»   »  காதலருடன் நிலா குடித்தனம்

காதலருடன் நிலா குடித்தனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

நிலா முதல் படத்தில் நடிக்க வந்ததிலிருந்தே அவரைச் சுற்றி பல்வேறு வதந்திகளும், சர்ச்சைகளும் கூடவே ஓடிவந்து கும்மியடித்து வருகின்றன. இப்போது நிலாவின் காதலர் பற்றிய புதுச் செய்தி கோலிவுட்டில்கும்மாளமிட்டுக் கொண்டிருக்கிறது.

அன்பே ஆருயிரே படத்தில் நிலா நடித்தபோது முழுக்க முழுக்க இயக்குநர்-நடிகர் எஸ்.ஜே.சூர்யாவின்கட்டுப்பாட்டில் இருந்தார். சூர்யா சொன்னபடியெல்லாம் கிளாமரை அள்ளிக் கொடுத்த நிலா, அதற்குப் பிறகுசூர்யாவுடன் டூ போட்டு விட்டு போய் விட்டார்.

அதற்குப் பிறகு ஜாம்பவான் படத்தில் பிரஷாந்த்துடன் ஜோடி போட்டு நடித்தார் நிலா. படப்பிடிப்பின்பாதியிலேயே பெரும் பஞ்சாயத்து நடந்தது. அழுக்குத் தண்ணியில் குளிக்க வைத்து கொடுமைப்படுத்தியதாககூறி பாதி ஷூட்டிங்கிலிருந்து ஓடிப் போனார் நிலா. பிறகு சமாதானப்படுத்தி கூட்டி வந்து மிச்ச காட்சிகளைமுடித்தார்கள்.

அப்படி நிலா நடித்த ஜாம்பவான் ரிலீஸாகி வந்த சுவடே தெரியாமல் ஓடியும் போய் விட்டது. இப்போது லீபடத்தில் நடித்து வருகிறார் நிலா. இந்தப் படப்பிடிப்பிலும் கூட ஏகப்பட்ட லொள்ளுத்தனங்களை செய்தாராம்நிலா.

நிலாவின் கோக்கு மாக்குகளை சமாளித்து ஒரு வழியாக அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை முடித்துவிட்டார்கள்.படப்பிடிப்பின்போது நிலாவுடன் ஒரு கட்டுமஸ்து வாலிபர் கூடவே வந்து போனாராம். அவர் வேறு யாருமல்லநிலாவின் நீண்ட நாள் காதலர் என்று பேச்சு எழுந்துள்ளது.

இருவரும் ஒரே வீட்டில்தான் ஜாகையாம். இதைப் பற்றி நிலாவிடம் கேட்டால், இதையெல்லாம் ஏன்கேட்கிறார்கள், பேசுகிறார்கள் என்றே தெரியவில்லை.

இது எனது தனிப்பட்ட விஷயம். நான் எனது காதலருடன் சேர்ந்துதான் வாழ்கிறேன். இதில் என்ன தப்பு? இதைப்பற்றி மற்றவர்கள் ஏன் கவலைப்பட வேண்டும்?

நான் முன்பு நியூயார்க்கில் வேலை பார்த்தபோது (அங்கே என்ன வேலையோ!) இருவருக்கும் பழக்கம்ஏற்பட்டது. நியூயார்க்கில் அவர் கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ளார். இப்போது 3 வருடமாக ஒரேகுடித்தனம்தான் (!). சீக்கிரமாக கல்யாணம் செய்து கொள்ளப் போகிறோம்.

இதில் ஒரு பிரச்சினையும் இல்லை. கல்யாணத்திற்கு முன்பே சேர்ந்து வாழ்வதால் பல பிரச்சினைகளை தீர்க்கமுடியும். விவாகரத்து போன்றவைகளும் குறையும் என்று படு தில்லாலங்கடியாக பேசுகிறார் நிலா.

அப்படீன்னா தொடர்ந்து நடிப்பீங்களா என்று கேட்டால், இப்போது லீ படத்தில் நடிக்கிறேன். கில்லாடி படத்திலும்நடிக்கிறேன். இந்திப் படத்தில் நடிக்கப் போகிறேன். தொடர்ந்தும் நடிப்பேன் என்கிறார் நிலா.

நிலா இனி வேறு யாருக்கும் இல்லை, இல்லை, இல்லை..

Read more about: actress nila in love

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil