»   »  சந்திப்போமா?

சந்திப்போமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஜெயராம். மலையாளப்பட உலகிலிருந்து தமிழ் சினிமாவுக்கு வந்து யாருக்கும் போட்டியாக இல்லாமலும், யாருடைய விரோதத்தை பெறாமலும்என்வழி தனிவழி என்று ஓசைப்படாமல் கோலங்கள், ப்ரியங்கா, முறைமாமன், புருஷலட்சணம், மனசு ரெண்டும் புதுசு நடித்து முடித்தார்.

முன்பு அண்ணாமலை படத்தில் நடிப்பார் என்று அறிவிப்புகள் வெளிவந்தன. ஆனால் இவர் ஏனோ நடிக்கவில்லை. அதோடு தமிழ் படங்களிலும் இவரைப்பார்க்கமுடியவில்லை. நீண்ட இடைவெளிக்குப்பிறகு கமல்ஹாசனுடன் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் தெனாலியில் நடித்து வருகிறார் ஜெயராம்.

சென்னை வந்திருந்தபொழுது சந்தித்தோம். அண்ணாமலை படத்தில் நடிக்காதது பற்றி சொன்னார்.

அண்ணாமலை படத்தில் நடிக்காதது ஒரு வகையில் சற்று வருத்தமாகவே இருந்தது. வருத்தம் என்பது ரஜினி சாருடன் நடிக்கமுடியாமல் போனதற்காக.அந்தப் படத்தில் ரஜினி சாரை அடிப்பது போன்ற காட்சியில் நடிக்க வேண்டியிருந்ததால் நைஸாக நடிக்க மறுத்து விட்டேன்.

தொடர்ந்து மலையாளப்படங்களில் பிஸியாக இருந்ததால், தமிழ் பக்கம் வரமுடியவில்லை என்றார் ஜெயராமன்.

மலையாளப்படங்கள் பற்றிச்சொல்லுங்களேன் ?

மலையாளத்தில் சாஃப்டான, ஆக்ஷன் ப்ளஸ் காமெடி ரோல்கள் செய்து கொண்டிருக்கிறேன். ஆட்டம், பாட்டம், டூயட் பயங்கர ஆக்ஷன், எல்லாம் கலந்தஅவியல் நடிப்பு அது. சமீபத்தில் தமிழ்நாட்டில் உள்ள மலையாள ரசிகர் ஒருவரை சந்தித்து பேசிக்கொண்டிருந்த பொழுது தமிழ் படங்களில் டான்ஸ் எல்லாம் கூடஆடுறீங்ளேன்னு ஆச்சர்யப்பட்டார்.

நான் மலையாளப்படங்களில் டான்ஸ் பண்ணியது கிடையாது. பொதுவாக தமிழ்படம் எடுக்க குறைந்தது அறுபது முதல் ஏழுபத்தைந்து நாட்களாவது ஆகின்றன.

ஒரு ஷெட்டியூல் முடிந்து அடுத்த ஷெட்டியூல் ஆரம்பிப்பதற்கு பத்து இருபது நாட்கள் ஆகும். அந்த இடைவெளியில் இரண்டு மூன்று மலையாளப்படங்கள் நடித்துவிட்டு வந்துவிடலாம். நிலா என்கிற படத்தில் நடித்துக்கொண்டிருந்த பொழுது, அந்தப்படம் முடிவதற்குள்ளாகவே ஐந்து படங்கள் நடித்து முடித்தேன்.

உங்களுக்கு பிரபல நடிகை ஒருவர் சிபாரிசு செய்ததால் தான் வரிசையாக தமிழ்பட வாய்ப்பு கிடைத்ததாகச் சொல்கிறார்களே?

ஐய்யய்யோ அபாண்டம். நிஜமாக நான் ஒரு அப்பாவிங்க. குஷ்பூவுடன் நான் தொடர்ந்து நடித்ததால் யாரோ அப்படி கிளப்பிவிட்டுட்டாங்க. வதந்தி அது.

நான் என் மனைவியை லவ் பண்ணி கல்யாணம் கட்டிகிட்டவன். என்னைப்பற்றி என் மனைவிக்கு நன்றாகத்தெரியும். உண்மையைச்சொல்வதென்றால் நான்ஒரு பொண்டாட்டிதாசன்.

நல்ல காலம் குஷ்பூவும் கூட சுந்தர்.சி யை கல்யாணம் செய்துகிட்டாங்க. விரைவில் தாயகவும் போகிறார். குஷ்பூ நல்ல நண்பர்.

தெனாலி - சந்தோஷமாக இருக்கிறதா?

ஓ! நிறைய நிறைய சந்தோஷம்.செம ஜாலி ஸார். கமல் சாரோட நடிக்கிறதுன்னா கேட்கவா வேண்டும். ஏற்கனவே சதிலீலாவதி படத்தில்நடிக்கக்கேட்டார். அந்த சமயம் கால்ஷீட் பிரச்சனையால் முடியாமல் போய்விட்டது.

என்னடா கமல்சார் கூப்பிட்டு இப்படி ஆயிடுத்தேன்னு நினைச்சு வருத்தப்பட்டேன். இப்ப தெனாலி மூலமா குஷியாயிட்டேன்என்று உற்சாகமாகபேசுகிறார் ஜெயராம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil