»   »  நான் கருத்தம்மா தங்கச்சி!

நான் கருத்தம்மா தங்கச்சி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மாமதுரை படம் மூலம் தமிழ் ரசிகர்களை மயக்க வைத்த மிதுனா தொடர்ந்து தித்திப்பான கேரக்டர்களில் நடிக்க வைத்து அசத்தப் போகிறாராம்.

மிதுனா வேறு யாரும் அல்ல, கருத்தம்மா படத்தில் நடித்தாரே ராஜஸ்ரீ, அவரோட சொந்த தங்கச்சிதானாம். அக்கா வழியில் தங்கச்சியும் நடிப்புக் களத்தில் குதித்து விட்டார்.

மிதுனா நடிகை ஆனது முதலில் தெலுங்கில்தான். அப்போது அவருக்கு வயசு ரொம்ப சிறிசாம். இதனால் ரொம்பச் சின்னப் பொண்ணா இருக்கே என்று தயங்கிய பல தயாரிப்பாளர்கள், மிதுனாவுக்கு போதிய வாய்ப்பு கொடுக்கத் தயங்கியுள்ளனர்.

இதனால் பட வாய்ப்புகள் அதிகம் இல்லை. அப்படியும் கூட தொடர்ந்து சில தமிழ் படங்களில் நடித்து விட்டாராம் மிதுனா. பிறகு படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

இந்த நிலையில்தான் மாமதுரை பட வாய்ப்பு அவரைத் தேடி போன் மூலம் வந்ததாம்.

மாமதுரை கதையைக் கேட்டதும் ஆஹா, இதுதான் நமக்கேத்த கதை என்று ஒத்துக் கொண்டாராம். நினைத்தது போல மாமதுரை படம் தனக்கு நல்ல பிரேக் கொடுத்துள்ளதாக பூரிப்புடன் உள்ளார் மிதுனா.

மிதுனாவைப் பற்றி சொல்லவே இல்லையே, பொறித்து வைத்த சூடான பஞ்சி போல படு சுறுசுறுப்பாக இருக்கிறார். குஷ்பு இட்லி போல ஒரு பூரிப்பான முகம், கலங்கடிக்கும் கண்கள், துடிதுடிக்கும் உதடுகள், பார்த்தவுடன் பலே போட வைக்கும் உடல்வாகு என பக்காவாக இருக்கிறார் மிதுனா.

மாமதுரை ஷூட்டிங்கின்போது பல காட்சிகளையும் ஒரே டேக்கில் ஓ.கே.வாக்கி அசத்தி விட்டாராம் மிதுனா. அதேபோல பாடல் காட்சிகளிலும் சூப்பராக டான்ஸ் ஆடி, டான்ஸ் மாஸ்டர்களிடமும் குட் கேர்ள் என பெயர் வாங்கினாராம்.

இப்போது பவித்ரன் இயக்கத்தில் மாட்டுத்தாவணி படத்தில் நடிக்கிறார் மிதுனா. இப்படத்தில் மிதுனாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாம். இதனால் இப்படத்தின் மீது ரொம்ப நம்பிக்கையாக இருக்கிறார் மிதுனா.

முதல் படமே வெற்றிப் படம் என்பதால் மிதுனாவுக்கு சந்தோஷம் தாங்கவில்லை. அதிலும் 100 படங்களில் நாயகியாக நடித்து சாதனை படைத்த ரோஜாவே போன் செய்து மிதுனாவை பாராட்டித் தள்ளி விட்டாராம்.

சரி, கிளாமர் எல்லாம் எப்படி என்று கேட்டால், எனக்கென்று எந்த வட்டத்தையும் போட்டுக் கொள்ள விரும்பவில்லை. நடிப்பாக இருந்தாலும் சரி, கிளாமராக இருந்தாலும் சரி, அந்த கேர்கடருக்கு அது பொருத்தமாக இருந்தால் நிச்சயம் நான் செய்வேன்.

கிளாமர் செய்யலாம். அதேசமயம், கிளாமர் மட்டுமே செய்ய முடியாது. குறிப்பாக ஒத்தப் பாட்டுக்கு ஆடுவது என்பது வல்கரானது. எனவே நான் அந்த தப்பெல்லாம் செய்ய மாட்டேன் என்றார் உறுதியாக.

இப்படித்தான் நடிப்பது என்றில்லாமல் எல்லாவகையான கேரக்டர்களிலும் கலந்து கட்டி ரசிகர்களை அசரடிப்பதுதான் மிதுனாவின் லட்சியமாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil