மாதம்பட்டிக்கு பல பெண்களுடன் தொடர்பு.. ஆதாரத்தை அழிக்க ஃபோனை உடைத்தார்.. கதறும் ஜாய் கிரிஸில்டா!

சென்னை: மாதம்பட்டி ரங்கராஜ்... கடந்த சில நாட்களாக இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கும் பெயர் இதுதான். இவர் ஏற்கனவே ஸ்ருதி என்ற பெண்ணை திருமணம் செய்து, 2 குழந்தைகள் இருக்கும் நிலையில், ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்த போட்டோவை ஜாய் கிரிஸில்டா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு கர்ப்பமாக இருக்கும் தகவல் வெளியிட்டு இருந்தார்.

ஆனால்,ஒரு மாதத்திற்கும் மேலாக மாதம்பட்டி ரங்கராஜ், எங்கே போனார் என்று தெரிவில்லை என்றும், தன்னை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றிவிட்டதாக ஜாய் கிரிஸில்டா காவல் நிலையத்தில் புகார் அளித்து இருக்கும் நிலையில், Sivasankari Talks யூடியூப் சேனலுக்கு அளித்துள்ளார். அதில், பணத்திற்காக நான், அவர் மீது அபாண்டமான புகார்களை கூறுவதாகவும், அவரை பழி தீர்த்துக் கொள்ள நினைப்பதாகவும் பலர் பேசி வருகிறார்கள். உண்மையை சொல்ல வேண்டும் என்றால், மாதம்பட்டி ரங்கராஜிடம் பணம் இல்லை, அவருக்கு கோடிக்கணக்கில் கடன் தான் இருக்கு இது தான் உண்மை. அவர் இதுவரை எனக்கான ஒரு டிரஸ் கூட வாங்கி கொடுத்தது இல்லை.

Madhampatty Rangaraj Joy Crizildaa Interview
Photo Credit:

மாதம்பட்டி ரங்கராஜ்: ஜூலை 15ஆம் தேதி குக் வித் கோமாளியின் நிகழ்ச்சிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற அவர், மீண்டும் வீடு திரும்பவே இல்லை. அதை தொடர்ந்து நான் அவருக்கு போன் செய்தேன். ஆனால், என்னுடைய போனை நம்பரை பிளாக்கில் போட்டு விட்டார்.அது மட்டுமல்லாமல்,விஜய் டிவி அலுவலகத்திற்கும் சென்றிருந்தேன். அங்கேயும் அவர் என்னை சந்திக்கவில்லை. அவர் வந்துவிடுவார் பிரச்சனை சரியாக விடும் என காத்திருந்தேன். இனிமேல் பிரச்சனை சரியாகாது என தெரிந்த பிறகு தான் நான் அவர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். அந்த புகாரை கொடுத்ததற்கு காரணம், என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு, அவர் தான் அப்பா, அந்த குழந்தைக்கு ஒரு நியாயம் வேண்டும் என்பதற்காகத்தான் போராடிக் கொண்டு இருக்கிறேன்.

பல பெண்களுடன் தொடர்பு: எனக்கும் அவருக்கும் திருமணமான விஷயம், அவர்கள் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் தெரியும். ஆனால், அந்த போட்டோவை இணையத்தில் பதிவிடாமல் வைத்திருந்தேன். அதற்கு காரணம், அவரின் தொழில் பாதிக்கப்படக்கூடாது என்பதுதான். ஆனால், ஒரு கட்டத்தில் என் போனை உடைத்து அதில் இருந்த அனைத்து ஆதாரங்களையும் அழித்துவிட்டார். அதன் பிறகு தான், நான் இன்ஸ்டாகிராமில் போட்டோவை பதிவிட்டேன். அதன் பலர், என்னை தொடர்பு கொண்டு அவரை பற்றி பலவிஷயத்தை கூறினார்கள். எனக்கு முன்பாகவே அவர் பல பெண்களுடன் தொடர்பில் இருந்து இருக்கிறார். அதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது. ஆனால் அதை நான் வெளியிட மாட்டேன்.

கதறி அழுத ஜாய்: அன்பான கணவன் மனைவியாகத்தான் இரண்டு ஆண்டுகளாக நானும் அவரும் வாழ்ந்து வந்தோம். என் மீது மிகுந்த அன்பு கொண்டவராகத்தான் மாதம்பட்டி ரங்கராஜ் இருந்தார். திடீரென மாறியதற்கு காரணம் என் வயிற்றில் வளரும் குழந்தைதான். குழந்தை பிறந்துவிட்டால், இந்த உறவு லீகலாக மாறிவிடும் என நண்பர்கள் கூறிய அறிவுரையை கேட்டு தான் அவர் இப்படி நடந்து கொள்கிறார். காசு பணத்தை நான் கேட்கவில்லை, என் குழந்தைக்கு அவர் தான் அப்பா, அந்த உரிமையை தான் கேட்கிறேன். அந்த உரிமைக்காக நான் எத்தனை பிரச்சனை வந்தாலும் போராடுவேன் என ஜாஸ் கிரிஸில்டா கண்ணீருடன் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X