twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சந்திப்போமா?

    By Staff
    |

    காதலன் படத்துக்குப் பிறகு, நீங்கள் நடித்த படங்கள் அந்த அளவுக்கு பெரிய வரவேற்பைப்

    பெறவில்லையே ஏன்?அது ஓரளவுக்கு உண்மைதான். அதைப்பற்றி நான் ஃபீல் பண்ணி என்ன ஆகப் போகிறது.அமையவில்லை. அது டைரக்டர்கிட்டேதான் இருக்கு.

    கமல் சாருடன் காதலா காதலா படத்தில் சேர்ந்து நடித்த அனுபவம்...

    நடிக்கப் போகும் முன்னால் ஒரு திரில் இருந்தது. நடிக்கும் போது எனக்கு ஒண்ணும் பெரிசா தெரியல.டைரகடர் சொன்னபடி நடிச்சி முடிச்சிடடேன். அப்புறம் ஹா! இவ்வளவு பெரிய ஆர்ட்டிஸ்டுடன்நடிச்சிருக்கோமேன்னு பெருமையா இருந்தது. நடனமாட சான்ஸ் கிடைத்ததை வாழ்நாள் முழுவதும் மறக்கமாட்டேன்.

    உங்க அப்பா, டான்ஸ் மாஸ்டர் சுந்தரம், ஒரு படம் டைரக்ட் பண்ணப் போவதாகவும், உங்கசகோதரர்கள் மூவரும் நடிக்கப் போவதாகவும் ரொம்ப நாளாக ஒரு செய்தி அடிபட்டுக் கொண்டேஇருக்கிறதே?

    அப்படியே செய்தியாகவே இருந்து கொண்டே இருக்கிறது. இன்னும் வேளை வரவில்லை.

    நடிப்பு, நடனம் தவிர வேறு ஏதாவது திறமை உங்களுக்குள் இருக்கிறதா?

    அது இரண்டைத் தவிர வேறு எதுவுமே தெரியாது. பாடலை ரசித்து கேட்பேன். பாடத் தெரியாது.ஏதாவது மியூசிக் கற்றுக் கொள்ள நினைத்தேன். எதுவுமே சரியாக அமையல.

    நீங்க ரொம்ப சந்தோஷமாக இருந்தால், எப்படி இருப்பீங்க?

    முன்னால, பாட்டைப் போட்டு, டான்ஸ் ஆடுவேன். இப்போ எங்கே ஓய்வு கிடைப்பதே ரொம்ப கம்மி.சூட்டிங் இல்லாமல் இருந்தால் ரிலாக்ஸ் பண்ணுவேன். சந்தோஷமாக இருந்தாலும் சரி,இல்லாவிட்டாலும் சரி தவறாமல் கோவிலுக்குப் போவேன்.

    உங்களுக்கு கோபம் வருமா?

    பாடல் காட்சியை படமாக்கும் போது வரும். என்ன பண்றது ரெஸ்பான்சிபிலிட்டி அதிகம். எதிர்பார்ப்புஅதிகம். வேறு வழியில்லை. அதனால கொஞ்சம் கமாண்ட் பண்ண வேண்டியதிருக்கு.

    தயாரிப்பாளர், டைரக்டர் எல்லாப் பொறுப்பும் கொடுத்து விடுகிறார்கள். என்ன படத்தின்பெட்டர்மென்டுக்காக வருகிற கோபம்தான். அவ்வளவுதான். அதை வெளியே காட்டியேதீரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடும்.

    உங்களைப் பற்றி வரும்வதந்திகள், விமர்சனங்கள் உங்களை பாதிக்க வைத்த செய்திகளுக்கு பதில்சொல்ல இஷ்டமா?

    அப்படி ஒண்ணும் இல்லை. அவுங்க இஷ்டம் அவுங்க பண்றாங்க. நாம பாட்டுக்கு நம்ம வேலையைப்பார்க்க வேண்டியதுதான்.

    நடித்துக் கொண்டிருக்கும் படங்களில் உங்களுக்கு ஸ்கோப் உள்ள மாதிரி படம் ஏதாவது உண்டா?

