»   »  தமிழுக்கு இலியானா நோ

தமிழுக்கு இலியானா நோ

Subscribe to Oneindia Tamil

எனது சேவை தெலுங்கு திரையுலகுக்கு இப்போதைக்கு ரொம்பவே தேவை.அதனால்தான் தமிழ் பக்கம் தலை வைத்துப் படுக்கவில்லை என்கிறார் இஞ்சிஇடுப்பழகி இலியானா.

தெலுங்கில் இலியானா இன்னும் நிறையப் படங்களில் நடிக்கவில்லை. ஆனாலும்போக்கிரி படம் அவருக்கு தெலுங்கில் பெரிய டிமாண்டை ஏற்படுத்தியுள்ளது.இலியானாவைச் சுற்றிலும் பெட்டிகளுடன் ரெட்டிகள் நிர்த்தனமாடி வருகின்றனர்.

அந்த அளவுக்கு இலியானாவுக்கு மார்க்கெட் ஏற்படக் காரணம் அவரதுகொடியிடையும், மின்னல் ஆட்டமும், துள்ள வைக்கும் இளமையும்,எல்லாவற்றையும் விட அவர் தரும் மிக தாராளமான ஒத்துழைப்பும் தான்.

இலியானாவின் டான்ஸுக்கு ரொங்கிப் போய்க் கிடக்கும் ரசிகர் பட்டாளம் மிகப்பெரியது.

இலியானா இருந்தால் படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் மத்தியில் கடும்போட்டியாம். இதனால்தான் இலியானாவை வைத்து படம் எடுக்க பாய்ந்துகொண்டிருக்கிறார்கள் தெலுங்குப் படத் தயாரிப்பாளர்கள்.

தெலுங்கில் தனக்கு ஏற்பட்டிருக்கும் டிமாண்டை புரிந்து கொண்டுதான் போக்கிரியின்தமிழ் பதிப்பில் விஜய்யுடன் நடிக்க வந்த வாய்ப்பைக் கூட ஸாரி சொல்லி நிராகரித்துவிட்டார் இலியானா.

விஜய் கூட நடிக்க மாட்டேன்னுட்டீங்களேன்னு அவரிடம் போய்க் கேட்டால்,போக்கிரி தெலுங்கில் மிகப் பெரிய ஹிட். இதை நானே எதிர்பார்க்கவில்லை. இந்தஹிட்டால் எனக்கு அங்கு நிறையப் படங்கள் வந்து விட்டன.

நானும் சில படங்களை ஒத்துக் கொண்டு விட்டதால் விஜய்யுடன் நடிக்க வந்தவாய்ப்பை ஏற்க முடியாமல் போய் விட்டது. மேலும், ஏற்கனவே செய்த பாத்திரத்தைமீண்டும் செய்ய எனக்கு விருப்பம் இல்லை. அதனால்தான் மாட்டேன் என்று சொல்லிவிட்டேன்.

இப்ப நான் ரொம்ப பிசி. ஷிப்ட் போட்டு திறமை காட்டி வருகிறேன். தெலுங்கில்நிறையப் படங்கள் தயாரிக்கிறார்கள். இதனால் சொன்ன நேரத்துக்கு படத்தைமுடித்துக் கொடுக்க வேண்டும். நான் கால்ஷீட் சொதப்பல் எல்லாம் பண்ணும் பார்ட்டிகிடையாது.

எனது சேவை இங்கு ரொம்பவே தேவைப்படுகிறது. நான் இருந்தால் படம் நன்குவியாபாராகும் என்கிறார்கள். நாம நல்லா இருக்கணும்னா நாம சார்ந்த துறையும்நல்லா இருக்கணும் இல்லியா? எனவே இப்போதைக்கு தெலுங்கில்தான் நான் முழுக்கவனத்தையும் செலுத்துகிறேன். அதனால்தான் மற்ற படங்களுக்கு இப்போது ஆர்வம்காட்டவில்லை என்கிறார் இலியானா.

இலியானா விஜய்யுடன் முடியாது என்று கூறி விட்டாலும் கூட கேடி மூலம்தமிழுக்கும் வந்து போய் விட்டார். படமும் சுமாராக ஓடி விடவே, இலியானாவின்கால்ஷீட் கேட்டு தமிழ்ப் படத் தயாரிப்பாளர்களும் தேவுடு காத்துக் கொண்டுள்ளனர்.

வருவார், வருவார், பயப்படாம இருங்கோ..

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil