»   »  லாலி பாப்பா லஷ்மி ராய்

லாலி பாப்பா லஷ்மி ராய்

Subscribe to Oneindia Tamil

லாலி பாப் பாப்பா லஷ்மி ராய் படு ஜாலியாக இருக்கிறார். தர்மபுரி படத்தில் கேப்டனுடன் ஜோடி போட்டுகூத்துக் கட்டிய சந்தோஷம்தான் எல்லாம்.

கற்க கிளாமரை கசடற என முதல் படத்திலேயே கும்மென விஸ்வரூபம் எடுத்து விடலைகளை விதிர்க்கவைத்தவர் ராய். அப்புறம் குண்டக்க மண்டக்க படத்தில் இளைஞர்களின் உள்ளங்களை வதைத்து எடுத்தார்.

எப்படிக் காட்டியும், படம் வந்து குமியாததால் வெக்ஸ் ஆகிப் போன லஷ்மி என்ன காரணம், எங்கே குறைஎன்று அக்குவேறு ஆணி வேறாக ஆராய்ந்து பார்த்தார். ஒன்றும் புரியவில்லை. இதனால் கடுப்பாகி கிடந்தவரைக்கூப்பிட்டு கேப்டனுடன் ஒரு குமுக் படம் நடிக்கணும், ரெடியா என்று சவுண்டு பார்ட்டி பேரரசு கூப்பிடவேகுஜாலாகிப் போனார் ராய்.

கும்பிடப் போண தெய்வம் குறுக்கு மறுக்கால வந்ததைப் போல ஜாலியாகிப் போன லஷ்மி, கேப்டனுடன் ஜோடிபோட்டு அமர்க்களப்படுத்தினார். வழக்கம் போல கிளாமர் பாதி, மத்தது பப்பாதி என்ற ரேஞ்சில் தர்மபுரியிலும்திறமை காட்டியுள்ளார் லஷ்மி ராய்.

மிஸ் பெல்காம் ஆன லஷ்மி ராயிடம் தர்மபுரி அனுபவம் எப்படி என்று கேட்டபோது, எனக்கு பேரரசுவைரொம்பப் பிடிக்கும். திறமையான இயக்குநர். அவருடன் சேருவோமா (நடிக்கத்தான் ஓய்!) என்ற கனவில்இருந்தேன். அவரே என்னைக் கூப்பிட்டபோது புல்லரித்துப் போய் ஒத்துக் கொண்டேன்.

இந்தப் படத்தில் எனக்கு நல்ல கேரக்டர். சிலர் இதை மறுத்து விட்டார்களாம். ஆனால் நான் நடிக்க ஒப்புக்கொண்ட பின்னர் நாங்களே நடிக்கிறோம் என அவர்கள் அணுகினார்களாம்.இதுவரை கிளாமர் டால் ஆக மட்டுமே வந்து போய்க் கொண்டிருந்த என்னை இதில் அழகான கிராமத்துப்பாவயாைக காட்டியிருந்தார் பேரரசு.

இதுவரை நான் நடித்த படங்களிலேயே நான் அழகாக காட்சியளிப்பது இப்படத்தில்தான்.எனக்கு கிளாமர் காட்டுவது சாதாரணமான விஷயம். காரணம் எனது உடல் வாகே அப்படித்தான்அமைந்துள்ளது. பட், நல்ல கேரக்டர்களுடன் சேர்த்து கிளாமர் காட்டவே எனக்கு விருப்பம்.

இப்பெல்லாம் கிளாமர் இல்லாமல் சினிமாவில் காலம் தள்ளவே முடியாது. எல்லா ஹீரோயின்களும் கிளாமர்பக்கம் சாயாமல் இருக்கவே முடியாது. அதில் தவறும் இல்லை. எல்லை தாண்டாமல் இருந்தால் சரிதான்.ரசிகர்கள் ஹீரோயின்களிடம் வேறு எதை எதிர்பார்க்கப் போகிறார்கள்? அவர்களை நாங்கள் ஏமாற்றலாமா,நியாயமா, நேர்மையா என்று ரசிகர்களுக்கு வக்காலத்து வாங்குகிறார் லஷ்மிக்கா.

சரி, பத்துக்குள்ள ஒங்களோட நம்பர் என்ன சொல்லுங்கோ என்றோம். சாரி பிரதர், இந்த நம்பர் போட்டியில்எனக்கு நம்பிக்கை இல்லை. நம்பர் ஒன் இடத்திற்கு அசின், நயனதாரா, திரிஷா என நிறையப் பேர் உள்ளனர்.ஆனால் ஒரு படத்தை மட்டும் வைத்து அதை முடிவு செய்ய முடியாது.

போட்டி இருக்கிறது. நானும் அதில் இருக்கிறேன். என்னை சாதாரணமான ஆளுன்னு நினைக்காதீங்க, போகப்போகப் புரியும், இந்தப் பூவை யாருன்னு தெரியும் என்று புரியாத புதிராக பேசுகிறார் ராய்.

ராய் பேசுவது புதிரா, புனிதமா?

Read more about: happy lakshmirai

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil