இனிமே வில்லியாக நடிக்க மாட்டேன் -நிவிஷா உறுதியா சொல்லியிருக்காங்க!
சென்னை : தெய்வமகள் துவங்கி பல சீரியல்களில் சிறப்பாக நடித்து தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளவர் நடிகை நிவிஷா.
Recommended Video
தற்போது இவர் அம்மன் 2 சீரியலில் லீட் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இவர் ஓவியா சீரியலில் வில்லியாக நடித்து புகழ் பெற்ற நிலையில் இனிமேல் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என்று உறுதிபடக் கூறியுள்ளார்.

நடிகை நிவிஷா
நடிகை நிவிஷா தெய்வமகள் சீரியல் மூலம் பிரபலமானவர். இந்த சீரியலில் இவர் சிறிய ரோலில் நடித்து இருந்தாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து பல சீரியல்களில் அவர் நடித்து வருகிறார்.

அம்மன் 2 சீரியல்
இவர் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அபிராமி, ஓவியா போன்ற சீரியல்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார். தற்போது அம்மன் 2 சீரியலில் லீட் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சூப்பர் பேட்டி
இந்த சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து கொண்டு அவர் நமது தமிழ் பில்மிபீட்டிற்காக தன்னுடைய கேரியர் உள்ளிட்ட பலவற்றை பகிர்ந்து கொண்டார்.

சவாலான நெகட்டிவ் ரோல்
தான் நடித்த எல்லா கதாபாத்திரங்களும் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் ஆனால் நெகட்டிவ் ரோலில் தன்னால் நடிக்க முடியாது என்று ஆரம்பத்தில் கூறப்பட்ட நிலையில் அதை சவாலாக செய்து நெகட்டிவ் ரோல் என்றால் கூப்பிடு நிவிஷாவை என்ற அளவிற்கு தான் பெயர் பெற்றதாக கூறியுள்ளார்.

இனி வில்லி கேரக்டர் இல்லை
ஆனால் தொடர்ந்து தான் வில்லி கேரக்டரில் நடிக்கப் போவதில்லை என்று முடிவு செய்துள்ளதாகவும் லீட் கதாபாத்திரங்களில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாகவும் நிவிஷா கூறியுள்ளார்.

ஒரு வருடம் வீட்டில் சும்மா இருந்த நிவிஷா
நெகட்டிவ் கதாபாத்திரங்களை தவிர்க்கும் வகையில் தான் ஒரு வருடம் எந்த சீரியலிலும் நடிக்காமல் வீட்டில் இருந்ததாகவும் நிவிஷா கூறியுள்ளார். தான் சீரியலில் நடித்தாலும் நடிக்காவிட்டாலும் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வரும் ரசிகர்களுக்கும் இந்த நேரத்தில் அவர் நன்றி கூறியுள்ளார்.
வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளை தான்
தற்போது திருமணம் குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் வீட்டில் மாப்பிள்ளை பார்த்தால் திருமணம் செய்து கொள்வேன் என்றும் நிவிஷா கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











