»   »  என் மகனின் காதல்.. பாரதிராஜா

என் மகனின் காதல்.. பாரதிராஜா

Subscribe to Oneindia Tamil

எனது மகன் மனோஜை மணக்கப் போகும் நந்தனா, பெண்களுக்கே உரிய அத்தனை சிறந்த குணங்களையும்பெற்ற நல்ல பெண் என இயக்குநர் பாரதிராஜா பெருமிதம் தெரிவித்துள்ளார்.

பாரதிராஜாவின் மகன் மனோஜுக்கும், நடிகை நந்தனாவுக்கும் காதல் மலர்ந்தது. சாதுர்யன் என்ற படத்தில்இருவரும் இணைந்து நடித்தபோது ஏற்பட்ட இந்தக் காதல் இப்போது இரு வீட்டாரின் சம்மதத்துடன்கல்யாணத்தில் முடியவுள்ளது.

மனோஜ்-நந்தனா கல்யாணம் வருகிற 19ம் தேதி கேரள முறைப்படி கோழிக்கோட்டில் நடைபெறுகிறது.இவர்களின் திருமண வரவேற்பு டிசம்பர் 1ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது.

தனது மருமகள் குறித்து பாரதிராஜா கூறுகையில்,

நான் எடுத்த பல படங்கள் காதலை மையமாகக் கொண்டவைதான். காதலர்களுக்கு ஆதரவாகத்தான் எனதுபடங்களில் காதலைச் சொல்லியுள்ளேன்.

அதைப் பார்த்த பலரும் என்னிடம், நிஜ வாழ்க்கையிலும் காதலுக்கு ஆதரவு கொடுப்பீர்களா என்றுகேட்டுள்ளனர். நானும் காதலித்துள்ளேன். எனது வாழ்க்கையில் அது நிறைவேறவில்லை. ஆனால் எனது மகனின்வாழ்க்கையில் அது நிறைவேறியுள்ளது எனக்கு பரம சந்தோஷம்.

மனோஜ், நந்தனா காதலை உடனடியாக நான் ஆமோதித்து விடவில்லை. அவர்களின் காதல் எந்த அளவுக்குஉறுதியானது, உண்மையானது என்பதை பரீட்சித்துப் பார்க்க விரும்பினேன். விட்டுப் பிடிக்க முடிவு செய்தேன்.இதற்காக ஒன்றரை வருடம் சோதனை வைத்தேன்.

ஆனால் இருவரும் படு உறுதியாக இருந்தனர். சின்ன சலனத்திற்கு கூட ஆட்படவில்லை. எந்த நிலையிலும்,எங்களால் வாழ முடியும் என்பதை நிரூபித்தார்கள். இதையடுத்தே திருமணத்தை நிச்சயித்தோம்.

நந்தனா மிகவும் நல்ல பெண். நான் மொத்தமே 3 முறைதான் அவரைப் பார்த்து பேசியிருப்பேன். ஆனால் அந்தசந்திப்பிலேயே அவர் புத்திசாலி, ஒரு பெண்ணுக்குரிய அத்தனை நல்ல குணங்களும் இருப்பதை தெரிந்துகொண்டேன் என்று பெருமைப்பட்டுள்ளார் பாரதிராஜா.

திருமணத்திற்குப் பிறகு இயக்குநராக அவதாரம் எடுக்கவுள்ளாராம் மனோஜ். அதுதவிர நடிப்பையும் தொடரப்போகிறாராம்.

அலைகளுக்கு ஓய்வே இல்லை..

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil