»   »  நிம்மதியான பெண் நான்-கேத்ரீனா

நிம்மதியான பெண் நான்-கேத்ரீனா

Subscribe to Oneindia Tamil
Click here for more images

கேத்ரீனா கைப், அளவுக்கதிகமான இதயங்களை கொள்ளையடித்தவர். சினிமாவில் நடிக்க வரும் பொழுதுபோக்கிற்காக மாடலிங் செய்து கொண்டிருந்தவர் பூம் என்ற இந்தி படத்தின் மூலம் நடிகையானவர்.

கவர்ச்சியும் கிளாமருமே இவரது தாரக மந்திரமாக இருந்தாலும் நல்ல மனசும் கொண்டவராக இருக்கிறார் கைப். ஒளிவு மறைவில்லாமல் உண்மையைப் பேசுகிறார்.

கந்தசாமியில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்து அதன் மூலம் தமிழில் எண்ட்ரி கொடுக்க இருந்தவருக்கு அந்த வாய்ப்பு போய்விட்டாலும், வாய்ப்பு கிடைத்தால் தமிழில் நடிக்கத் தயாராகவே இருக்கிறேன் என்கிறார்.

எனக்கு ஊர் சுற்றுவது என்றால் ரொம்பவும் பிடிக்கும். மாடலிங்கைப் போலத்தான் சினிமா என்று நினைத்து நுழைந்தேன். ஆனால், இதில் கிடைத்த பணமும் புகழும் யாருக்கும் போதையைத் தந்துவிடும்.

சினிமாவுக்கு வந்ததால் கிடைக்கும் பலன்களில் பணம், புகழைவிட நான் மிகவும் விரும்புவது ஊர் சுற்றுவதைத் தான். சூட்டிங்கிற்காக ஊர் ஊராக சுற்ற நிறைய வாய்ப்பு கிடைக்கிறது. எத்தனை நாடுகள், எத்தனை விதமான மனிதர்கள்.

நம் நாட்டிலேயே எத்தனை விதமான கலாச்சாரங்கள், பழக்க வழக்கங்கள். இதையெல்லாம் நான் அறிய உதவியாய் இருந்த சினிமாவுக்கு கோடி நன்றி.

உண்மையைச் சொன்னால், எனக்கு தேவைக்கு அதிகமாக பணமும் கிடைக்கிறது.

எனது கிளாமரான தோற்றம், கவர்ச்சி காட்ட நான் தயக்கம் காட்டாதது ஆகிய காரணங்களால் தான் படங்களில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைக்கிறது என்பதை நான் மறுக்கவில்லை.

ஆனாலும் அதிக தொல்லை-நெருக்கடி இல்லாத படங்களை தேர்ந்தெடுத்து தான் நடித்து வருகிறேன். என்னால் எந்த தயாரிப்பாளருக்கும் பிரச்சனை வரக்கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருக்கிறேன்.

எந்த பாதிப்புகளுக்கும் இடம் கொடுக்காமல், கடவுள் கொடுத்த வாழ்க்கையை நிம்மதியாக அனுபவிக்கும் பெண் நான் என்கிறார் கேத்ரீனா கைப்.

Read more about: katrinakaif

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil