ஓட்டலுக்கு அழைத்து அவமானப்படுத்தினார்.. ஊர்வசியின் உண்மை முகம் இதுதான்.. பிரபலம் வேதனை!
சென்னை: தமிழ் சினிமாவில் பன்முகத் திறமையால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை ஊர்வசி. நகைச்சுவை தொடங்கி அத்தனை கதாபாத்திரங்களையும் இயல்பாகச் செய்யும் அவருக்கு 'உள்ளொழுக்கு' திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசனையே ஆச்சரியப்படுத்திய ஊர்வசியின் தனிப்பட்ட வாழ்க்கை பெரிதும் பேசப்பட்டது. நடிகை ஊர்வசி எளிமையானவர் அனைவரிடமும் அன்பாக பழகக்கூடியவர் தான். ஆனால், ரசிகர்களுக்குத் தெரியாத இன்னொரு பக்கமும் உள்ளது என்று பத்திரிகையாளர் ஒருவர் பேட்டியில் ஊர்வசி பற்றி யூடியூப் சேனல் ஒன்றில் பேசி உள்ளார்.
அதில், ஊர்வசியின் குடும்பத்துடன் எனக்கு நல்ல உறவு இருந்தது. சென்னைக்கு செல்லும்போது முதலில் அவர்களைத்தான் அழைப்பேன். நான் ஒரு சகோதரனைப் போல அவர்கள் குடும்பத்துடன் பழகுவேன். ஆனால், ஊர்வசி ஏன் என்னிடம் அப்படி நடந்து கொண்டார் என்ற கேள்வி என் மனதில் அடிக்கடி கேட்டுக்கொண்டே இருக்கிறேன். அந்தக் குடும்பத்திற்கு நான் எந்தத் தீங்கும் செய்ததில்லை. எல்லோருடனும் நல்ல நட்புடன் கொண்டிருந்தேன். அவர்களுக்கு முடிந்த அளவு விளம்பரமும் கொடுத்தேன். ஊர்வசியும் அவரது முன்னாள் கணவர் மனோஜ் கே ஜெயனும் பிரிந்தபோது, ஊர்வசியைப் பற்றி நான் கேட்ட கதைகள் வேதனை அளிப்பவையாக இருந்தன. அவர் மது அருந்துபவர் என்று அப்போது கேள்விப்பட்டேன். ஆனால், நான் அதை நம்பவில்லை.

மதுவிற்கு அடிமையானார்: பின்னர் ஊர்வசியின் குடும்ப உறுப்பினர் ஒருவர் என்னிடம், இரவு 8 மணிக்கு மேல் ஊர்வசிக்கு போன் செய்து பாருங்கள் என்று கூறினார். நானும் நண்பர் சொன்னது போல அழைத்தேன்... ஊர்வசி எடுத்தார். பேச்சு தடுமாற்றமாக இருந்தது. "பல்லிச்சேரி சேட்டையா" என்று அழைத்தார் ஊர்வசி, என்னை ஏன் பெயர் சொல்லி அழைத்தார் என்று எனக்கு தெரியவில்லை. பின் "ஏன் இப்போது என்னை அழைத்தீர்கள்? மது அருந்துவது பற்றி கேட்கத்தானே? மனோஜ் கே ஜெயனைப் பாதுகாக்கத்தானே? அவர் குடும்பத்தைப் பாதுகாக்கத்தானே?" என்று கேட்டுவிட்டு, இப்போது எனக்கு பேச விருப்பமில்லை என்று கூறி விட்டு ஃபோனை துண்டித்துவிட்டார்.
அவமானப்படுத்தினார்: ஊர்வசியை சரிசெய்ய நான் அழைக்கவில்லை. ஊர்வசி பிரச்சனைகளை சந்தித்தபோது, அவரது குடும்பத்தினர் கூட மனோஜ் கே ஜெயனுக்கு ஆதரவாக இருந்தனர். ஊர்வசி தனிமைப்படுத்தப்பட்டார். அதனால் அவர் மது அருந்தும் பழக்கத்திற்கு ஆளாகி இருக்கலாம் என்று அந்த விஷயத்தை விட்டுவிட்டேன். அதே போல,ஊர்வசியுடன் நல்ல நட்பு உண்டு நண்பர் என்கிற முறையில், குறும்பட விழா திறப்பு விழாவுக்கு ஊர்வசியை அழைக்க நான் ஃபோன் செய்தேன். நான் விஷயத்தைச் சொன்னதும், ஹோட்டலுக்கு நேரில் வாருங்கள் என்று சொன்னார். நானு அங்கு சென்ற ஊர்வசியை அழைத்தேன். ஆனால், வேறு யாரோ போனை எடுத்து, ஊர்வசி படப்பிடிப்புக்குச் சென்று இருக்கிறார் இன்னும் வரவில்லை என்றார். ஆனால், அவர் அங்கேயே இருக்கிறார் என்று எனக்கு தோன்றியதால், நான் லாபியில் காத்திருந்தேன். சிறிது நேரம் கழித்து ஊர்வசி என் முன்னால் நடந்து சென்றார். அதைப்பார்த்து நான் வேதனை அடைந்தேன், விருப்பம் இல்லை என்றால் முன்பே சொல்லியிருக்கலாம். ஆனால், ஊர்வசி என்னை ஹோட்டலுக்கு அழைத்து அவமானப்படுத்தினார் என்று பல்லிச்சேரி அந்த பேட்டியில் வேதனைப்பட்டு கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











