twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எங்கேயும் அப்பா பெயரை பயன்படுத்தவில்லை.. நெபாடிசம் பற்றி வெளிப்படையாக பேசிய அருண் விஜய்!

    |

    சென்னை: ஏவிஎம் தயாரிப்பில் இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய், நடிகைகள் வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள வெப் தொடர் தமிழ் ராக்கர்ஸ். இது சோனி லைவ் ஒடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. தற்போது ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

    அப்பா சினிமாவில் இருப்பதால், அவர்கள் பெயரை காப்பாற்ற வேண்டும் என்ற கூடுதல் பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது என்று நடிகர் அருண் விஜய் கூறியுள்ளார்.

    இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் அருண் விஜய் நமது பிலீம்பீட் சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டியை இங்கு காணலாம்.

    நடிச்சதே ஓரிரு படம் தான்..அதுக்குள்ள கோடியில் சம்பளமா?அனன்யா பாண்டேவை கிண்டலடிக்கும் ரசிகர்கள்!நடிச்சதே ஓரிரு படம் தான்..அதுக்குள்ள கோடியில் சம்பளமா?அனன்யா பாண்டேவை கிண்டலடிக்கும் ரசிகர்கள்!

    கவனமாக நடிக்கிறேன்

    கவனமாக நடிக்கிறேன்

    கேள்வி: சில படங்களில் உங்கள் அப்பாவின் சாயல் தெரிகிறதே?

    பதில்: கிராமத்து கதாபாத்திரங்களில் நடிகர் சிவாஜி, கமலஹாசன், என் அப்பா விஜயகுமார் ஆகியோர் பல படங்கள் நடித்து விட்டனர். நாம் எவ்வளவு தான் அப்பாவின் சாயல் வரக்கூடாது என்று கவனமாக நடித்தாலும் கூட, ஒரு சில நேரங்களில் அது வந்து விடுகிறது. ஏனென்றால் நாம் நடிக்கக்கூடிய அனைத்து கதாபாத்திரங்களையும் அப்பா ஏற்கனவே செய்து விட்டார். யானை படத்தில் நான் பேசக்கூடிய வசனம், அப்பா பேசுவது போன்று இருப்பதாக சிலர் கூறுகிறார்கள். இதை கேட்கும்பொழுது அப்பாவும், நானும் பெருமைக் கொள்கிறோம். நான் முதன்முதலாக நடிக்க வந்தபோது, அப்பாவோட சாயல் வந்திருந்தால் அது அவ்வளவு நல்லா இருந்திருக்காது என்றார்.

    கூடுதல் பொறுப்பு

    கூடுதல் பொறுப்பு

    கேள்வி: இயக்குநர் சங்கரின் மகள் அதிதி என்பதால், அவரை எல்லோரும் வரவேற்கிறார்கள் என்று கருத்து நிலவுகிறது. உங்கள் அப்பாவும் சினிமாவில் இருப்பதால் இந்த கருத்து குறித்து நீங்கள் கூற விரும்புவது?

    பதில்: என்னுடைய சினிமாப்பயணத்தை மக்கள் நன்கு அறிவார்கள். அப்பாவின் பெயரை எந்த இடத்திலும் நான் பயன்படுத்தியது கிடையாது. நான் நடிக்கும் படத்தின் கதையை எப்போதும் அப்பா தேர்வு செய்வது கிடையாது. அப்பா என்னிடம் கூறும்போது, நீ தான் மேலே வர வேண்டும் என்று கூறினார். யாராக இருந்தாலும் அவர்களின் திறமையால் தான் சினிமாத்துறையில் நிலைத்து நிற்க முடியும். நமக்கு திறமை இல்லையென்றால் நாம் ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கமுடியாது. என்ன தான் அப்பா சினிமாவில் இருந்தாலும், நமது நடிப்பு ரசிகர்களுக்கு பிடித்தால் மட்டுமே, நமது அடுத்த படத்தை ரசிகர்கள் பார்க்க வருவார்கள். இன்னும் சொல்லப்போனால் அப்பா சினிமாவில் இருப்பதால், அவர்கள் பெயரை காப்பாற்ற வேண்டும் என்ற கூடுதல் பொறுப்பு நமக்கு வருகிறது. அதனால் ஒவ்வொரு விஷயத்தை பார்த்து பார்த்து செய்கிறேன் என்றார். மேலும் அவர் கூறுகையில், நடிகை அதிதி சங்கருக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவருக்கு திறமை இருப்பதால் தான் ரசிகர்கள் அவரை வரவேற்கிறார்கள் என்றார்.

