»   »  இனி நோ கிஸ்!- லஷ்மிராய்

இனி நோ கிஸ்!- லஷ்மிராய்

Posted By:
Subscribe to Oneindia Tamil

இனிமேல் உணர்ச்சி வசப்பட வைக்கும் வகையிலான முத்தக் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று அறிவித்துள்ளார் லஷ்மிராய்.

சமீபத்தில் பெரும் சர்ச்சையில் சிக்கி மீண்டவர் லஷ்மி ராய். தென் பிராந்திய விபச்சார மாமா கன்னட பிரசாத்தின் ரெகுலர் தொழில் பெண்களின் பட்டியலில் லஷ்மி ராயும் இருக்கிறார் என்று செய்திகள் வெளியாகின. இதைத் தொடர்ந்து இன்னொரு குட்டி விபச்சார மாமாவின் பட்டியலிலும் லஷ்மி இருப்பதாக செய்திகள் வெளியானபோது லஷ்மி ராய் கலங்கிப் போனார்.

எனக்கும் விபச்சாரத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் மிஸ் பெல்காம் ஆக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண், எங்க குடும்பம் ரொம்பக் கவுரமான குடும்பம், இப்படியெல்லாம் பிழைக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்று புலம்பாத குறையாக கூறினார் லஷ்மி ராய்.

இந்த பஞ்சாயத்து ஒரு வழியாக ஓய்ந்தபோது ஒரு படத்தில் ஹீரோவுடன் உதடுகளைப் போட்டு பின்னிப் பிணைந்து லஷ்மி ராய் கொடுத்த முத்தப் படம் வெளியாகி பெரும் சூட்டைக் கிளப்பியது.

பல முனைகளிலிருந்தும் இந்த முத்தக் காட்சிக்கு கண்டனங்கள் கிளம்பவே இனிமேல் இப்படிப்பட்ட உணர்ச்சி வசமான முத்தக் காட்சிகளில் நடிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளாராம் லஷ்மி ராய்.

இந்த முத்தக் காட்சி எனது அப்பா, அம்மா, உறவினர்களை பெரும் அப்செட்டில் ஆழ்த்தி விட்டது. இதனால் இனிமேல் இதுபோன்ற முத்தக் காட்சிகளில் நடிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளேன் என்று கூறியுள்ளார் லஷ்மி ராய்.

தெரியாமல்தான் இவ்வாறு நடித்து விட்டதாக லஷ்மி ராய் அவர்களை சமாதானப்படுத்தினாராம். இதுபோன்ற காட்சிகளில் இனிமேல் நடிக்க வேண்டாம். காதல் காட்சிகளில் நடிக்கும்போது இனி கவனமாக இருக்கவும் என குடும்பத்தினர் லஷ்மியை அறிவுறுத்தியுள்ளனராம்.

சரி, தமிழில் ஆளைக் காணோமே என்று கேட்டால் இப்போது கன்னடத்தில் நடித்து வருகிறேன், விரைவில் தமிழுக்கும் வருவேன் என்று கையில் படம் இல்லை என்பதை நாசூக்காக சுட்டிக் காட்டி நம்மை விரட்டாத குறையாக அனுப்பி வைத்தார்.

அடடா!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil