»   »  பாகவதரை வாரும் விவேக்!

பாகவதரை வாரும் விவேக்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
Click here for more images
இந்தக் காலத்தில் தியாகராஜ பாகவதர் போல நடித்தால் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று நடிகர் விவேக் கூறியுள்ளார்.

விவேக்குடன் பல படங்களில் இணைந்து நடித்துள்ளவர் ராமச்சந்திரன். இவரை 'கிளி' ராமச்சந்திரன் என்று கூறினால்தான் தெரியும். கிளி மூக்கு போல இவரது மூக்கு இருப்பதால் விவேக்தான் இந்தப் பெயரையே வைத்தார்.

இவரது திருமணம் பெரம்பலூர் மாவட்டம் அரியலூரில் நடந்தது. இதில் விவேக் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நான் கதாநாயகனாக நடித்த சொல்லியடிப்பேன் படம் முழுமையாக முடிந்து விட்டது. ஆனால் எப்போது வரும் என்று தெரியவில்லை. ஆனால் விரைவில் வெளி வரும் என நம்புகிறேன். இந்தப் படத்திற்குப் பிறகு ஹீரோவாக நடிக்க நிறைய வாய்ப்புகள் வரும் என நினைக்கிறேன்.

எனது படத்தை அனைத்து தரப்பு மக்களும் பார்ப்பதால், பல்வேறு சீர்திருத்த கருத்துக்களை கசப்பு மருந்தில் இனிப்பு தடவி தருவது போல கொடுக்கிறேன்.

நான் ஆபாசமாக பேசி நடிப்பதில்லை. ஆபாச கருத்துகளை கூறி நகைச்சுவை செய்வதில்லை.

இந்தக் காலத்தில் தியாகராஜ பாகவதர் போல் நடித்தால் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். காலத்திற்கு ஏற்ப மாறிக் கொள்ள வேண்டும். அப்போது தான் மக்கள் ரசிப்பார்கள்.

பல படங்களில் முத்தக் காட்சி உள்ளது. ஆனால் அவற்றுக்கென்று ஒரு எல்லை உண்டு. திருவள்ளூவர் கூட திருக்குறளில் காமத்துப்பாலை சேர்த்து தான் எழுதியுள்ளார்.

டாக்டர் அப்துல் கலாம், பெரியாரின் கருத்துகளை கூறி நடிப்பதால் தான் என்னை மக்கள் சின்ன கலைவாணர் என்கின்றனர்.

தற்போது ஆயுதம் செய்வோம், சண்டை, பெருமாள், கந்தசாமி, தூண்டில் பொம்மலாட்டம் போன்ற படங்களில் நடித்து வருகிறேன் என்றார் விவேக்.

Read more about: vivek

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil