For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஏ.ஆர்.ரகுமான் கிட்ட இருந்து வந்த ஃபோன்.. மிரண்டு போன நீரஜ் மாதவ்.. மிஸ் பண்ணமாட்டேன்.. வேற லெவல்!

  |

  சென்னை: இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் நடிகர் சிலம்பரசன், நடிகை சித்தி இத்தானி நடிப்பில் வெளிவந்துள்ள படம் வெந்து தணிந்தது காடு. ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

  வெந்து தணிந்தது காடு படத்தில், ஃபேமிலி மேன் வெப் தொடரின் மூலம் ரசிகர்களை கவர்ந்த நடிகர் நீரஜ் மாதவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

  இந்நிலையில் அவர் நமது பிலீம்பீட் சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டியை இங்கு காணலாம்.

  வாரிசு, துணிவு படத்துடன் மோதும் பிரபாஸின் 'ஆதி புருஷ்' ஐமேக்ஸ்-3-D படம்..அயோத்தியில் டீசர் வெளியீடுவாரிசு, துணிவு படத்துடன் மோதும் பிரபாஸின் 'ஆதி புருஷ்' ஐமேக்ஸ்-3-D படம்..அயோத்தியில் டீசர் வெளியீடு

  தமிழ் மீது எனக்கு காதல்

  தமிழ் மீது எனக்கு காதல்

  கேள்வி: வெந்து தணிந்தது காடு படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு எப்படி கிடைத்தது?
  பதில்: என்னுடைய முதல் தமிழ் படம் வெந்து தணிந்தது காடு. எல்லோரும் இப்படத்தை ஏற்றுக் கொண்டது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இப்படத்தில் நான் நடித்தது என்பது பெரிய விஷயம். ரொம்ப நாட்களாக தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்து வந்தது. ஏனென்றால் நான் படித்தது சென்னை எஸ்.ஆர்.எம். கல்லூரியில் தான். சென்னை மீதும், தமிழ் மீதும் எனக்கு எப்பொழுதும் காதல் உண்டு. இன்னும் சொல்லப்போனால் படம் பார்க்க வேண்டும் எண்ணமே சென்னையில் தான் எனக்கு தோன்றியது. இங்கு இருப்பவர்கள் வெள்ளிக்கிழமை தோறும் படத்திற்கு செல்வது வழக்கம். மேலும் கல்லூரியில் படிக்கும்பொழுது எங்களுடைய கலைநிகழ்ச்சிகளுக்கு, நடிகர் கமல் ஹாசன், தனுஷ், விக்ரம், சிலம்பரசன் ஆகியோர் வந்துள்ளனர். நான் நடித்த ஃபேமிலி மேன் வெப் தொடரை பார்த்து விட்டு, இயக்குநர் கௌதம்மேனன் வெந்து தணிந்தது காடு படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்தார் என்றார்.

  இது வழக்கமான ஜி.வி.எம். படம் கிடையாது

  இது வழக்கமான ஜி.வி.எம். படம் கிடையாது

  கேள்வி: வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் உங்கள் கதாபாத்திரம் குறித்து...
  பதில்: என்னுடைய கதாபாத்திரம் குறித்து இயக்குநர் கூறும்போது, உங்களது கதாபாத்திரம் மலையாளி. மலையாளத்தில் மட்டும் பேசினால் போதும். தமிழில் பேச வேண்டாம் என்றார். நான் நினைத்தது ஒன்று. நடந்தது ஒன்று. ஏனென்றால் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் படம் என்றால் அருமையான காதல், அழகாக காட்டக்கூடிய விதம் என்றொரு கற்பனையில் இருந்தேன். அவர் என்னிடம் பேசியபோது தான் தெரிந்தது, வழக்கமான கௌதம் வாசுதேவ் மேனனின் படம் இல்லை என்பதை புரிந்து கொண்டேன். காஸ்ட்யூம் பொறுத்தவரை புரோட்டா கடையில் பணிபுரியும் மக்கள் போடக்கூடிய ஆடை மட்டும் தான். காட்சிகள் எதார்த்தமாக அமைக்கப்பட்டிருக்கும். சென்னை மற்றும் லக்னோ படப்பிடிப்பின்போது மட்டுமே நீங்கள் தமிழில் பேசலாம் என்று கூறினார். மேலும் வெந்து தணிந்தது காடு படத்தில் ஆரம்பம் முதல் கடைசி வரை நானும், சிம்புவும் பயணிப்போம் என்றார்

