழந்தைங்க சேஃப்டி தான் முக்கியம்.. இட்லி கடையில் பிஸி.. ஜி.வி. பிரகாஷ் ஓபன் பேட்டி!
சென்னை: இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் பிலிமிபீட் தமிழுக்கு அளித்த பேட்டியில், தெரு நாய்கள் சிறு குழந்தைகளை கடித்தால் என்ன செய்வது, இதற்க்கு ஒரு அரசாங்க கட்டுப்பாடு வேண்டும் என்று ஆதங்கத்துடன் பேசியது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது.
மு.மாறன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள 'பிளாக்மெயில்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 12ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. த்ரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் நடித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று அவர் தெரிவித்தார். அது மட்டுமில்லாமல், 'இட்லி கடை’ படத்திற்கு இசையமைப்பாளராகவும் பணியாற்றி வருகிறார்.

தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் 'ராயன்’ திரைப்படத்தில் தம்பி கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் வாய்ப்பு வந்தது. ஆனால், அந்த கதாபாத்திரம் தனுஷுக்கு துரோகம் செய்வது போல் இருந்ததால், அந்த வாய்ப்பை வேண்டாம் என மறுத்துவிட்டேன் என ஜி.வி. பிரகாஷ் செம க்யூட்டாக பதில் அளித்துள்ளார். நேரடி வில்லனாக நடிக்க சான்ஸ் கிடைத்தால் கூட நடிப்பேன், ஆனால், துரோகியாக நடிக்க மாட்டேன் என்றார்.
'பிளாக்மெயில்’ படத்தில் வரும் கதாபாத்திரத்தைப் பற்றி ஜி.வி.பிரகாஷ் பேசுகையில், இயக்குநர் மு.மாறன் அவர்கள் நகைச்சுவையாகவும், அதே நேரத்தில் தனது நடிப்பு திறனை வெளிக்கொண்டு வரும் வகையிலும் காட்சி அமைத்திருந்தார் என்றார். மேலும், இப்படத்தில் எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்திருப்பது புது அனுபவமாக இருந்தது என்றும் கூறினார்.
சூர்யாவுடனான கூட்டணி குறித்து பேசிய ஜி.வி.பிரகாஷ், இயக்குநர் வெற்றிமாறன் ஒரு சிறந்த ஆசிரியர் என்றும், அவரிடம் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார். மேலும், விரைவில் சூர்யாவுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு கிடைத்தால், அது தனக்கு ஒரு இனிமையான சர்ப்ரைஸாக இருக்கும் என்றும் கூறினார்.
சினிமாவில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பது குறித்து பேசிய ஜி.வி.பிரகாஷ், கதைக்கு தேவைப்பட்டால் எந்த மாதிரியான கதாபாத்திரத்திலும் நடிக்க தயாராக இருப்பதாக கூறினார். மேலும், எதிர்காலத்தில் பேய் மற்றும் நகைச்சுவை கலந்த திரைப்படங்களில் நடிக்க ஆர்வமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தெரு நாய்கள் விவகாரம் பூதாகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், தன்னை பொறுத்தவரையில், குழந்தைகளின் சேஃப்டி தான் முதலில் முக்கியம். நாய்கள் பெருக்கத்தை அரசாங்கம் உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும். குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என ஆதங்கத்துடன் பேசியுள்ளார்.
மேலும், தனுஷின் இட்லி கடை படம் அக்டோபர் மாதம் வெளியாகவுள்ள நிலையில், அந்த படத்தின் இசை பணிக்காக 15 நாட்கள் ஒதுக்கி வேலை பார்த்து வருவதாகவும் இட்லி கடை படம் சிறப்பாக வந்துள்ளது என்றும் ஜி.வி. பிரகாஷ் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











