»   »  பத்மப்பிரியாவுக்கு பிடித்த சூர்யா!

பத்மப்பிரியாவுக்கு பிடித்த சூர்யா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பத்மப்பிரியாவுக்கு மனசும், வாயும் மட்டும் பெரிசில்லை, அவருடைய ஆசையும் அம்புட்டுப் பெரிசாகஇருக்கிறது.

வாய் திறந்தால் சரவெடியாக பேசித் தள்ளும் (சமயத்தில் அறுத்து?) பத்மா, படு ஜாலி பொண்ணு. சினிமாவில்பார்க்கும் பத்மாவுக்கும், வீட்டில் ஹாயாக சுற்றிக் கொண்டிருக்கும் பத்மாவுக்கும் 6 வித்தியாசம் போட்டுப்போர்க்கலாம். அவ்வளவு சேஞ்ச்.

நிற்காமல் ஓடிக் கொண்டிருக்கிறார் பத்மாத்தா. பளிச் சிரிப்பு, படபடப் பேச்சு என ஓடியவரை உட்கார வைத்துவாயை நோண்டினோம். சினிமாவில் சின்னதாக ஒரு ரவுண்டு வந்தாச்சு, அப்புறம் திடீர்னு காணவில்லையேஎன்று கேட்டோம்.

அதுவா, தமிழ், மலையாளம் என இரு மொழிகளிலும் நான் யார் என்பதை நிரூபித்து விட்டேன். நல்ல நல்ல படவாய்ப்புகள் இப்போதும் வந்து கொண்டேதான் உள்ளன. இப்படியேப் போய்க் கொண்டிருந்தால் போராகிவிடுமே, அதனால்தான் இப்போது சுற்றுச்சூழல் குறித்த மேல் படிப்பை படித்துக் கொண்டிருக்கிறேன் என்றார்.

நல்ல நடிகைன்னு பேரெடுத்தாச்சு, இப்படிய கொஞ்ச காலம் நடிப்போம். அப்புறம் இயக்கலாம்னு ஒரு ஆசைஇருக்கு. படிப்படியாக அதை செய்வேன் என்று தொடரும் பத்மாவுக்கு, படு ஜாலியான, கலகலப்பானபொண்ணாக ஒரு படத்தில் நடிக்கும் ஆசையும் இருக்கிறதாம்.

சேரன் சார்தான் எனக்கு ரொம்பப் பிடிச்ச டைரக்டர். அவரோட படங்கள்ல உணர்வுகளுக்கு உயிர் கொடுப்பார்.பூவோடு சேர்ந்த நாறும் மணக்குமே, அதுபோல அந்த கேரக்டர்களுடன் சேர்ந்து நாமும் பேசப்படுவோம்.

பத்மாவுக்குப் பிடிச்ச ஹீரோ யார் தெரியுமா? ஜோதிகாவின் ஊட்டுக்காரர்தானாம். அய்யோ, என்ன ஹேன்ட்சம்என்று சூர்யாவைப் பற்றி ஜொள்ளு விடுகிறார். அப்புறம் விக்ரம், ஜீவாவையும் பிடிக்குமாம். ஆர்யாவையும்பிடிக்குமாம்.

சினிமாவில் ஒரு கட்டத்துக்கு மேல் போனால் நடிகைகளுக்கு வாய்ப்புகள் மிகவும் குறைந்து விடும். அப்போதுஎன்ன செய்வீர்கள்.?

அதுக்காகத்தான் நல்லா படிச்சு வச்சிருக்கேனே (பார்ட்டி எம்.பி.ஏ). அதப் பயன்படுத்தி தப்பித்து விடுவேன்.அதுவும் இல்லாட்டி டைரக்ஷனில் குதித்து விடுவேன். அது எனது ஆம்பிஷனும் கூட.

அப்புறம் இன்னொரு பெரிய ஆசையும் இருக்கு. அதாவது இந்த நாட்டையே கட்டி ஆளனும்கிற ஆசை,நிஜமாகவே இப்படி ஒரு ஆசை இருக்கு சார். இதில் எது நடந்தாலும் எனக்கு நல்லது. நாட்டுக்கு நல்லதான்னுஎனக்குத் தெரியாது என்று படு குறும்பாக சிரித்து ஓடுகிறார் பத்மா.

பலே பாண்டியம்மா!

Read more about: padmapriyas favorite hero

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil