For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  கல்யாணம் செய்ற ஐடியாவே இல்ல.. பொண்ணுங்கள பாத்தாலே பயமா இருக்கு.. நடிகர் விஷ்ணு விஜய் சொன்ன சீக்ரெட்!

  |

  சென்னை: நடிகர் விஷ்ணு விஜய், நடிகை ரக்ஷிதா ஆகியோர் நடிப்பில் கலர்ஸ் தமிழில் "இது சொல்ல மறந்த கதை" என்ற தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

  தனக்கு வரும் பட வாய்ப்புகளை பற்றியும், திரைத்துறையில் தன்னுடைய அனுபவத்தையும் பகிர்ந்துள்ளார் நடிகர் விஷ்ணு விஜய்.

  இது சொல்ல மறந்த கதை தொடரில் நடித்து வரும் விஷ்ணு விஜய் நமது பிலீம்பீட் சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டியை இங்கு காணலாம்.

  “வேறு சில குற்றங்களும்... ஒரு கலையும்”: ஜிகர்தண்டா 2 பணிகளை தொடங்கிய கார்த்திக் சுப்புராஜ்“வேறு சில குற்றங்களும்... ஒரு கலையும்”: ஜிகர்தண்டா 2 பணிகளை தொடங்கிய கார்த்திக் சுப்புராஜ்

  நிதானமாக மேல்நோக்கி வருகிறேன்

  நிதானமாக மேல்நோக்கி வருகிறேன்

  கேள்வி: உங்களுடைய அடுத்த இலக்கு என்ன?

  பதில்: ஆபீஸ் தொடருக்கு பிறகு, ஐந்து திரைப்படங்களில் நடித்துள்ளேன். ஆனால் அந்த திரைப்படங்கள் எனக்கு சரியாக கைகொடுக்கவில்லை. சத்யாவிற்கு பிறகு இரண்டாவது வாய்ப்பு அமைந்துள்ளது. அந்த வாய்ப்பை எவ்வாறு பயன்படுத்துவது? எப்படி வித்தியாசமாக நடிப்பது? எந்த மாதிரியான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுப்பது போன்றவை குறித்து யோசித்து வருகிறேன். பைப்லைன் படமும் கையில் உள்ளது. பிரதீப், ரமணன், தமிழ்ராஜ் ஆகியோர் ஒவ்வொரு கட்டத்திலும் என்னை மேல்நோக்கி தூக்கி விடுகிறார்கள். அதுபோல நானும் கீழிருந்து பொறுமையாக, நிதானமாக வருகிறேன் என்றார்.

  தீராத அன்பு

  தீராத அன்பு

  கேள்வி: உங்களை ஊக்குவிக்கும் ரசிகைகளின் பெயர்களை கூறுங்கள்?

  பதில்: ரசிகர்கள் என் மீது கொண்டுள்ள அன்பு என்பது தீராத அன்பாகும். சத்யா தொடர் மூலம் எனக்கு நிறைய ரசிகர்கள் உருவாகியுள்ளனர். கடந்த வருடம் கூட என் பிறந்த நாளின்போது கூட எனது ரசிகர்கள் எனக்கு அனுப்பிய பரிசு பொருட்கள் ஏராளம். சௌமியா, வித்யா உள்பட பல ரசிகர்கள் என் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வருகின்றனர். மேலும் நான் மனம் விட்டு பேசும் நண்பர்கள் ரேஞ்சல், அக்ஷயா உள்ளிட்டோர் இருக்கின்றனர் என்றார்.

  ஆர்வம் குறைகிறது

  ஆர்வம் குறைகிறது

  கேள்வி: ஒடிடி தளத்திற்கு நடிப்பதற்கு வாய்ப்புகள் எதுவும் வருகிறதா? இல்லை தொலைக்காட்சி தொடர்களிலேயே தொடர்ந்து நடிப்பீர்களா?

  பதில்: வாய்ப்புகள் தேடி வருகிறது. சில பேர் தொலைக்காட்சி தொடரை பெரிய விஷயமாக பார்ப்பதில்லை. முதலில் கதை கூறும் நபர்கள், ஜாலியான கேரக்டர் என்று கூறி 100 எபிசோடு முடிந்தபிறகு, சம்பந்தமே இல்லாமல் கதையை விட்டு விலகி வேறொரு கதைக்கு செல்கிறார்கள். அப்போது தான் நமக்கு ஆர்வம் குறைகிறது. 100 எபிசோடில் நாம் எவ்வாறு நடித்தோம், அப்போது நமது பாடி லாக்வேஜை எப்படியிருந்தது? திடீரென்று ஏன் மாற்றுகிறீர்கள் என்ற எண்ணம் தோன்றும்.

  நானே டப்பிங் பேசுவேன்

  நானே டப்பிங் பேசுவேன்

  கேள்வி: நீங்கள் நடிக்கும் தொடர்களில் உங்களுக்கு யார் டப்பிங் கொடுக்கிறார்கள்?

  பதில்: கனா காணும் காலங்கள் தொடர் முதல் சத்யா வரை நான் நடிக்கும் தொடர்களில் நானே தான் டப்பிங் கொடுத்து வந்தேன். இது சொல்ல மறந்த கதை தொடருக்கு வெளியே இருந்து டப்பிங் செய்வதாக தெரிவித்தார்கள். இது அவர்களுடைய முடிவு. என்னை பொறுத்தவரை நடிப்பு 50 சதவீதம், டப்பிங்பேசுவது 50%. கடினமான உழைப்பை மட்டும் கொடுக்க வேண்டும் என்பதாகும். நான் எப்போது வெளிப்படையாக பேசுவேன். ஜால்ரா அடிக்க மாட்டேன். இதனால் நிறைய எதிர்ப்புகளை சந்தித்துக் கொண்டிருக்கிறேன் என்றார்.

  சரியான பாதை

  சரியான பாதை

  கேள்வி: இயக்குநர் நடராஜ் குறித்து நீங்கள் கூற விரும்புவது?

  பதில்: இயக்குநர் நடராஜ் உடன் ஏற்கனவே சத்யா சீசன் 1இல் இணைந்து பணியாற்றி உள்ளேன். இது சொல்ல மறந்த கதை தொடர் முதலில் புரியாமலேயே சென்று கொண்டிருந்தது. இயக்குநர் நடராஜ் வந்த பிறகு சரியான பாதைக்கு செல்கிறது. ஏனென்றால் அவர் அனுபவம் மிகுந்தவர். நமது கருத்துகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் நல்ல மனிதர் என்றார்.

  பயமாக இருக்கிறது

  கேள்வி: நீங்கள் எப்போது திருமணம் செய்து கொள்ள போகிறீர்கள்?

  பதில்: பெண்களை பார்த்தால் பயமாக இருக்கிறது. திருமணம் செய்து கொள்ளும் எண்ணமே எனக்கு இல்லை. ஐடி துறையில் வேலை பார்க்கும் பெண் ஒரு நடிகரை திருமணம் செய்து கொள்ளும்போது புரிதல் இருக்க வேண்டும். அவ்வாறு புரிதல் இருந்தால் மட்டுமே வாழ்க்கை நன்றாக இருக்கும். எனது சக நடிகர் ராஜ்குமார் திருமணம் செய்து கொண்டு படும் பாட்டை நான் நேரடியாக பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவர் மனைவி தினமும் காலையில் வீடியோ காலில் வந்து பேசுவார்கள். அப்போது ராஜ்குமார் முகபாவனை பார்த்தால் எங்கள் எல்லோருக்கும் சிரிப்பே வந்து விடும். அவர் மனைவி அவரை கண்காணிப்பதை வழக்கமாக வைத்துள்ளார் என்றார் ஜாலியாக. இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://www.youtube.com/watch?v=BSLmpKiwu44 இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம்.

  English summary
  I have no idea to get married and afraid to see girls Actor Vishnu Vijay's Shares the secret
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X