twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இது போல படம் எடுங்க பயங்கர ஹிட் ஆகும் –வைரல் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி ஓபன் டாக் !

    |

    சென்னை :சென்னைக்கு மீண்டும் ரெட் அலர்ட் வந்துள்ள நிலையில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. மீண்டும் சென்னை மழையால் மிதக்குமா என்ற அச்சம் லேசாக மக்கள் மத்தியில் உள்ளது.

    Recommended Video

    வீர தீர செயல்களுக்காக வாங்கிய விருதுகள் அதிகம் | Inspector Rajeshwari Exclusive | Filmibeat Tamil

    சமீபத்தில் வைரலான சப் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஒருவரை தன் தோளில் தூக்கிப்போட்டுக்கொண்டு வந்து அவரின் உயிரை காப்பாற்றிய செய்தி பரபரப்பாக பேசப்பட்டது.

    சினிமாவைப் பற்றியும் அதில் போலீஸ் சித்தரிக்கப்படும் விதங்கள் பற்றியும், தான் கடந்து வந்த பாதைகளை பற்றியும் நமது பிலிமிபீட் தளத்திற்கு பகிர்ந்து கொண்டார் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி.

    தன்னை விட 5 வயது சிறிய நடிகரை திருமணம் செய்யும் பிரபல நடிகை... கல்யாணம் எங்கேன்னு பாருங்க? தன்னை விட 5 வயது சிறிய நடிகரை திருமணம் செய்யும் பிரபல நடிகை... கல்யாணம் எங்கேன்னு பாருங்க?

     சினிமா அல்ல நிஜம்

    சினிமா அல்ல நிஜம்

    31 வருட காவல்துறை அனுபவம் கொண்ட இவர், புல்லட்டில் ஜிம்னாஸ்டிக் சாகசமும் செய்யக்கூடியவர். வீரதீர செயலுக்காக இரண்டுமுறை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் இரு விருதுகளும், எடப்பாடி பழனிச்சாமியிடம் விருதும் பெற்றவர். தற்போதய முதல்வர் ஸ்டாலினும் இவரை உடனடியாக நேரில் அழைத்து பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார். சில ரவுடிகளை துரத்திப்பிடித்தும், சில சண்டையின் போது வெட்டுக்காயங்களுடன் வீரத்தழும்புகளை எல்லாம் பார்க்கும் போது நிஜ சினிமாவே தோற்றுவிடும் என்பது போல் தான் உள்ளது.

     இந்த மாதிரி படம் எடுங்க

    இந்த மாதிரி படம் எடுங்க

    போலீஸ் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று மக்களிடையே கொண்டு வந்து நிறுத்திய படங்கள் எம்ஜி ஆர்,சிவாஜி காலம் முதல் இப்போது வரை வந்து கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் எப்படிப்பட்ட ஒரு திரைப்படம் தேவை என்று சப் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி கூறியபோது " வழக்கமா நாங்க, மன நிலை பாதிக்கப்பட்ட நபர்களை, பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் பார்த்தா, அவங்கள கொண்டு வந்து குளிப்பாட்டி, பத்திரப்படுத்தி, சரியான நபர் கிட்ட சேர்த்தோ அல்லது காப்பகத்தில விடவோ செய்றோம். அது மட்டும் இல்லாம, அப்படி கொண்டுவிடப்பட்டவங்க பத்திரமா இருக்காங்களான்னும் க்ராஸ் செக் பண்றோம். அத பத்தி ஒரு படம் எடுத்தா ரொம்ப சூப்பரா ஓடும்.

     வரவேண்டிய நேரத்துல தானா வரும்

    வரவேண்டிய நேரத்துல தானா வரும்

    இப்ப சமீபத்துல நடந்த சம்பவம் எல்லோராலும் ரொம்ப பாராட்டப்பட்டது. எல்லோருக்கும் ரொம்ப நன்றி. நான் ஒன்னும் அந்த அளவுக்கு பெரிய விஷயமெல்லாம் பண்ணிடல.மயங்கி கிடந்த ஒருத்தருக்கு உயிர் இருக்குன்னு தெரிஞ்ச பிறகு, யாரா இருந்தாலும் அந்த உயிர காப்பாத்ததான் நெனப்பாங்க. நான் செஞ்சது தான் இந்த இடத்துல யாரா இருந்தாலும் செஞ்சிருப்பாங்க. எங்களுக்கு பாராட்டோ பதவி உயர்வு வேணும்ன்னோ எதுவும் நாங்க பண்றதில்ல. எங்க கடமைய நாங்க கரெக்ட்டா செய்றோம். எங்களுக்கு கிடைக்க வேண்டிய உயர்வுகள் நிச்சயமா கிடைக்கும்.

     புரிஞ்சிக்கோங்க. அது போதும்

    புரிஞ்சிக்கோங்க. அது போதும்

    2003 ல நடிகை விஜயசாந்தி நேர்ல பார்த்து என்ன பாராட்டுனாங்க. அப்பறம் பெரிய நடிகர்கள் யாரும் பேசினதுல்லாம் இல்ல. சினிமாவுலயே போலீச பத்தி குறைகளையே காட்டுறாங்க. போலீஸோட அவதூறுகளை மட்டும் படம் பிடிச்சி காட்டுறப்போ கொஞ்சம் கஷ்டமா இருக்கு. அத தாண்டி போலீஸ் செய்யற தியாகங்களும் உண்மையான உழைப்பும் இருக்கு. கொரோனா காலத்துல யாருக்கும் எந்த பாதிப்பும் வந்துடக்கூடாதுன்னு எல்லா போலீஸும் ரோட்ல நின்னோம். இன்னும் எத்தனையோ போலீஸ் மக்களுக்காகவே இருக்காங்க. அத எல்லாரும் புரிஞ்சிகிட்டாலே போதும். என புல்லட் பாய்ந்தது போல நச்சென்ற பதில்களை பகிர்ந்து கொண்டார், சாகச நாயகி சப் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி.

    English summary
    Police Women Officer Rajeswari Advise to Tamil Movie Directors
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X