twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சண்டை காட்சியில் சிறுத்தை வேகம் அது வேற லெவல் - ஜாக்குவார் தங்கம் எக்ஸ்க்ளூசிவ் இண்டர்வியூ

    |

    Recommended Video

    எனக்கு JAGUAR தங்கம் னு எப்பிடி பேர் வந்துச்சு| STUNT DIRECTOR JAGUAR THANGAM | FILMIBEAT TAMIL

    சென்னை: நீ ஃபைட் பண்ற வேகம், அந்த ஸ்பீடு. டெக்னிக்கல் எல்லாமே ஒரு சிறுத்தையோட வேகத்துல இருக்கு. இந்த வேகம் இதுக்கு முன்னாடி வேற யார் கிட்டேயும் நான் பாத்ததில்லை. அதனால இனிமேல் உன்னோட பேரு ஜாக்குவார் தங்கம்னு டைரக்டர் சந்திரகுமார் சொன்னார் என்று பழைய சம்பவத்தை நினைவு கூர்ந்தார் ஜாக்குவார் தங்கம்.

    தற்போது சினிமாவில் இடம் பெறும் சண்டைக்காட்சிகளில் எல்லாம் புதிய புதிய தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. கடந்த ஆண்டு கன்னட மொழியில் வெளியான கே.ஜி.எஃப் படம் சண்டைக் காட்சிகளுக்காகவே பரபரப்பாக பேசப்பட்டது. அதோடு கடந்த ஆண்டுக்கான சிறந்த சண்டை அமைப்புக்கான தேசிய விருதும் அந்த படத்திற்கு கிடைத்தது.

    தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொது ஸ்டண்ட் இயக்குநர் பெயரெடுப்பதுண்டு. எம்.ஜி.ஆர் படங்களில் பணியாற்றிய ஷியாம் சுந்தர் முதல், அதற்கு அடுத்த காலகட்டத்தில் வந்த ஜூடோ ரத்தினம், சூப்பர் சுப்பராயன், விக்ரம் தர்மா, கனல் கண்ணன், பீட்டர் ஹெய்ன் வரிசையில் ஜாக்குவார் தங்கம் ரொம்ப ஸ்பெஷலானவர்.

    திருமணத்தில் சர்ச்சை... மிலிந்த் சோமன் சொல்லும் விளக்கத்தைப் பாருங்கதிருமணத்தில் சர்ச்சை... மிலிந்த் சோமன் சொல்லும் விளக்கத்தைப் பாருங்க

    சண்டை இல்லாத சினிமா வேஸ்ட்

    சண்டை இல்லாத சினிமா வேஸ்ட்

    சினிமாவில் என்னதான் காதல் ரசம் சொட்டும் திரைப்படமாக இருந்தாலும், கர்சீப் நனைய நனைய சோக ரசம் பிழியும் படமாக இருந்தாலும் சரி, மனதை வருடும் பாடல்கள் இடம் பெற்றிருந்தாலும் சரி, அல்லது மர்மம் நிறைந்த திகில் படமாக இருந்தாலும் சரி, அதில் ஒரு சில சண்டைக் காட்சிகள் இருந்தால் தான் அது திரைப்படமாக இருக்கும்.

    அனல் பறக்கும் சண்டைகள்

    அனல் பறக்கும் சண்டைகள்

    அப்படி இருந்தால் தான் படம் பார்க்கும் ரசிகர்கள் விசிலடித்து கைதட்டி ரசிப்பார்கள். படமும் போரடிக்காமல் போகும். அதிலும் அந்த சண்டைக் காட்சிகள் அனல் பறக்கும் சண்டைக் காட்சிகளாகவும், ஒரே அடியில் பத்து பேரை அடித்து துவம்சம் செய்யும் வகையில் சண்டைக் காட்சிகள் இருந்தால் படத்திற்கு அதிகமாக வசூலும் கிடைக்கும்.

    தேசிய விருது பெற்ற கே.ஜி.எஃப்

    தேசிய விருது பெற்ற கே.ஜி.எஃப்

    தற்போது சினிமாவில் இடம் பெறும் சண்டைக்காட்சிகளில் எல்லாம் புதிய புதிய தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. கடந்த ஆண்டு கன்னட மொழியில் வெளியான கே.ஜி.எஃப் படம் சண்டைக் காட்சிகளுக்காகவே பரபரப்பாக பேசப்பட்டது. அதோடு கடந்த ஆண்டுக்கான சிறந்த சண்டை அமைப்புக்கான தேசிய விருதும் அந்த படத்திற்கு கிடைத்தது.

    சண்டைப் பயிற்சியாளர்கள்

    சண்டைப் பயிற்சியாளர்கள்

    தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொது ஸ்டண்ட் இயக்குநர் பெயரெடுப்பதுண்டு. எம்.ஜி.ஆர் படங்களில் பணியாற்றிய ஷியாம் சுந்தர் முதல், அதற்கு அடுத்த காலகட்டத்தில் வந்த ஜூடோ ரத்தினம், சூப்பர் சுப்பராயன், விக்ரம் தர்மா, தளபதி தினேஷ், கனல் கண்ணன், பீட்டர் ஹெய்ன் வரிசையில் ஜாக்குவார் தங்கம் ரொம்ப ஸ்பெஷலானவர்.

    சிறுத்தையின் வேகம்

    சிறுத்தையின் வேகம்

    ஜாக்குவார் தங்கம் அமைக்கும் சண்டைக் காட்சிகளில் விறுவிறுப்பும், சிறுத்தையின் வேகமும் இருக்கும் என்பதால் அவருக்கு பொருத்தமாக ஜாக்குவார் தங்கம் என்று பெயர் ஏற்பட்டது. தான் அமைத்த சண்டைக் காட்சிகள் பற்றிய அனுபவங்களை நம்முடைய ஃபிலிமி பீட் வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

    மீனா பஜார் படம்

    மீனா பஜார் படம்

    நான் முதன் முதலில் ஸ்டண்ட் காட்சிகளை அமைத்தது இந்திப் படத்திற்காகத்தான். அந்தப் படத்தின் பெயர் மீனா பஜார். அந்தப் படத்தில நிறைய சண்டைக் காட்சிகள் இருந்தன. அதில் சண்டைக் காட்சிகளை எடுக்கும்போது, என்னோட பேரை சொல்லும்போது கொஞ்சம் கஷ்டப்பட்டாங்க.

    இன்னொருத்தர் பேர் வேண்டாம்

    இன்னொருத்தர் பேர் வேண்டாம்

    என்னோட பேரை கூப்பிடும்போது தங்கம்னு கூப்பிடாம, தண்டர் தங்கம், மின்னல் தங்கம், கராத்தே தங்கம், ராக்கி என ஏதாவது ஒரு பேரை வைக்கச் சொன்னாங்க. ஆனா எனக்கோ என்னமோ அதெல்லாம் பிடிக்கவே இல்லை. இன்னொருத்தர் பேர் வேண்டாமேன்னு நான் அதையெல்லாம் ஒதுக்கிட்டேன்.

    யாரையோ கூப்பிடுறாங்க

    யாரையோ கூப்பிடுறாங்க

    ஒரு நாள் ஒரு அம்மன் கோவில் கிட்ட ஃபைட் சீன் எடுத்துக்கிட்டிருக்கோம்போது, அந்தப் படத்தோட டைரக்டர் பி.சந்திரகுமார் என்னை நோக்கி கையசைத்து, ஜாக்குவார் இங்க வாங்கன்னு கூப்பிட்டார். ஆனா நானோ, சரி வேற யாரையோ கூப்பிட்றாங்கன்னு திரும்பி பார்த்தேன், எம்பக்கத்துல கேமரா மேன் மட்டுந்தான் இருந்தாரு.

    ஜாக்குவார் தங்கம் நீங்க தான்

    ஜாக்குவார் தங்கம் நீங்க தான்

    அவருதான் என்கிட்ட, சார் டைரக்டர் உங்களத்தான் கூப்பிட்றார், போங்கன்னு சொன்னார். ஆனால், நானோ இல்ல இல்ல வேற யாரையோ கூப்பிட்றார்னு சொன்னேன். ஆனா விடாம டைரக்டர் என்னையே கையசைத்து கூப்பிட்டார். நானும் அவர்கிட்டே போனேன். சார் எம்பேர் அது இல்லையேன்னு சொன்னேன்.

    இனிமேல் நீங்க ஜாக்குவார் தங்கம்

    இனிமேல் நீங்க ஜாக்குவார் தங்கம்

    ஆனா அவருதான், இல்ல இல்ல இன்னையிலேருந்து உன்னோட பேரு, ஜாக்குவார் தங்கம் அப்படின்னு சொன்னார். நான் ஏன் சார் அப்பிடின்னு கேட்டதுக்கு, ஆமாய்யா, நீ ஃபைட் பண்ற வேகம், அந்த ஸ்பீடு. டெக்னிக்கல் எல்லாமே ஒரு சிறுத்தையோட வேகத்துல இருக்கு. இந்த வேகம் இதுக்கு முன்னாடி வேற யார் கிட்டேயும் நான் பாத்ததில்லை. அதனால இனிமேல் உன்னோட பேரு ஜாக்குவார் தங்கம்னு சொன்னார். அன்னைக்கிருந்து என்னோட பேர் கூட ஜாக்குவார் ஒட்டிக்கிச்சி.

    என்னோட ஸ்டூடண்ட்ஸ் தான்

    என்னோட ஸ்டூடண்ட்ஸ் தான்

    இன்னிக்கு சினி ஃபீல்டுல இருக்குற எல்லோருமே என்னோட ஸ்டூடன்ஸ் தான். எல்லோருமே எங்கிட்ட இருந்து போனவங்க தான். அவங்க எல்லோருமே இன்னைக்கு வேர்ல்டு லெவல்ல நல்ல பேரெடுத்துகிட்டு வர்றாங்க. அதனால் அவங்க எல்லோரையுமே எனக்கு ரொம்ப பிடிக்கும்.

    நோக்கு வர்மம் நம்மளோடது

    நோக்கு வர்மம் நம்மளோடது

    இன்னிக்கு வேர்ல்டு லெவல்ல ஃபைட் சீன் அமைக்கிறதுல தமிழ் சினிமா ஸ்டண்ட் மாஸ்டர்ஸ் மாதிரி யாருமே கிடையாது. ஃபைட் சீன்ல நம்ம ஸ்டண்ட் கலைஞர்கள் காட்ற அந்த வேகமோ, டெக்னிக்கலோ வேற யார்கிட்டேயும் கிடையாது. குறிப்பா நம்ம பழங்காலத்துல பயன்படுத்தின நோக்கு வர்மம்கிற கலை உலகத்துல யார்கிட்டேயும் கிடையாது.

    எம்.ஜி.ஆர் கூட இருந்தேன்

    எம்.ஜி.ஆர் கூட இருந்தேன்

    எனக்கு திருமணமாகி கிட்டத்தட்ட 36 வருஷம் ஆகிடிச்சி. என்னோட மனைவி எனக்கு இன்னொரு அம்மா மாதிரி தான். ஏன்னா பொதுவா ஃபைட்டர்களுக்கு யாருமே பொண்ணு தரமாட்டாங்க. என்னோட மாமா புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் கிட்ட 55 வருஷமா இருந்தவரு. நானும் கூட எம்.ஜி.ஆர் கூட இருந்தேன்கிறதுனால, அது மூலமா லிங்க் ஆயி, எனக்கு எந்தவிதமான கெட்ட பழக்கமும் இல்லைங்கிறதுனால எனக்கு பொண்ணு குடுத்தாங்க.

    எனக்கு இன்னொரு அம்மா

    எனக்கு இன்னொரு அம்மா

    கல்யாணம் ஆன புதுசுல நான் வேற மாதிரி இருந்தேன். ஆனா அதையெல்லாம் மாத்தி இன்னைக்கு உங்க கூட பேசுற அளவுக்கு என்னை மாத்தி ஒரு அம்மாவா இருக்குறது என்னோட மனைவி தான் என்று தன்னடக்கத்தோடு கூறினார் ஜாக்குவார் தங்கம்.

    English summary
    Speed that you fight, the technology is all about speeding with a Jaguar. I have never heard of this speed before anyone else. Therefore. henceforth your name is Jaguar Thangam, Director P.Chandrakumar just named me. Jaguar Thangam recalls memory.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X