  மலையாள ரசிகர்கள்

  மலையாள ரசிகர்கள்

  கேள்வி: மலையாள ரசிகர்கள் இப்படத்தை ஏற்றுக் கொண்டார்களா?
  பதில்: மலையாள ரசிகர்கள் எப்பொழுதுமே தமிழ் படம் பார்ப்பார்கள். அவர்கள் வித்தியாசமான படத்தை தான் பார்ப்பார்கள். மசாலான படங்களை பார்க்க மாட்டார்கள். இந்த படமும் வித்தியாசமான கேங்ஸ்டர் படமாகவும், மசாலா இல்லாத படமாகவும் வித்தியாசமாக இருந்ததை மலையாள ரசிகர்கள் ஏற்றுக் கொண்டார்கள். இதுவும் எனக்கு ரொம்ப சந்தோஷம்.

  செல்ஃபி தான் முக்கியம்

  செல்ஃபி தான் முக்கியம்

  கேள்வி: கமல்ஹாசனுடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட அனுபவம் குறித்து....
  பதில்: வெந்து தணிந்தது காடு படத்தின் ஆடியோ வெளியீடு மிக பிரம்மாண்டமாக இருந்தது. அதில் நடிகர் கமல் ஹாசன், நடிகை ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். நடிகர் கமல் ஹாசனை முதன்முதலாக சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை எப்படி நழுவ விடக்கூடாது என்று கருதினேன். யார் தப்பாக எடுத்துக் கொண்டாலும் பரவாயில்லை என்று நினைத்துக் கொண்டு தான் செல்ஃபி எடுத்தேன் என்றார்

  காதலன் படம் தான் மேஜர் ஆல்பம்

  காதலன் படம் தான் மேஜர் ஆல்பம்

  கேள்வி: ஏ.ஆர்.ரகுமான் இசையில் நீங்கள் எழுதிய ராப் பாடல் குறித்து ...
  பதில்: எதுவும் பிளான் செய்தால் நடக்காது. ஆனால் முயற்சி செய்ய வேண்டும். ஏ.ஆர்.ரகுமானின் இசையமைத்த காதலன் படம் தான் என்னுடைய மேஜர் ஆல்பம். அவர் இசையமைத்த படங்களின் பெயரை வைத்து நான் உருவாக்கிய ராப் பாடலை, வெந்து தணிந்தது காடு ஆடியோ வெளியீட்டின்போது மேடையில் பாடினேன். இப்பாடலை மிகவும் ரசித்தார் ஏ.ஆர்.ரகுமான். பிறகு அவருடைய மியூசிக் சூப்பர் வைசர் காசிப் என்னை தொடர்பு கொண்டார். ஏ.ஆர்.ரகுமான் உங்களை பார்க்க வேண்டும் என்கிறார் என்றார். எனக்கு கேட்கவா வேண்டும்? பாடல் வருகிறதோ, இல்லையோ அவருடன் உட்கார்ந்து பேசும் வாய்ப்பு கிடைக்கிறது என்பதற்காகவே விமானத்தை பிடித்து சென்றேன். அப்பொழுது ஏ.ஆர்.ரகுமானிடம் என்னிடம் இப்படத்திற்கு ராப் பாடல் வேண்டும். கெட்ட வார்த்தைகள் பயன்படுத்தக்கூடாது என்றார். எனக்கு படத்தின் கதை தெரிந்த காரணத்தினால் ஒரு மணி நேரத்தில் ஆக்ரோஷமான ராப் பாடலை எழுதி பாடிக் காட்டினேன். எந்த வார்த்தையையும் மாற்றாமல் அப்படியே பயன்படுத்தினார் என்றார். இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://youtu.be/uj-wQjwIZpE இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம்.

  English summary
  I am very shocked and surprised after getting call from AR Rahman Says Neeraj Madhav
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X