»   »  சந்திப்போமா?

சந்திப்போமா?

Subscribe to Oneindia Tamil

தான் சினிமாவில் நடித்து சம்பாதித்த பணத்தையும் சொத்துக்களையும் தனது குடும்பத்தினர் பறித்துக் கொண்டதாக போலீசில் புகார்தந்துள்ளார் மீரா ஜாஸ்மீன்.

எர்ணாகுளத்தில் டிஐஜி ஸ்ரீலேகாவை நேற்றிரவு சந்தித்து ஒரு புகாரைக் கொடுத்தார் மீரா. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

நான் நம்பிய அனைவரும் என்னை ஏமாற்றிவிட்டனர். எனக்கு இனி அப்பா, அம்மா, சகோதர, சகோதரிகள் என்று யாரும் கிடையாது. நான்தற்கொலைக்கு முயன்றதாகவும், இயக்குனர் லோகிததாஸ் என் சொத்துக்களைப் பறித்துக் கொண்டதாகவும் எனக்கு மிக வேண்டியவர்களேபொய் செய்திகளை பரப்பி வருகிறார்கள்.

நான் குருவாக மதிக்கும் லோகிததாஸையும் என்னையும் தொடர்புபடுத்தி அவமதித்துள்ளனர். என் பெற்றோரும் சகோதரிகளும் என் பணம்,சொத்துக்களை மோசடி செய்துவிட்டனர். என் பணத்தில் ரூ. 35 லட்சத்தில் ஒரு அபார்ட்மெண்ட், ஒரு மருத்துவமனையைவாங்கியிருக்கிறார்கள்.

ஆனால், அதை என் சகோதரிகள் பெயரில் பதிவு செய்துள்ளார்கள். என் கிரெடிட் கார்டுகளையும் முறைகேடாகப் பயன்படுத்தி எனக்குஏகப்பட்ட நஷ்டம் விளைவித்துவிட்டார்கள். இது குறித்து விசாரித்து என் சொத்துக்களை மீட்க போலீஸ் உதவ வேண்டும் என்றுகூறியுள்ளார் மீரா.

தந்தை மறுப்பு:

இதற்கிடையே மீராவின் தந்தை ஜோசப் பிலிப்ஸ் கூறுகையில்,

மீராவின் பெயரில் ரூ. 1 கோடிக்கு சொத்துக்கள் உள்ளன. இதுவரை மீராவிடம் இருந்து ரூ. 12 லட்சத்தை லோகிததாஸ் சுருட்டியுள்ளார்.மேலும் பணத்தை பறித்து வருகிறார். ஆனால், நாங்கள் மீராவின் பணத்தை தொட்டதே இல்லை.

மீராவை சினிமாவைவிட்டு விலகி விரைவில் திருமணம் செய்யுமாறு கூறி வந்தேன். இந் நிலையில் இப்படி வீட்டை விட்டுவெளியேறியிருக்கிறாள் என்றார்.

லோகிததாஸ் பேட்டி:

மீரா ஜாஸ்மீனுக்கும் எனக்கும் செக்ஸ் தொடர்பு ஏதும் இல்லை, அவர் என்னுடன் வீட்டை விட்டு ஓடி வரவில்லை என்று மலையாளஇயக்குனர் லோகிதா தாஸ் கூறியுள்ளார்.

58 வயதாகும் மலையாள இயக்குனர் லோகிதாதாஸும், 20 வயதே ஆகும் மீரா ஜாஸ்மினும் காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்தகாதலுக்கு மீராவின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால், இந்தக் காதலை மீராவும் லோகிததாசும் மறுத்துவருகின்றனர்.

லோகிததாசிடம் இருந்து மீராவைப் பிரித்து நடிகர் பிருத்விராஜுக்கு அவரைத் திருமணம் செய்து வைக்க மீராவின் குடும்பத்தினர் முயற்சிமேற்கொண்டு வரும் சூழலில் தனது வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் மீரா.

இது குறித்து லோகிததாஸ் கூறுகையில், மீரா ஜாஸ்மின் என்னுடன் ஓடிவரவில்லை. மீரா எனக்கு மகளைப் போன்றவர். அவருக்கும்எனக்கும் உடல் ரீதியாக எந்த உறவும் இல்லை.

சொத்து தொடர்பாக தனது தாய் மற்றும் சகோதரியுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவே மீரா வெளியேறியுள்ளார். மீராவுக்கு ஒருதகப்பன் ஸ்தானத்தில் இருந்து நான் நல்ல மாப்பிள்ளையாகப் பார்த்து திருமணம் செய்து வைப்பேன். அதேபோல எனது படங்கள்அனைத்திலும் மீராவுக்கு நல்ல ரோல் கொடுப்பேன் என்றார் லோகித தாஸ்.

காதலருடன் ஓடிப்போன மீரா?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil