எம்.எஸ்.வி, டி.எம்.எஸ்க்கு எல்லாம் ரொம்ப நெருக்கம்.. கலைமாமணி வாமனனின் பிரத்யேக பேட்டி!

சென்னை: ரீவைண்ட் ராஜா நிகழ்ச்சிக்கு சரியான பொருத்தமுள்ள ஆள் என்றால் அது திரை மேதை வாமனன் சார் தான்.

மறைந்த தமிழக முதல்வர்களான எம்.ஜி.ஆர், மு. கருணாநிதி, ஜெயலலிதா என அனைவரது அன்பையும் பெற்றவர் எழுத்தாளர் வாமனன்.

திரை இசைக் கலைஞர்களின் வாழ்க்கை குறித்தும் அவர்கள் படைப்பு குறித்தும் ஏகப்பட்ட புத்தகங்களை எழுதி உள்ளார்.

கலைமாமணி வாமனன்

கலைமாமணி வாமனன்

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா இவருக்கு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்துள்ளார். இத்தனை பெருமைகளுக்கும் சொந்தக்காரரான வாமனன் நமது ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட்டின் ரீவைண்ட் ராஜா நிகழ்ச்சிக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.

எம்.எஸ்.விஸ்வநாதன் பற்றி

மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் பற்றியும் அவர் இசையமைத்த பாடல்கள் குறித்தும் ஏகப்பட்ட கட்டுரைகளையும் புத்தகங்களையும் அவர் கூடவே பயணித்து எழுதி உள்ளார் வாமனன். சில பாடல்கள்களையும் அவரது இசைக்காக எழுதி கொடுத்துள்ளார். விஸ்வநாதனன் ராமமூர்த்தியை கொண்டாடும் விதத்தில் மெல்லிசை மன்னர்கள் பாட்டு பயணம் எனும் புத்தகத்தில் அவர்களை பற்றிய முழு விபரங்களையும் எழுதிய பெருமை தனக்கு கிடைத்தது என பேசியுள்ளார்.

டி.எம். செளந்தரராஜன்

எம்.எஸ். விஸ்வநாதன் இசையிலேயே ஒரு சமயம் டி.எம். செளந்தரராஜன் பாட மறுத்த சுவாரஸ்ய தகவலையும் இந்த பேட்டியில் அம்பலப்படுத்தி உள்ளார் வாமனன். மேலும், எம்.எஸ்.விக்கும் டி.எம்.எஸ்க்கும் இடையே இருந்த அழகான நட்பு பற்றியும் அவர்களை போன்ற அவதார புருஷர்கள் இனியும் பிறப்பார்களா என்பது சந்தேகம் எனவும் கூறியுள்ளார்.

விரைவாக மெட்டமைப்பதில் வல்லவர்

இசையமைப்பாளர் கே.வி. மகாதேவன் உடனான தன்னுடைய உறவு குறித்தும் இந்த பேட்டியில் மனம் திறந்துள்ளார் வாமனன். விரைவாக மெட்டமைப்பதில் அவர் மிகவும் வல்லவர் என்றும் அருமையான எண்ணற்ற இசைப் பாடல்களை தமிழ் உலகிற்கு இவர்கள் கொடுத்துள்ளார் என்றும் பேசியுள்ள பேட்டியை மிஸ் பண்ணாம பாருங்க!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X