»   »  கிளாமர் தீவு மாளவிகா

கிளாமர் தீவு மாளவிகா

Subscribe to Oneindia Tamil

மாளவிகாவுக்கு தன்னைப் பற்றி ரொம்பப் பெருமைதான். இல்லாவிட்டால் தனதுஅழகு பற்றி அவரை அவரே புகழ்ந்து பேசுவாரா?

ஹீரோயினாக, குத்தாட்ட சுந்தரியாக, வில்லத்தன நாயகியாக அசத்தல் நடிப்பைகொட்டி வரும் மாளவிகா, கிளாமர் நடிப்பில் தனக்கு ஆட்சேபனை இல்லைஎன்றாலும் கூட ஒரே ஒரு குத்துப்பாட்டுக்கு ஆடுவதெல்லாம் இனிமேல் ஆகாதகாரியம் என்று கூறி வருகிறார்.

அற்புதத் தீவு படத்தில் தான் போட்டுள்ள குத்தாட்டம்தான் தனது கடைசிக் குத்துஎன்றும் கூறியுள்ள மாளவிகா, தனது நடிப்புத் திறமைக்கேற்ற வேடங்களைத் தேடிதேடி நடிக்கப் போவதாக கூறுகிறார்.

எஸ்.ஜே.சூர்யாவுடன் வியாபாரி படத்தில் செமையான வேடம் கிடைத்திருப்பதாககூறும் மாளவிகா, எனது அழகும், நடிப்பும் சேர்ந்தாலே தனி கிளாமர்தான். இதற்குமேல் தனியாக வேறு கிளாமர் காட்ட வேண்டுமா என்றும் புன்னகையுடன் கேட்கிறார்.அதுவும் உண்மைதான் தலை முதல் கால் வரை கலங்கடிக்கும் கிளாமர் தீவுதான்மாளவிகா.

எனது உடல் அமைப்பே வசீகரமானது. அதன் வனப்பும், எழிலும் எனக்கே ரொம்பப்பிடிக்கும் என்றும் பெருமை அடிக்கிறார் மாளவிகா. அப்படி என்னதான் உங்களதுஉடலில் உங்களுக்கு மோகம் என்றால் எனது உடலின் ஒவ்வொரு இஞ்சுமேஅழகுதான். இதில் எதைச் சொல்ல, எதை விட என குழம்புகிறார், நம்மைகிறங்கடிக்கிறார்.

ஆனாலும் தனது கண்கள்தான் ரொம்பவும் கிளாமரானது என்பது மாளவிகாவின்கருத்து.

எனது கண்களைப் பார்த்து யாராலுமே தொடர்ச்சியாகப் பேச முடியாது. தடுமாறிப்போய் விடுவார்கள் என உதட்டைச் சுழித்து புன்னகை சிந்த பெருமைப்படுகிறார்மாளு.

சீ யூ அட் 9 படம் மாதிரியான கேரக்டர் வந்தால் நடிப்பீர்களா என்று கேட்டால், அந்தப்படத்தின் கேரக்டர் அப்படி. அதனால் நடித்தேன். அதேபோன்ற கேரக்டர் வந்தால்பார்க்கலாம்.

இந்த கேரக்டரை ஏன் இவ்வளவு விமர்சிக்கிறார்கள் என்று தெரியவில்லை. இதையேஜூலியா ராபர்ட்ஸோ, ஏஞ்சலீனா ஜூலியோ நடித்திருந்தால் இப்படிப்பேசியிருப்பார்களா?

நான் நடித்தால் மட்டும் விமர்சனமா.? என்னப்பா நியாயம் இது? ஆனால் இனிமேல்ஓவர் கிளாமர் காட்டி நடிக்க மாட்டேன் என்று டிப்ளமேட்டிக்காக பதில் தருகிறார்மாளவிகா.

மாளவிகாவுக்கு எப்படிப்பட்ட ஆத்துக்காரர் வேண்டுமாம் தெரியுமோ? நல்ல ஒசரமா,தைரியமான, கம்பீரமான பையன்தான் புருஷனாக வர வேண்டுமாம். கண்டிப்பாகஅப்படிப்பட்ட ஒரு புள்ளையத்தான் கணவனா ஏத்துப்பேன் என்கிறார்.

தகுதி வாய்ந்த தம்பிமார்கள் விண்ணப்பித்துப் பார்க்கலாம்..

Read more about: malavika in arputha theevu

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil