»   »  சந்திப்போமா?

சந்திப்போமா?

Subscribe to Oneindia Tamil

"பஞ்சதந்திரம்" வரும் 21ஆம் தேதி ரிலீசாகும் என்று கமல் பெங்களூரில் நிருபர்களிடம் தெரிவித்தார். அப்போதுசிம்ரனும் உடன் இருந்தார்.

இந்தப் படத்தின் பாடல் கேசட்டுகள் நேற்று பெங்களூரில் ரிலீஸ் செய்யப்பட்டன. அப்போது, நிருபர்களிடம் கமல்கூறுகையில்,

இந்த படம் மித்ரு வேதத்தை பற்றிய 5 நண்பர்களின் கதையாகும். இதில் நான் ராம் என்ற காதாபாத்திரத்தில்நடிக்கிறேன். ஜெயராம் ஐயப்ப நாயராக மலையாளம் பேசியும், கணேஷ் ஹெக்டேவாக ரமேஷ் அரவிந்த் கன்னடம்பேசியும், அனுமந்த ரெட்டியாக ஸ்ரீமன் தெலுங்கு பேசியும், யூகி சேது வேத அய்யராகவும் நடிக்கின்றனர்.

கமல் இந்த கதாபாத்திரத்தில் தான் நடிப்பார் என்ற குறிப்பிட்ட வட்டத்திற்குள் இருக்க நான் விரும்பவில்லை. எல்லாகதாப்பாத்திரத்திலும் எனது திறமையை வெளிப்படுத்த விரும்புகிறேன்.

இப்போதும் நகைச்சுவை உணர்வோடு நாம் ரசிக்க முடிகிற படம் தில்லானா மோகனாம்பாள். அந்த படத்தை போலஇந்த படமும் அமையும்.

மருதநாயகம் படப்பிடிப்புக்காக வெளிநாட்டில் நிதி உதவியை எதிர்பார்த்து இருக்கிறேன். வெளிநாட்டில் இருந்துநிதி உதவி கிடைத்தவுடன் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறும். இதற்கு 30, 40 கோடி ரூபாய் தேவைப்படும்என்றார் கமல்.

இதையடுத்து பஞ்சதந்திரத்தில் ஒரு பாடல் உங்களுக்கும் சிம்ரனுக்காகவும் தனிப்பட்ட முறையில் எழுதப்பட்டதுபோல் இருக்கிறதே என்று நிருபர்கள் கேட்டபோது, அது படத்திற்காக எழுதப்பட்டது என்றார் கமல்ஹாசன்.

தொடர்ந்து படத்தின் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் கூறுகையில்,

இந்தப் படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 16ஆம் தேதி தொடங்கி மே 16ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இந்த படம்ஒரு வித்தியாசமான நகைச்சுவைப் படம் என்றார்.

அவர்களுடன் பஞ்சதந்திரம் படத்தில் நடித்த யூகிசேது, ஸ்ரீமன், ரமேஷ் அரவிந்த், ஜெயராம், ரம்யா கிருஷ்மன்ஆகியோரும் உடனிருந்தனர்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil