என் மகள் வாழ்க்கையே போச்சு.. கண் பார்வை இழந்த ஜாய் கிரிஸில்டாவின் அம்மா கண்ணீர் பேட்டி
சென்னை: சமையல் கலை நிபுணரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் என்னை திருமணம் செய்து கொண்டு, இரண்டு ஆண்டுகள் குடும்பம் நடத்திவிட்டு, நான் கர்ப்பமாக இருக்கும் இந்த நேரத்தில், என்னிடம் எந்தவிதமான தொடர்பும் இல்லாமல் இருக்கிறார். என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு அவர் தான் அப்பா என ஜாய் கிரிஸில்டா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகார் அளித்து பத்து நாட்களுக்கு மேலாகிவிட்டதால், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், ஜாய் கிரிஸில்டா மற்றும் அவரது அம்மா இருவரும் சேர்ந்து Sivasankari Talks யூடியூப் சேனலுக்கு பேட் அளித்துள்ளார். அதில், என்னுடைய மகள் சினிமாவில் பெரிய இடத்தில் இருந்தால், இரவு பகலாக உழைத்து சம்பாதித்தால், அவள் ஒரு கடுமையான உழைப்பாளி, ஒரு ஆண் போல, அனைத்து வேலைகளையும் செய்து வந்தால், கடைசியில் இந்த மாதம்பட்டி ரங்கராஜ் அவளை இப்படி அழவைத்துவிட்டான். என் மகளுக்கு முதல் வாழ்க்கை சரியாக அமையவில்லை. அந்த வாழ்க்கையில் பல கஷ்டத்தை ஜாய் கிரிஸில்டா அனுபவித்து வந்தால். அப்போது தான் எனக்கு "Cataract surgery" செய்ய வேண்டி இருந்தது. ஒரே நேரத்தில் இரண்டு கண்ணிலும் "Cataract surgery" செய்யப்பட்டது. அப்போது எனக்கு 'பீபி' இருந்ததால் பிரச்சனையாகி பார்வை தெரியாமல் போய்விட்டது.

ஜாய் கிரிஸில்டாவின் அம்மா: மாதம்பட்டி ரங்கராஜ் நன்றாக பார்த்துக்கொள்வார் என்று நினைத்தேன். ஆனால், அவர் என் மகளை கருவை கலைக்க சொல்லி அடித்து துன்புறுத்தி இருக்கிறார். ஜாய் கிரிஸில்டாவை கன்னத்தில் அடித்ததில், அவளுக்கு காதில் பிரச்சனை ஏற்பட்டு அது கேட்காமல் போய் அதற்காக சிகிச்சை எடுத்து வருகிறாள். நான் எவ்வளவோ கஷ்டப்பட்டு என் மகளை வளர்ந்தேன், இதுவரை அவளை நான் அடித்ததே இல்லை. ஆனால், மாதம்பட்டி, அவளை அடித்து கொடுமைப்படுத்தி இருக்கிறார். இந்த விஷயத்தை ஜாய் கிரிஸில்டா என்னிடம் சொல்லவில்லை, என் பேரன், அவனுக்கு 5 வயசு தான் ஆகுது. அவன், பப்பு (அதாவது மாதம்பட்டி) அம்மாவை கட்டில் வைத்து அடித்தார் என்று சொன்னான். இதைகேட்கும் போது ஒரு தாயாக என் மனம் படாதபாடு படுகிறது.
மகளின் வாழ்க்கை போச்சு: என் மகள் அந்த தயாரிப்பாளருடன் போனால், இந்த தயாரிப்பாளருடன் போனால் என்று ஆண்கள், பெண்கள் அனைவரும் பேசுகிறார்கள். அப்படி என் மகள் போய் இருந்தால், சொந்த வீடு, ஆடம்பர வாழ்க்கை, நகை, பணம் என வாழ்ந்து இருப்பாள். மதம்பட்டியிடமே பேரம் பேசி இருப்பாள். ஆனால், அவள், அன்புக்காக ஏங்கினாள். இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் அவமானம் என, ஜாய் கிரிஸில்டா இதை மூடி மறைக்கத்தான் பார்த்தாள். ஆனால், நான் தான், இது போன்ற ஆண்களை சும்மா விடக்கூடாது. பெண்களை அழிக்கும் இது போன்ற ஆண்கள் மீது புகார் அளித்தால் தான், பல ரங்கராஜன்கள் திருந்துவார்கள், நான் உனக்கு துணையாக இருக்கிறேன் என சொல்லி, காவல் நிலையத்தில் நான் தான் புகார் கொடுக்க சொன்னேன். என ஜாய் கிரிஸில்டாவின் தாய் கண்ணீர் மல்க அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