    இரு தரப்பு விவாதங்கள்

    இரு தரப்பு விவாதங்கள்

    கேள்வி: தேசப்பற்று குறித்து நீங்கள் கூற விரும்புவது?

    பதில்: வீட்டில் கொடியேற்றினால் மட்டும் தான் இந்தியா மீது தேசப்பற்றோடு இருக்கிறேன் என்ற அர்த்தமில்லை. நான் ஒவ்வொரு முறையும் இந்தியாவைவிட்டு வெளிநாடு செல்லும்பொழுது, நான் ஒரு இந்தியன் என்பதில் எப்பொழுதும் பெருமை கொள்வேன். பள்ளி நாட்களில் தேசிய கொடி ஏற்றுவதும், அணிவகுப்பு மற்றும் மரியாதை செலுத்துவதும், தற்போது சுதந்திரத்தினத்தன்று நமது நெஞ்சில் தேசியகொடியை குத்துவது எப்பொழுதும் நமக்கு பெருமை தான். தேசப்பற்று மிகுந்த படமான பார்டர் படத்தில் நடிப்பதற்கு என்னை இயக்குநர் அறிவழகன் அணுகியபோது, ரொம்ப பெருமையாக இருந்தது. இந்த படத்தில் பார்டரில் ஏற்படுகின்ற பிரச்சனைகள் குறித்து இப்படத்தில் பேசியுள்ளோம். ஒரு பிரச்சனை என்றால் இரு தரப்பு விவாதங்களையும், நியாயங்களையும் காட்டியுள்ளோம். படத்தில் கடைசியாக வரக்கூடிய தேசப்பற்று மிகுந்த கிளைமாக்ஸ் காட்சி அனைவருக்கும் பிடிக்கும் என்றார்.

    பார்டர் திரைப்படம்

    பார்டர் திரைப்படம்

    கேள்வி: உங்களுடைய அடுத்த படம் எது?

    பதில்: படத்தின் ஸ்கிரிப்ட் கேட்கும்போது, இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெறும் என்று நமக்கு தோன்றினால் மட்டுமே, அந்த படம் நல்லா வரும். ஜனவரியில் இருந்து கதை கேட்டு வருகிறேன். பார்டர் திரைப்படம் விரைவில் திரைக்கு வருகிறது. கூடிய விரைவில் அடுத்தபடம் குறித்த அறிவிப்பை வெளியிடுவேன் என்றார்.

    அனைத்து புகழும் அம்மாவுக்கே

    அனைத்து புகழும் அம்மாவுக்கே

    கேள்வி: தலக்கோனா பகுதியில் நீங்கள் பிரியாணி சமைத்துள்ளீர்கள்? அஜித் ஸ்டைலை பின்பற்றுகிறீர்களே?

    பதில்: அப்படி ஒன்றும் இல்லை. லாக்டவுன் போது அம்மாவிடம் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். அதில் ஒன்று தான் பிரியாணி. சந்தோஷத்தை வெளிப்படுத்துவதற்காக எங்களுடைய குழுவுக்கு தலக்கோனத்தில் பிரியாணி சமைத்து கொடுத்தேன். இதன் புகழ் அனைத்தும் எனது அம்மாவை சென்றடையும் என்றார்.

    படிப்பு முக்கியம்

    கேள்வி: உங்கள் மகன் ஆர்னவ்வின் அடுத்த படம் எது?

    பதில்: ஓ மை டாக் படத்தில் எனது மகன் ஆர்னவ் நடிக்க வைக்க என்ன காரணம் என்றால், மூன்று தலைமுறைகள் யாரும் ஒரே படத்தில் சேர்ந்து நடித்தது கிடையாது. எனது மகனுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும்போது, அதை தவறவிட வேண்டாம் என்ற எண்ணத்தில் தான் நடிக்க வைத்தேன். அப்படத்தில் நானும், என் அப்பா விஜயகுமார் மற்றும் எனது மகன் ஆர்னவ் நடித்திருந்தோம். அப்படத்தில் நடிக்கும்போது அவன் ஒரு இன்னஸன்ட். அவன் அப்படியே இருக்கட்டும். முதலில் அவன் படிக்க வேண்டும். பிறகு நடிப்பது குறித்து யோசிக்கலாம். இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://youtu.be/WGSoXpKPB2o இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம்.

    English summary
    I did not use father's name anywhere.. Arun Vijay openly spoke about nepotism
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X