»   »  சந்திப்போமா?

சந்திப்போமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

அந்த மஹா அழகி சென்னை வந்த போது சென்னையின் வெயில் ஒதுங்கிக்கொண்-ட-து. வானம் திறந்-து லேசாக தூறியது.

சாலையில் ஆங்காங்கே டிராபிக் ஜாம். அது காரோ, .யமஹாவோ,ஆட்டோ-மேட்டிக்காக -பிரேக் அடித்-த-ன.

தற்செயலாகவே, அந்த அழகி (காரில்தான்) சாலையைக்கடந்து செல்ல. சகலமும் ஒருமுறை குதூகலமாகியது. பார்ப்பதற்கு மட்டுமல்ல, அவரின் பெயரும் கூடகுளிர்ச்சியாகவே இருக்கிறது. "ஐஸ்"வர்யா ராய்! இண்டியா இன்போ.காம் முக்காகஐஸ்வர்யா ராய் அளித்த ஸ்பெஷலான பேட்டி -அ-ளித்-தார்

விளம்பர மாடலாக நம்பர் ஒண்ணாக இருந்த ஐஸ்வர்யா; உலக அழகியான பிறகு,சினிமா உலகிற்கு, அழைத்துவரப்பட்டார். இவரை முதலில் நடிக்க அழைத்தவர்டைரக்டர் மணிரத்னம் என்பதை மறக்காமல் குறிப்பிடு-கி-றார்.

ஷங்கர் இயக்கத்தில் ஜீன்ஸ் படத்தில் பிரசாந்த் ஜோடியாக நடித்து தென்னிந்தியமொழியில் பிரபலமாகிவிட்ட, ஐஸ்வர்யாராய் பற்றி, கண்டுகொண்டேன்,கண்டுகொண்டேன் தயாரிப்பாளர் எஸ்.தாணு குறிப்பிடும் போது, தான் உலக அழகிஎன்றோ, பிரபல நட்சத்திரம் என்று யாரும் நினைத்துவிடக் கூடாது என்பதில் மிகவும்கவனமாக இருந்தார்.

இவருக்கு ஒ-துக்-கும் அறையில் ஏஸி உள்ளதா, ஃபேன் இருக்கிறதா என்பதை எல்லாம்கூட, இவர் பார்ப்பதில்லை. கொடுக்கப்பட்ட அறையில் தங்கிக் கொண்டார்.

இன்று ஐஸ்வர்யா ஒரு பிஸியான நட்சத்திரம், அதற்கு வழி வகுத்துக் கொடுத்தவர்கள.தென்னிந்திய டைரக்டர்கள்தான் என்று அடித்துச் சொல்லும்ஐஸ்வர்யாவை,கண்டுகொண்டேன், கண்டுகொண்டேன் படத்தின் கடைசி ஷெட்யூலின்போது சந்தித்தபோது, தன் மனம் திறந்து சினிமா உலகம் பற்றி பேசினார்.

சினிமா உலகம் பற்றி உங்கள் பார்வை என்ன?

சற்று யோசித்தபடியே தீர்மானமாக ஐஸ்வர்யா பேச ஆரம்பித்தார்:

என்னைப் பொறுத்தவரை, நான் சினிமாவை நேசிப்பவள். குறிப்பாக சிலடைரக்டர்கள்களின் படங்களைப் பார்க்கும் போது இவர்கள் படங்களில் நடிக்கிறவாய்ப்பு நமக்குக் கிடைக்காதா என்று என் உள் மனம்,மெதுவாக ஏங்கி இருக்கிறது.இந்த சினிமா உலகிற்குள் வந்த பிறகுதான் பல உண்மைகளை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.

இங்கே திறமையை வளர்த்துக் கொள்ளாமல் அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்புகிறவர்கள்அதிகம் தென்படுகிறார்கள். பலர் பத்திரிக்கைகாரர்களை விலை கொடுத்து வாங்கிதங்களைப் பற்றிய போட்டோக்களும் தகவல்களும் வரவேண்டும் என்று முயன்றுவருவது மிகவும் தவறானது என்பது என் எண்ணம்.

ஓரிரு படங்களின் மூலமாக உச்சகட்ட நிலைக்கு ஓவர் நைட்டில் வந்து விடுபவர்களும்உண்டு. தோல்வி கண்டவர்கள், தவறான வழிகளில் முன்னுக்கு வர நினைப்பவர்களும்உண்டு. தங்களைப் பற்றிய கிசு கிசு செய்தி கொடுத்து பாப்புலாரிட்டியை தேடிக்கொள்ளுபவர்கள் நிறையவே உண்டு.

பத்திரிக்கைகளோடு, கோபமோ ஆத்திரமோ எனக்குக் கிடையாது, என்னுடையபடங்கள் வெளியாகும் போது, நானே ஓடிச் சென்று பத்திரிக்கைகளின் மூலம்விளம்பரங்கள் வரச்செய்து என் பெயரை நிலை நாட்டியிருக்க வேண்டும். அவ்வாறுநான் என்றுமே செய்ய முயன்றதே இல்லை என்றாலும் எனது படம் ஹிட்டானவுடன்நான் தேடிப் போகமலேயே எல்லாவித விளம்பரங்களும் தேடி வந்தன.

(தொடர்ச்சி அடுத்த பக்கம்)


Read more about: beauty cinema iswarya rai

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil