»   »  சந்திப்போமா?

சந்திப்போமா?

Subscribe to Oneindia Tamil

சிவாஜி பிலிம்ஸ் எனது அப்பா வீடு. அவர்கள் தயாரிப்பில் ரஜினி நடிக்க, உருவாகி வரும் சந்திரமுகி படத்தில் நடிக்க எனக்குஅழைப்பு வந்தால் அதை மறுக்க மாட்டேன் என்று கமல் கூறியுள்ளார்.

கமலுக்கு இன்று (நவம்பர் 7) பிறந்த நாள். இதையெ சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது ராஜ்கமல் அலுவலகத்தில்ரசிகர்களுடன் பிறந்த நாளைக் கொண்டாடினார். ஏராளமான திரையுலகப் பிரமுகர்களும், ரசிகர்களும் நேரில் வந்து வாழ்த்திக்கொண்டிருந்த நிலையில் நிருபர்களின் பல்வேறு கேள்விக்கு தனது பாணியில் பதில் தந்தார் கமல்.

அவரது பேட்டியின் சாரம்:

எனது அடுத்த படம் மும்பை எக்ஸ்பிரஸ். இதை நானே ராஜ்கமல் இன்டர்நேஷனல் சார்பில் தயாரிக்கிறேன். தமிழிலும்,இந்தியிலும் ஒரே நேரத்தில் இந்தப் படத்தை உருவாக்குகிறோம். அதிகமான பொருட் செலவில் கொஞ்சம் அதிபிரம்மாண்டமாகவே தயாரிக்கவுள்ளோம்.

படத்தை சிங்கீதம் சீனிவாசராவ் இயக்குகிறார் (முதலில் கெளதம் இயக்குவதாக கூறப்பட்டது).

இளையராஜா இசையமைக்கிறார். நாசர், பசுபதி, வையாபுரி ஆகியோர் நடிக்கிறார்கள். கதாநாயகி யார் என்பது விரைவில்முடிவாகும். இந்தி பதிப்பில் மகேஷ் மஞ்ச்ரேகரும் நடிக்கிறார். இன்னும் பத்து நாட்களில் படப்பிடிப்பு ஆரம்பமாகும். தமிழ்ப்புத்தாண்டில் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறோம்.


படத்துக்கு ஆங்கில பெயர் வைப்பதை விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர்எதிர்க்கிறார்கள். ஆனால் என் படத்துக்கு அவர்கள் பிரச்சினை கிளப்ப மாட்டார்கள் என்று நம்புகிறேன். திருமாவளவனின் தமிழ்க்கட்டுரைகளை படிப்பவர்களில் நானும் ஒருவன்.

இது ஒரு வித்தியாசமான, சந்தோஷமான படமாக இருக்கும் இதற்கு ஏன் மும்பை எக்ஸ்பிரஸ் என்று ஏன் பெயர் வைத்தோம்என்பது படம் வெளியாகும்போது தெரியும்.

சிவாஜி பிலிம்ஸ் என் அப்பா வீடு. ரஜினியை வைத்து அவர்கள் தயாரிக்கும் சந்திரமுகி படத்தில் நடிக்க எனக்கு அழைப்புவந்தால், அதை நிச்சயம் மறுக்க மாட்டேன்.

திருட்டு வி.சி.டி. ஒழிக்கப்பட்டு விட்டது சந்தோஷமான விஷயம். முதல்வர் ஜெயலலிதாவிற்கு திரையுலகம் நன்றிக்கடன்பட்டுள்ளது. இது காலம் கடந்து செய்யப்பட்டிருப்பதாக விமர்சிக்கப்படுகிறது. காலம் கடக்கவில்லை, இது சரியானநேரம்தான்.

இதற்காக நாளை முதல்வருக்கு தமிழ் திரையுலகம் சார்பில் பாராட்டு விழா நடத்துகிறோம். அதில் நானும் பங்கேற்கிறேன்என்றார்.

கடவுள் நம்பிக்கை இல்லாத நான், ஆழ்வார்பேட்டை ஆண்டவா என்ற பாடலை வைத்தது ஏன் என்று கேட்கிறார்கள். அந்தபடமே கேலி தான். பட்டங்களில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. உடம்பு தான் கோவில், இரு கால் மூலம் அந்த கோவில்நடந்து கொண்டு இருக்கிறது. எனவே உடம்பை நன்றாக வைத்துக் கொள்ள வேண்டும்.

எனது பெயரில் உள்ள நற்பணி இயக்கம் ஒரு பேரியக்கமாகும். எனக்கு பிறகும் இந்த இயக்கம் தொடர வேண்டும்.

வடநாட்டைச் சேர்ந்த ஒரு முன்னாள் அரசியல்வாதி குடிசை பள்ளிக்கூடங்களுக்கு எங்கள் இயக்கம் மூலம் டெண்ட் அமைத்து தரமுன் வந்துள்ளார். இது எங்களுக்கு பெருமை அளிக்கிறது. அணில் மண் சுமந்த மாதிரி நாங்கள் உதவிகள் செய்கிறோம். எங்கள்சகோதரர்களின் வியர்வை எப்போதும் வீண் போகாது.

ஹாலிவுட் படங்களில் நடிக்க நான் முயற்சி எதுவும் எடுக்கவில்லை. அதில் எனக்கு விருப்பமும் இல்லை. தெரிந்த மொழியில்நடித்து பெயர் வாங்கினால் போதும். உலக அளவில் இந்திய முன்னோடிகளாக நாம் நிற்கப்போவது நமது காலத்திலேயே நடக்கப்போகிறது.

மருதநாயகம் படமாக வரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. விரைவில் ஒரு படம் டைரக்ட் செய்வேன். நடிப்பு, இசை, வீரம்அனைத்தும் கலந்த ஒரு படத்தில் நடிப்பது குறித்தும் யோசித்து வருகிறேன் என்றார் கமல்.

பிறந்த நாளையொட்டி நடந்த பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, -மாணவிகளுக்கு கமலஹாசன் பரிசுகள் வழங்கினார்.ஏழைகளுக்கு மருத்துவ உதவி, கல்வி உதவிளையும் வழங்கினார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil