»   »  நான் பேசுனா நாறிடும்: நயனதாரா

நான் பேசுனா நாறிடும்: நயனதாரா

Posted By:
Subscribe to Oneindia Tamil

என்னைப் பற்றி தேவையில்லாமல் குற்றம் சாட்டியுள்ளார் சிம்பு. அவரைப் பற்றி நான்பேச ஆரம்பித்தால், மிகவும் அசிங்கமாகி விடும், நாறிப் போய் விடும் என நயனதாராகூறியுள்ளார்.

சிம்பு-நயனதாரா எந்தளவுக்கு பின்னிப் பிணைந்து நட்பு கொண்டிருந்தார்களோ,அதை விட பல மடங்கு துவேஷம் கொண்ட எதிரிகளாகிவிட்டனர்.

சிம்புவால்தான் நான் பட வாய்ப்புகளை இழந்தேன், பல விஷயங்களை இழந்தேன்என நயனதாராவும், என்னைக் கல்யாணம் பண்ணச் சொல்லி கதறி அழுதார் நயனதாராஎன சிம்புவும் சரமாரியாக பேசி வருகின்றனர்.

இந் நிலையில் சிம்பு தன்னைப் பற்றிச் சொன்ன விஷயங்களை மறுத்துள்ளநியனதாரா, இத்தோடு சிம்பு விட்டு விட்டால் நல்லது, இல்லாவிட்டால் நான்அவரைப் பற்றிய பல விஷயங்களை சொல்ல வேண்டி வரும், அப்படிச் சொன்னால்நாறிப் போய் விடும் என எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து நயன்ஸ் கூறுகையில், நான் தாலி கட்டச் சொல்லி சிம்புவைவற்புறுத்தவில்லை. அவர்தான் என்னிடம், என்னைக் கட்டிக் கொள்ளச் சொல்லிகெஞ்சினார், கதறினார். நான்தான் இன்னும் கொஞ்ச நாள் போகட்டும். இப்போதுதான்சம்பாதிக்க ஆரம்பித்திருக்கிறோம். செட்டில் ஆன பிறகு திருமணம் குறித்துயோசிக்கலாம் என்றேன்.

என்னதான் அன்பாக இருந்தாலும், கல்யாணம் பண்ணிக்கோ என்று நான் ஒருபோதும்கெஞ்ச மாட்டேன். நானும் அவரும் பிரிய ஆயிரம் காரணங்கள் இருக்கலாம்.இருவருக்கும் இடையே நிறைய நல்ல விஷயங்களும், நிறைய கெட்டவிஷயங்களும் நடந்துள்ளன.

அது இருவருக்கும் மட்டுமே தெரிந்த விஷயங்கள். ஒரு நடிகை ஒரு ஆளுடன்இருந்தால் ஆட்டோமேட்டிக்காக பட வாய்ப்புகள் அந்த நடிகைக்கு அதிகம் வராது.ஆனால் எனக்கு சிம்புவுடன் பழக்கம் இருந்த காலத்திலும் கூட தமிழிலும்,தெலுங்கிலும் படங்கள் வந்து கொண்டுதான் இருந்தன.

சிம்புவை விட்டு நான் பிரிந்தபோது அவரைக் காயப்படுத்துவது போல நான் ஒருவார்த்தை கூட பேசவில்லை. என்னாலும் அழ முடியும். தன்னை கல்யாணம் பண்ணச்சொல்லி நான் கத்தியால் கையை கிழித்துக் கொண்டதாகவும், கதறி அழுததாகவும்சிம்பு கூறியுள்ளார். ஆமாம், செய்தேன்.

அதே நேரத்தில் அவரைப் பற்றி நான் சொல்ல வாய் திறந்தால் அசிங்கமாகி விடும்,நாறிப் போய் விடும் என்றார் நயனதாரா காட்டமாக.

இது குறித்து சிம்புவின் தந்தை டி.ராஜேந்தரிடம் கேட்டபோது, இதில் நான் சொல்லஎன்ன இருக்கு. சேர்ந்து இருந்தார்கள், இப்போது பிரிந்துவிட்டோம் என்கிறார்கள். நோகமெண்ட்ஸ் என்றார்.

இந்த பஞ்சாயத்து எங்கோ போய் முடியுமோ..

இதற்கிடையே ரஜினியின் சிவாஜி படத்தில் நயனதாரா ஒத்தை பாட்டுக்கு டான்ஸ்ஆடப் போன விவகாரத்தில் தான் சிம்புவுக்கும் நயனதாராவுக்கும் இடையே மோதல்வெடித்ததாகக் கூறப்படுகிறது.

Read more about: nayanatara warns simbu

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil