நடிப்பில் அசத்தும் இசையமைப்பாளர் மகன்..அவரே கூறும் சுவாரஸ்ய தகவல்கள் !

சென்னை :வாரிசு நடிகர்கள் திரையுலகில் சாதனை படைப்பது என்பது பல நூற்றாண்டுகளாக நாம் பார்த்து வருகிறோம். பெற்றோர்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்று அவர்களைத்தாண்டி சாதனைகள் படைத்த வரலாறும் உண்டு.

Recommended Video

Jail படத்தில் நடிகராக அறிமுகமாகும் Music Director Sirpy Son Nandhan | Filmibeat Tamil

அந்த வகையில் நாட்டாமை, உள்ளத்தை அள்ளித்தா போன்ற 50க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைப்பாளராக 90's கிட்ஸ்களின் மனதில் இடம் பிடித்த இசையமைப்பாளர் சிற்பியின் மகன் நந்தன்ராம் தற்போது நடிப்பிலும் அசத்தி வருகிறார்.

நந்தன்ராம் பள்ளிப்பருவத்திலேயே 2017ல் படங்களில் நடிக்க வந்திருந்தாலும், தற்போது இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிப்பு மற்றும் இசையில் சமீபத்தில் வெளிவந்து வெற்றியைக்கண்ட ஜெயில் படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இது பற்றி சிற்பி, நந்தன் ராம் இருவரும் பேசியபோது.

எல்லாருக்கும் கிடைக்காது

எல்லாருக்கும் கிடைக்காது

கேள்வி : உங்கள் மகனின் வெற்றிய எப்படி பாக்குறீங்க?

சிற்பி பதில் : ஜெயில் படத்துல என் மகனுக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைச்சதுல ரொம்ப சந்தோஷம். ரொம்ப நல்ல கேரக்டர் குடுத்துருக்காங்க. நன்றி. எல்லா நேரமும் இது போல வாய்ப்புகள் அமைஞ்சிடுமாங்கிறது சந்தேகம் தான். சாதாரண கேரக்டர்கள் அமையும். ஆனா அழுத்தமான பர்ஃபாமன்ஸ் செய்யக்கூடிய கதாப்பாத்திரங்கள் அமையறது எல்லாம் உண்மையாவே என் மகனுக்கு கிடைச்சது அதிர்ஷடம் தான். இந்த வாய்ப்பு கொடுத்த பிடி செல்வகுமார், ஸ்ரீதரன் இருவருக்கும் இந்த நேரத்துல நான் நன்றி சொல்லிகிறேன்.

முதல்படம்

முதல்படம்

கேள்வி : ஏற்கனவே உங்க மகன் நடிச்சிருக்காரே ?

சிற்பி பதில் : முதல் படி ஆரம்பம் நல்லா இருக்கனும்ங்கிறது முக்கியமான ஒரு விஷயம். பள்ளிப்பருவத்துல அவன் நடிச்சிருந்தாலும் ஜெயில் படத்துல ரொம்பவே அழுத்தமான கேரக்டர் கிடைச்சிருக்கு. அதுலயும் இதுல ஜிவி பிரகாஷ் மாதிரியான பெரிய ஹீரோவோட சேர்ந்து அவன் வரும் போது, அவருடைய ரசிகர்களும் என் மகன பார்க்கும் போது நிச்சயமா இவனோட எதிர்காலமும் நல்லாருக்கும், வளரும்ன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.

வெயில்ல அலைஞ்சேன்

வெயில்ல அலைஞ்சேன்

கேள்வி : இந்த படத்துக்காக என்னவெல்லாம் பயிற்சி எடுத்தீங்க ?

நந்தன் ராம் பதில் : என் பெயர் நந்தன்ராம். ஜெயில் படத்துல ராக்கி-ங்கிற கதாப்பாத்திரத்துல நடிச்சிருக்கேன். இந்த படத்துக்காக கலர் கம்மி பண்ணனும். அதுக்கும் முயற்சி பண்ணேன். வெயில் ல அலைஞ்சி ஸ்கின் கலர் மாத்த முயற்சி பண்ணேன். முடியல. பட்னம் ரஷீத், ஜெய்பீம் படத்துக்கெல்லாம் மேக்கப் மேனா பண்ணிருக்காரு. அவரோட உதவியில கலர் மேட்ச் பண்ணி , அந்த கதாப்பாத்திரத்துக்கு தேவை உள்ளது போல நடிச்சிருந்தேன். நிறைய கத்துகிட்டேன். அந்த கேரக்டர் பேசுற ஸ்லாங், பாடிலாங்குவேஜ் க்காக அது சார்ந்த மக்கள் இருக்க இடமெல்லாம் போயி பார்த்து, பேசி பழகி தெரிஞ்சிகிட்டேன். நல்ல வேலை வாங்கினாங்க. நானும் என்னோட பெஸ்ட்ட குடுத்துருக்கேன்.

நடிப்புதான் வேணும்

நடிப்புதான் வேணும்

கேள்வி : ஒரு தந்தையா மகனோட வெற்றிய எப்படி பாக்குறீங்க ?

சிற்பி பதில் : ஒரு தந்தைக்கு தன் பிள்ளைகளோட வளர்ச்சிய பாக்குறதுதான் பெரிய வரம். அது போல என்னோட துறைக்கு வரியான்னு கேட்டேன் அவர் கிட்ட, ஆனா நடிப்புதான் என்னோட பேஷன்னு சொல்லிட்டாரு.

தலையிட மாட்டேன்

தலையிட மாட்டேன்

கேள்வி : அடுத்து என்ன மாதிரியான படங்கள் ல நந்தன் ராம் நடிப்பாரு?

சிற்பி பதில் : அவரோட சுதந்திரத்தில நான் தலையிடறது கிடையாது. இப்ப கூட அவன் எந்த மாதிரி படங்கள், யார் கூட நடிக்கனும் எல்லாமே அவன் தான் முடிவு பன்றான். இந்த படம் அதுக்கு ஒரு நல்ல தொடக்கம்ன்னு நெனைக்கிறேன். தொடர்ந்து இதுபோல நல்ல டைரக்டர்கள் படங்கள் ல இவன் நடிச்சி பேரும் புகழும் அடையம்ங்கிறதுதான் என்னோட ஆசை என்று அருவி போல புன்னகையுடனும் சந்தோஷமாகவும் பகிர்ந்து கொண்டார் இசையமைப்பாளர் சிற்பி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X