For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  எதற்கு பேசணும்,எதற்கு பேசக்கூடாது... 8 ஆண்டுகளில் ஆர்.ஜே.பாலாஜி கற்ற பாடம்

  |

  சென்னை: எனக்கு வாய் ஜாஸ்தி என்று கூறியவர்கள், இப்போது நன்றாக பேசுகிறாய் என்று கூறுவதாக ஆர்.ஜே. பாலாஜி நமது பிரத்யேக பெட்டியில் சிரித்தபடி தெரிவித்தார்.

  மேலும் அவர் கூறுகையில், எனக்கு பேசுறது பிடிக்கும், நான் பேசறது மற்றவர்களுக்கும் பிடிக்கும் என்பது எனக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் என்றும் கூறினார்

  கிரிக்கெட் வர்ணணையாளராகவும் மற்றும் எல்.கே.ஜி., மூக்குத்தி அம்மன் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடையே நன்மதிப்பை பெற்ற நடிகர் ஆர்.ஜே.பாலாஜி, நமது பிலீம்பீட்க்கு அளித்த சிறப்பு பேட்டியை இங்கு காணலாம்.

  புஷ்பா பட நாயகனை இயக்குகிறாரா லோகேஷ் கனகராஜ்.. சூப்பர் காம்பினேஷனா இருக்கே! புஷ்பா பட நாயகனை இயக்குகிறாரா லோகேஷ் கனகராஜ்.. சூப்பர் காம்பினேஷனா இருக்கே!

  இவர்கள் கெட்டவர்கள்?

  இவர்கள் கெட்டவர்கள்?

  கேள்வி: உங்களுக்கு மிமிக்ரி செய்ய தெரியுமா?

  பதில்: எனக்கு மிமிக்ரி பண்ணவே தெரியாது. நான் கல்லூரி விழாக்களின்போது மேடையில் ஏறி மிமிக்ரி செய்து விட்டு கீழே இறங்கி வரும்போது, யார் குரலில் பேசினாய் என்று நண்பர்கள் கேட்பார்கள். அப்பொழுதெல்லாம் மற்றவர்களை கூர்ந்து கவனிப்பேன். இவர்கள் நல்லவர்கள்.. கெட்டவர்கள் என்று தீர்மானிப்பேன். ஆனால் இப்போது உள்ள ஆர்.ஜே.பாலாஜி முழுவதுமாக மாறிவிட்டேன். இப்பொழுது நான் முழுவதுமாக கவனிக்கிறேன். தீர்மானிப்பதில்லை என்றார்.

  பொழுதுபோக்கான படம்

  பொழுதுபோக்கான படம்

  கேள்வி: வீட்ல விசேஷனம் திரைப்படம் குறித்து நீங்கள் கூற விரும்புவது?

  பதில்: எனது நடிப்பில் உருவாகியுள்ள வீட்ல விசேஷம் திரைப்படம் ஜூன் 17ம் தேதி இன்று வெளியாகிறது. வயதானவர்கள் குழந்தை பெற்றுக் கொள்வது தான் படத்தின் கதை. இந்த கதை ஹிந்தியில் ஆயுஸ்மேன் கொரோனா நடித்த "பதாஹிஹோ" ரீமேக் ஆகும் , மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் இதே மாதிரி ஸ்கிரிப்ட் வெளியானது. ஹிந்தி மற்றும் மலையாளத்தில் வெளியான படங்களில் எமோஷனல் அதிகமாக இருக்கும். ஆனால் தமிழில் உருவாகியுள்ள இப்படமானது ஒரு பொழுதுபோக்கு நிறைந்த படம். இந்த படத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்க்க முடியும் என்றார்.

  வாய் ஜாஸ்தி

  வாய் ஜாஸ்தி

  கேள்வி: உங்களுடைய Stress Buster எது?

  பதில்: என்னை பொறுத்தவரை ஏதாவது செய்யாமல் சும்மா இருப்பது தான் Stress Buster. நான் தொடர்ந்து பேசுவது என்னுடைய சுபாவம். எனக்கு கிரிக்கெட், பேட்மிண்ட்ன், டேபிஸ் டென்னிஸ் போன்ற விளையாட்டுகள் எனக்கு பிடிக்கும். ஒரு காலக்கட்டத்தில் நான் பேசும்பொழுது, எல்லோரும் எனக்கு வாய் ஜாஸ்தி என்றனர். அதையே நான் தொழிலாக பயன்படுத்தும்போது, நன்றாக பேசுகிறாய் என்றனர். நான் பேசுவதை வேலைக்காக பயன்படுத்தும்போது, வளர்ச்சியடைந்துள்ளேன். அதே நேரத்தில் எதற்கு பேசணும், எதற்கு பேசக்கூடாது என்ற வரைமுறையை கடந்த 8 ஆண்டுகளில் கற்றுக் கொண்டேன். நான் பேசுறது பிடிக்கும், நான் பேசறது மற்றவர்களுக்கும் பிடிக்கும் என்பது எனக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம். சில இடங்களில் மவுனமாக இருப்பதே நாம் பேச்சுக்கு கொடுக்கும் மரியாதை.

  உணர்வுபூர்வமான வசனங்கள்

  உணர்வுபூர்வமான வசனங்கள்

  கேள்வி: வீட்டுல விசேஷம் படத்தில் உங்களுக்கு பிடித்த பாடல் மற்றும் வசனம் எது?

  பதில்: எனக்கு மிகவும் பிடித்த ஊரான கோயம்புத்தூரில் தான் "வீட்டு விஷேசம்" திரைப்படம் முழுவதும் படமாக்கியுள்ளோம். இப்படத்தின் படப்பிடிப்பை நானும், சரவணனும் இணைந்து நடத்தினோம். தனித்தனியாக நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படவில்லை. இப்படத்தில் வரக்கூடிய வசனங்கள் அனைத்தும் உணர்வுபூர்வமாக இருக்கும். நான் எழுதிய வசனங்கள் எப்படி எனக்கு பிடிக்காமல் போகும் என்று சிரித்து கொண்டு பதிலளித்தார். இப்படத்திற்கு கிரிஷ் இசையமைத்துள்ளார்,அவரது இசை மிக அருமையாக வந்துள்ளது. குறிப்பாக 100 கோவில்கள் தேவையில்லை என்ற பாடல் எல்லோருக்கும் பிடிக்கும். அதாவது மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் உள்ள "பார்த்தேன் உயிரின் வழியே" என்பது போன்று இருக்கும். படத்தின் அனைத்து பாடல்களையும் பா.விஜய் எழுதியுள்ளார்.

  பணம் தானாக தேடி வரும்

  பணம் தானாக தேடி வரும்

  கேள்வி: மூக்குத்தி அம்மன் திரைப்படத்திற்கு பின்பு உங்களுக்கு பெண்கள் மத்தியில் ஆதரவு கிடைத்துள்ளது குறித்து நீங்கள் கூற விரும்புவது?

  பதில்: ஒரு காலக்கட்டத்தில் கிரிக்கெட்டை ஆண்கள் மட்டும் பார்த்து வந்தனர். தற்போது குடும்பமே பார்க்கும் அளவுக்கு வந்துள்ளதற்கு நானும் ஒரு காரணம் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய அனைத்து குடும்பங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள். படம் பார்ப்பவர்கள் ஆர்.ஜே.பாலாஜி படமா... நன்றாக இருக்கும் என்று நம்பி வர வேண்டும். மேலும் நாம் நேர்மையாக வேலை செய்தால், பணம் தானாக தேடி வரும் என்பது மட்டும் நிதர்சனமான உண்மை என்றார். இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://youtu.be/aoP7_SC-A2o இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம். நடிகர் ஆர்.ஜே.பாலாஜி இன்னும் நிறைய விஷயங்களை ஸ்வாரசியமாக பேசி உள்ளனர். மறக்காமல் முழு வீடியோவையும் பாருங்கள்.

  English summary
  How and When Should Tal to others? This is the lesson I learnt in 8 Years Says RJ balaji in Exclusive Interview
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X