»   »  ஜெயலட்சுமி நடிக்காதது ஏன்?

ஜெயலட்சுமி நடிக்காதது ஏன்?

Subscribe to Oneindia Tamil

பழனியப்பா கல்லூரி படத்தில் கிளாமர் வேடத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்ட சிவகாசி ஜெயலட்சுமி பின்னர் அப்படத்தில் நடிக்காமல் போனதற்கான காரணத்தை தயாரிப்பாளர் அன்பாலயா பிரபாகரன் விளக்கியுள்ளார்.

காக்கிகளை தனது வலையில் வீழ்த்தி மண் கவ்வ வைத்தவர் சிவகாசி ஜெயலட்சுமி. எந்த காக்கியை ஆயுதமாகக் கொண்டு ஆட்டம் காட்டினாரோ, அதே காக்கியே பின்னால் அவருக்கு வினையாகிப் போனது.

பல வழக்குகள் போடப்பட்ட சிவகாசி ஜெயலட்சுமி, ஒவ்வொரு வழக்காக விடுதலையாகி வருகிறார். இடையில் சிறையிலும் காலம் தள்ளினார். பெரும் போராட்டத்திற்குப் பின்னர் தற்போதுதான் சிவகாசி ஜெயலட்சுமிக்கு கொஞ்சம் கொஞ்சமாக நிம்மதி பிறந்து வருகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் மீண்டும் பரபரப்பாக பேசப்பட்டார் ஜெயலட்சுமி. ஆனால் இந்த முறை வேறு காரணத்திற்காக. அன்பாலயா பிரபாகரன் தயாரிப்பில் உருவாகும் பழனியப்பா கல்லூரி படத்தில் சிவகாசி ஜெயலட்சுமி நடிப்பதாகவும், கிளாமரான டீக்கடைக்காரப் பெண்ணாக அவர் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.

ஆனால் கடைசி நேரத்தில் அந்த வேடத்தில் ஜெயலட்சுமி நடிக்கவில்லை. மாறாக, செக்ஸ் பிரளயம் ஷகீலா புக் பண்ணப்பட்டு அவர் நடித்தார். இந்த கேரக்டரில் நடிக்க விருப்பம் இல்லை என்று ஜெயலட்சுமி கூறியதால்தான் ஷகீலாவை புக் பண்ணியதாக பிரபாகரன் விளக்கியுள்ளார்.

ஜெயலட்சுமியின் விலகலுக்கு என்ன காரணம் என்று பிரபாகரனிடம் கேட்டபோது, ஜெயலட்சுமி நடிப்பது குறித்து பத்திரிக்கைகளில் வெளியான செய்திகளால்தான் அவர் நடிக்க மறுத்து விட்டார்.

ஜெயலட்சுமி கவர்ச்சியான ரோலில் நடிக்கப் போவதாக சில பத்திரிக்கைகளில் வெளியான செய்தி அவரை மிகவும் பாதித்து விட்டது. மேலும் இரட்டை அர்த்தத்துடன் கூடிய குத்துப் பாட்டுக்கு அவர் ஆடப் போவதாகவும் சிலர் செய்தி வெளியிட்டனர்.

இதையெல்லாம் பார்த்து ஜெயலட்சுமி அப்செட் ஆகி விட்டார். இந்த கேரக்டரில் தான் நடித்தால் பெயர் கெட்டு விடுமோ என்று பயந்தார். இருப்பினும் மயிலாடுதுறை அருகே திருக்கடையூரில் நடந்த முதல் நாள் ஷூட்டிங்குக்கு அவர் வந்தார்.

ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தார். ஆனால் தன்னால் இந்த படத்தில் நடிக்க முடியாது என்று கூறி விட்டார். ஆனால் நான் அவரிடம் ரூ. 50 ஆயிரம் அட்வான்ஸ் தொகையைக் கொடுத்து இது நீங்கள் நினைப்பது போல ஆபாசமான கேரக்டர் அல்ல, நல்ல கேரக்டர்தான் என்று கூறி சமாதானப்படுத்தினேன். அப்போது அவர் சமாதானமானது போலத்தான் தெரிந்தது.

அவர் போகும்போது அவரது செலவுக்காக ரூ. 5,000 பணமும் கொடுத்து அனுப்பினேன். அந்த அளவுக்கு சிரமமான நிலையில் இருந்தார் ஜெயலட்சுமி. ஆனால் சில நாட்கள் கழித்து என்னிடம் திரும்பி வந்த ஜெயலட்சுமி, படத்தில் நடிக்க முடியாது என்று கூறி வாங்கிய அட்வான்ஸ் தொகையையும் திருப்பிக் கொடுத்து நாகரீகமாக விலகிக் கொண்டார் என்றார் பிரபாகரன்.

ஜெயலட்சுமி இப்போது யாரும் அணுக முடியாத தொலை தூர கிராமம் ஒன்றில் வசிப்பதாகவும், யாருடனும் அவர் பேசுவதில்லை என்றும் பிரபாகரன் கூறினார்.

இவ்வளவு பவ்யமாக இருக்கும் ஜெயலட்சுமியா, தென் மாவட்டக் காவல்துறையை பந்தாடி பயமுறுத்தினார், நம்பவே முடியலையே!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil