»   »  நந்திதாவின் செலக்ட் குத்து!

நந்திதாவின் செலக்ட் குத்து!

Posted By:
Subscribe to Oneindia Tamil

குத்துப்பாட்டிலும் ஒரு கெளரவம் பார்க்கும் ஒரே நடிகை ஈர நிலம் நந்திதாவாகத்தான் இருக்க முடியும்.

ஈர நிலத்தில் நாயகியாக வந்த நந்திதா அதன் பின்னர் ஆதரவற்றோர் பட்டியலில் சேர்ந்து விட்டார். முக்கி,முணகியும் தனி நாயகி வாய்ப்பே கிடைக்காமல் போயிற்று.

இருந்தாலும் மனம் தளர்ந்து விடாமல் கிடைக்கிற வாய்ப்புகளை பிடித்துக் கொண்டு பிக்கப் ஆக ஆரம்பித்தார்.செகண்ட் ஹீரோயின் வாய்ப்பும், சில்லுன்னு குத்துப்பாட்டுக்கு ஆடும் வாய்ப்புமே அதிகம் வந்தது.

எதையும் விடுவதில்லை என்ற முடிவுக்கு வந்து விட்ட நந்திதாவுக்கு இவையும் கூட அமிர்தமாகவே தோன்றின.நாளை படத்தில் இவர் போட்ட குத்துப் பாட்டால் கவரப்பட்ட பல இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும்,நந்திதாவை தங்களுடைய படத்திலும் ஒரு குத்து குத்தி விட்டுப் போகுமாறு அன்புடன் அழைக்கிறார்களாம்.

இதனால் அம்மணியை நோக்கி ஏகப்பட்ட குத்துப் பாட்டுக்கள் வந்து குவிந்தவண்ணம் இருக்கிறதாம்.இருந்தாலும் அவற்றில் தனக்குப் பிடித்தமான படங்களை மட்டும் செலக்ட் செய்து குத்தி வருகிறாராம் நந்தி.

குத்துப் பாட்டிலும் செலக்ட் செய்து ஆடுகிறீர்களே, அது ஏன் என்று தெரியாத்தனமாக கேட்டு விட்டோம்.அவ்வளவுதான், பெரிய விளக்கமே அளித்து விட்டார் நந்திதா.

குத்துப் பாட்டில் ஆடினாலும் கெளரவமாக இருக்க வேண்டும் என்ற கொள்கையுடன் உள்ளேன். ஆபாசமாகஒருக்காலும் ஆட மாட்டேன். அதனால்தான் ஆபாசம் கலக்காத குத்துப் பாட்டாக தேர்வு செய்து ஆடுகிறேன்.

காசுக்காக ஆட்டம் போடுவதில் எனக்கு விருப்பம் இல்லை. நாம் ஆடும் ஆட்டம் நாளு பேரைக் கெடுக்கும்விதத்தில் இருக்கக கூடாது என்று விவரித்தார் நந்திதா.

வெறும் குத்துப் பாட்டு வாய்ப்பு மட்டும் நந்திதா வசம் இல்லையாம். காசு இருக்கணும், வசந்தம் வந்தாச்சு ஆகியபடங்களில் ஹீரோயினாகவும் அசத்தி வருகிறாராம்.

ஹீரோயின் வாய்ப்பு வந்தாலும் கூட தனக்குத் திருப்தியாக இருந்தால் குத்துப் பாட்டையும் தொடருவேன்,செகண்ட் ஹீரோயின் வாய்ப்பையும் தட்ட மாட்டேன் என்று படு பிராக்டிகலாக பேசுகிறார் நந்திதா.

பரவாயில்லை, பொழச்சுக்குவாரு!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil