»   »  நமீதாவின் பில்லா பெருமை

நமீதாவின் பில்லா பெருமை

Subscribe to Oneindia Tamil

பில்லாவில் அஜீத்துடன் ஜோடியாக நடிப்பது பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளதாக நமீதா கூறியுள்ளார்

ரஜினிகாந்த்தின் பில்லா அஜீத் நடிக்க ரீமேக் ஆகிறது. மலேசியாவில் கேம்ப் போட்டு பில்லா படத்தி்ன் ஷூட்டிங் நடந்து வந்தது.

மலேசிய ஷூட்டிங் முடிந்து அஜீத், நமீதா உள்ளிடடோர் சென்னை வந்து சேர்ந்தனர். பில்லாவில் பிரவீணா நடித்த கேரக்டரில் நமீதா நடிக்கிறார். பில்லாவை ஒரு தலையாக காதலித்து அவர் கையாலேயே உயிரிழக்கும் கேரக்டர் அது.

மலேசிய ஷூட்டிங் குறித்து நமீதாவிடம் கேட்டபோது, ஒரே நேரத்தில் விஜய்யுடனும், அஜீத்துடனும் நடிக்கும் நடிகை நானாகத்தான் இருப்பேன். அது எனக்குப் பெருமையாக உள்ளது.

முன்பு ஒரே நேரத்தில் ரஜினி, கமல்ஹாசனுடன் இதுபோல ஸ்ரீபிரியாவும், ஸ்ரீதேவியும் இணைந்து நடித்தனர். அதன் பின்னர் நான் விஜய், அஜீத்துடன் ஒரே நேரத்தில் நடிக்கிறேன்.

அஜீத் ஹேட்ண்ட்சம். விஜய்யைப் பற்றிச் சொல்ல வேண்டாம். வாய்ப்பு கொடுத்ததற்காக அவர்களைப் புகழவில்லை. உண்மையிலேயே இருவரும் ஜெண்டில்மேன்கள். இருவரும் தங்களது தொழிலை மதிக்கிறார்கள், காதலிக்கிறார்கள். கடுமையாக உழைக்கிறார்கள் என்றார் நமீதா.

விஜய்யுடன் நமீதா நடித்து வரும் அழகிய தமிழ் மகனில் நமீதாவின் போர்ஷன் முடிந்து விட்டதாம்.பில்லா, அழகிய தமிழ் மகன் படங்களைத் தொடர்ந்து சுந்தர்.சி.யுடன் பெருமாள் படத்தில் நடிக்கிறார் நமீதா. பின்னர் மல்லிகை மலரே என்ற படத்திலும் நடிக்கவுள்ளார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil