»   »  நமீதாவுக்குப் பிடித்த குதிர

நமீதாவுக்குப் பிடித்த குதிர

Subscribe to Oneindia Tamil

இதுவரை நான் நடித்த படங்களிலேயே பச்சக்குதிரதான் மிகவும் திருப்தியைக் கொடுத்த படம் என கூறியுள்ளார் நெட்டக் குதிரை நமீதா.

நெகு நெகு நமீதாவிடம் எப்படிப் பேசினாலும், என்ன பேசினாலும் அதற்கு கிறங்க வைக்கும் அழகான பதிலைக் கொடுக்க நமீ தவறுவதே இல்லை.

அலைபாயும் கூந்தல், அசர அடிக்கும் பார்வை, நெஞ்சு குலைய வைக்கும் கிளாமர் என ஒரு திமிசாகத்தான் இருக்கிறார் நமீதா. ஒரு ஓய்வான சாயங்கால நேரத்தில் நமீதாவுடன் சம்சாரித்தபோது, சலசலவென பதில் கொடுத்தார் கலகல நமீதா.

நான் நிறையப் படங்களில் நடித்து விட்டேன். எங்கிருந்தோ வந்த எனக்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைத்தது எதிர்பாராத ஒன்று. இதற்காக தமிழ் ரசிகர்களுக்கு எனது வணக்கத்துக்குரிய நன்றிகள்.

நிறையப் படங்களில் நடித்து விட்டாலும் அத்தனையிலும் கிளாமர்தான் முக்கியமானதாக இருந்தது. ஆனால் பச்சக்குதிர படம்தான் எனது நடிப்பாற்றலையும் தூக்கிக் கொண்டு வந்து வெளியே போட்ட படம். அதனால் எனக்கு அந்தப் படம் மட்டும் சற்று விசேஷமானது.

வெறுமனே கிளாமர் காட்டி நடிப்பதை விட நல்ல கேரக்டர்களில் நடிக்கவே ஆசைப்படுகிறேன். இப்போது நடித்துக் கொண்டிருக்கும் அழகிய தமிழ் மகன் படத்தில் எனக்கு இரண்டு பாடல்கள் (அடடா, அமர்க்களம்). அத்தோடு சில சீன்களில் நடிக்கவும் வாய்ப்பு உள்ளது.

அப்புறம் பில்லா படத்தில் எனது கேரக்டர் பேசப்படும். ஒரிஜினல் பில்லாவிலும் பிரவீணா கேரக்டர் வெகுவாக பேசப்பட்டது. அந்தக் கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது பெருமையாக உள்ளது. அப்புறம் கெட்டவன் படத்திலும் நல்ல கேரக்டர்தான்.

வேகமாக பேசிய நமீதாவை, ஹோல்டேன், ஹோல்டேன் என்று நிறுத்தி, சிம்புவுடன் நடிக்க முதலில் மறுத்தீர்களே, இப்போது மட்டும் எப்படி ஒப்புக் கொண்டீர்கள் என்று நமீதாவிடம் கிடுக்கிப் பிடி போட்டபோது, மன்மதன் வாய்ப்பைச் சொல்கிறீர்களா. அப்படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடத்தான் கேட்டார் சிம்பு.

ஆனால் குத்துப் பாட்டு மட்டும் என்றால் வேண்டாம், கூட நாலு சீன் நடிப்பதாக இருந்தால் சொல்லுங்கள், கண்டிப்பாக செய்கிறேன் என்றுதான் கூறினேன். இப்போது கெட்டவன் படத்தில் எனனை நாயகியாகவே நடிக்க அழைத்தார். மறுக்க முடியுமா, உடனே ஒத்துக் கொண்டேன் என்றார் நமீதா.

நமீதாவுக்கு ரொம்பப் பிடிச்சது ஸ்வீட்ஸ்தானாம். அதுக்கு அடுத்துப் பிடித்தது கிளாமராம். எப்போதும் கிளாமராகதான் டிரஸ் செய்வாராம், அது நமது மனசை இளமையாக வைத்திருக்க உதவும் என்கிறார் கேட்டால்.

நமீதாவின் சூரத் வீட்டில் மீனாட்சி ஆட்சியாம். அதாவது நமீதா சொல்படிதான் வீட்டில் அத்தனை பேரும் கேட்பார்களாம். நமீதா சொன்னா அதுக்கு அப்பீலே கிடையாதாம்.

நீங்க எப்படி நடித்தாலும் ரசிகர்களும் ஆட்சேபிக்க மாட்டார்கள். ஸோ, தொடர்ந்து குதிங்க, அதாவது நடிங்க!

Please Wait while comments are loading...