twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஹாலிவுட்லகூட இந்த அளவுக்கு ஒரு பியூர் அட்வெஞ்சர் படம் வந்திருக்காது!- இந்திரஜித் இயக்குநர் கலாபிரபு

    By Shankar
    |

    கலாபிரபு... தமிழ் சினிமாவின் தலையாய தயாரிப்பாளரின் மகன். நினைத்திருந்தால் முதலாளியாகவே இருந்திருக்கலாம். ஆனால் பிடிவாதமாக இயக்குநர் துறையைத் தேர்ந்தெடுத்து அதில் சாதித்துக் காட்டும் முனைப்புடன் இரண்டாவது படத்தை இயக்கி முடித்து விட்டார்.

    படம் நாளை வெளியாகிறது. அதற்கு முன் கலாபிரபுவிடம் பேசியதில் இருந்து...

    இந்திரஜித் ட்ரெய்லர் பார்த்தாலே பெரிய பட்ஜெட்னு தெரியுதே?

    Indrajith maker Kalaprabhu Exclusive interview

    என்ன கேட்க வர்றீங்கன்னு புரியுது. இந்தக் கதை எழுதும்போதே இவ்வளவு செலவு ஆகும்னு தெரியும். அட்வென்சர் படம்கறப்போ அந்த செலவு நியாயமானதா இருக்கும். டெக்னிக்கலா நிறைய விஷயங்கள் தேவைப்பட்டுச்சு. டெய்லி மூணு, நாலு கேமரா செட்டப்ல ஷூட் பண்ணினோம். ஆனா ஒரு படத்தோட வெற்றியை பட்ஜெட் மட்டுமே நிர்ணயிக்காதுனு ஒரு இயக்குநரா நம்புறேன். அதனால ஸ்க்ரிப்ட்லயும் மேக்கிங்லயும் காம்ப்ரமைஸ் ஆகலை. நானே ஒரு காடுகளின் காதலன்கறதால எனக்கு இந்த சப்ஜெக்ட் ஈசியா இருந்தது. இதுல ஹீரோ கேரக்டர் ட்ராவல் பண்ணதுல முக்கால்வாசி நான் ஏற்கனவே பண்ணியிருக்கேன். வேலையா பண்ணாம புடிச்ச விஷயத்தை பண்ற மாதிரி பண்ணேன்.

    கதை உருவாக்கம், மேக்கிங் பத்தி?

    Indrajith maker Kalaprabhu Exclusive interview

    முதல்ல ஆக்‌ஷன் ப்ளஸ் ட்ராவல் அட்வெஞ்சர்னு ஒரு லைன் பிடிச்சேன். அந்த ஐடியாவை டெவலப் பண்ணும்போது ஒரு இண்ட்ரெஸ்டிங் ஸ்க்ரிப்ட் வந்துச்சு. ஹாலிவுட்லயே இந்த அளவுக்கு ஒரு பியூர் அட்வெஞ்சர் படம் வர்றது இல்லைனு சொல்லலாம். அதே மாதிரி அட்வெஞ்சர்னாலே நமக்கு தோணுற க்ளிஷேக்கள் எதுவும் இதுல இருக்காம பார்த்துக்கிட்டேன். முக்கியமா வழிதெரியாம மாட்டிக்கிறது, புதைகுழி, கண்ணி வெடி போன்ற எதையுமே தொடாம ஒரு அட்வெஞ்சர் ஸ்க்ரிப்ட் பண்றது பெரிய சவாலா இருந்தது. அதனால தான் ஹாலிவுட் பட க்ளிஷேக்கள் கூட இருக்காதுனு சவாலா சொல்றேன்.

    இப்ப ஓகே... ஆனா நீங்க கமிட் பண்ணப்ப கௌதம் கார்த்தி கடல் கௌதமா தான் இருந்தாரு... அப்புறம் எப்படி இந்த கேரக்டருக்கு...?

    ஆமா, நான் கமிட் பண்ணப்ப கடல் மட்டும் முடிச்சுட்டு ஸ்கூல் பையன் மாதிரி இருந்தாரு. பார்த்தாலே கொஞ்சுற மாதிரி இருக்கற ஒரு சாக்லேட் பையனைத்தான் கொண்டு வந்தேன். என் கதைக்கு இமேஜே இல்லாத ஒரு ஹீரோ தான் தேவைப்பட்டாரு. மக்கள் மத்தியில ஏற்கனவே நல்லா ரீச் ஆன ஒருத்தர்ன்னா கேரக்டரோட நம்பகத்தன்மை போயிடுமேன்னு பயந்தேன். ஆனா நான் நினைச்சதை விட பெட்டர் ஆப்ஷனா கௌதம் இருந்தாரு.

    Indrajith maker Kalaprabhu Exclusive interview

    கௌதம் கார்த்திக்குக்கு செம டஃப் கொடுக்கற வில்லனா சுதான்சு பாண்டே பண்ணியிருக்கார். செம ஸ்ட்ராங்க் கேரக்டர். இவருக்கு தமிழ்ல நல்ல எதிர்காலம் இருக்கு. மத்த ஆர்ட்டிஸ்ட்களும் தங்களோட சிறந்த பங்களிப்பை கொடுத்துருக்காங்க.

    சக்கரகட்டிக்கு பிறகு ஏன் இந்த இடைவெளி?

    இது நானா எடுத்துகிட்ட கேப் தான். இந்த இடைவெளில நிறைய விஷயங்கள் கத்துகிட்டேன்.

    அப்பாவே தயாரிப்பாளர்ன்னா சுதந்திரமா நெருக்கடியா?

    நெருக்கடிதான். மற்ற இயக்குநர்கள்னா ஷூட்டிங் முடிஞ்சதும் வீட்டுக்குப் போயிடலாம். ஆனா நான் வீட்டுக்கு வந்தாலும் அங்கே என் தயாரிப்பாளர்தான் இருபபர். அவர் முகத்துலேயே முழிச்சுட்டு தான் கிளம்பணும். அப்ப நெருக்கடி இருக்காதா? ஆனா அப்பா மற்ற இயக்குநர்களுக்கு என்ன சுதந்திரம் கொடுப்பாரோ அதை அப்படியே எனக்கும் கொடுத்தாரு. அப்பா கேட்கிற அளவுக்கு பண்ணிடக்கூடாதுனு பயந்துட்டே பண்ணினதால தான் படம் நல்லா வந்துருக்கு.

    கேமரா, இசை?

    Indrajith maker Kalaprabhu Exclusive interview

    ராசாமதி என்கூட சக்கரகட்டிலேருந்து ட்ராவல் பண்ற நண்பன். என்கூட எப்பவும் இருந்து என்னை முழுமையா நம்புறவரு. கலாபிரபு பண்ணினா அது கரெக்டா இருக்கும்னு அப்படி ஒரு நம்பிக்கை. ஸோ நாம நம்ம வேலையை பார்க்கலாம். ஷூட்டிங்ல தாமதம் ஆகாது. இசையமைப்பாளர் கேபி க்கு இது முதல் படம் மாதிரியே தெரியாது. பாடல்கள் மாதிரியே பின்னணி இசையும் சிறப்பா பண்ணியிருக்கார்.

    English summary
    Indrajith movie director Kalaprabhu's Exclusive interview about the movie and making.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X