    ஸ்கோப் எல்லாம் நம்ம கையில இல்ல. படம் பார்க்கும் போது ஜாலியாக இருக்கணும். நமக்கு நல்லபேரு வரணும். காசு கொடுத்து படம் பார்க்கிறவங்களுக்கு படம் திருப்தியா இருக்கணும்.

    இப்படி ஒரு கேரக்டர் பண்ணணும். அப்படி ஒரு சாதனை பண்ணணும்னு எல்லாம் எதுவுமே கிடை.யாது.

    ஒரேயடியாக காமடியும் இருக்கக்கூடாது. சீரியசாகவும் இல்லாமல் இரண்டுமே இருக்கணும்.எல்லாரும் எதிர்பார்க்கிறது அதுதானே. மக்களின் ரசனை, டிரண்டுக்கு ஏற்ப கதைகள் அமைந்தால்நல்லது.

    தாடியை ஏன் விடாமல் வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?

    கேரக்டருக்கு தாடி தேவை இல்லை என்றால் அதை எடுத்துவிட்டுக்கூட நடிப்பேன். (கன்டினியூட்டிஇல்லாமல் இருக்கணும்)

    டான்ஸ் மாஸ்டர் ராஜு சுந்தரம்

    நீங்களும் தம்பி பிரபு தேவாவும் சேர்ந்து ஜெண்டில்மேனுக்குப் பிறகு நீண்ட நாட்கள் சேர்ந்துநடனமாடவில்லையே ஏன்? (பெண்ணின் மனதைத் தொட்டு படத்தில் இருவரும் சேர்ந்துநடனமாடி.யுள்ளனர்)

    யாரும் கேட்கல. அதனால சேர்ந்து ஆடல. இந்த பாடல் காட்சியில் எந்த விதமான ஸ்பெஷல்அயிட்டங்கள் எதுவும் கிடையாது. என்ன தோணுதோ அதை செய்துவிட்டுப் போய் கொண்டேஇருப்போம். நானும் தம்பியும் ஒண்ணாக சேர்ந்து ஆடுறோம்.

    உங்க தம்பி பிரபு தேவாவோட டான்ஸ்னா, உங்களுக்குப் பிடிக்குமா?

    நான் அவரோட ஃபேன். ரொம்பப் பிடிக்கும். நான் டான்ஸ் மாஸ்டராக அவரை நிறைய படத்தில் ஆடவைச்சிருக்கேன். காதலன், இன்னும் நிறைய படங்களுக்கு இரண்டு பேருமே சேர்ந்து கம்போஸ் பண்ணிஆடியிருககிறார்.

    அப்பா கம்போஸ் பண்ணி நான் ஆடியதுதான் ருக்குமணி பாடல். அது போல் அப்பா கம்போசிங்கில்தம்பியும் நிறைய ஆடியிருக்கிறார்.

    டிசம்பர் 31-ம் தேதி 2000 வருட ஆரம்பத்தில் முதன் முறையாக பத்து சுந்தரிகளை வைத்து ஸ்டேஜ்புரோகிராம்ஸ் கொடுத்தீர்களே அந்த அனுபவம் எப்படி? உங்கள் டான்ஸ் ஸ்டைல் பற்றி...

    கிரேட் எக்ஸ்பீரியன்ஸ். என்னைப் பொறுத்தவரை டான்ஸ் என்பது இலகுவாக எல்லாரும் ஆடும்படியாகஇருக்க வேண்டும். கஷ்டப்படக் கூடாது. சிறு குழந்தை முதல் வயதானவர்கள் வரை ஆடும்படியாகஇருக்க வேண்டும். இதற்கு முக்கியமானது ரிதம் தான்.

    பார்க்கிறவர்களுக்கு அது ஈசியாக தெரியும். அவுங்களும் ஆடணும்னு தோணணும். நான் மியூசிக்கு ஏற்றமாதிரி, நடனம் அமைக்கிறேன்.

    அப்பா வயதான குரூப் டான்சர்களை கிழவிகளை எல்லாம் ஆட வைத்த்து போல, ஒரு நடனப் புரட்சிசெய்யும் எண்ணமெல்லாம் உண்டா?

    அப்படி எக்ஸ்பரிமெண்ட் பண்ணுகிற எண்ணமெல்லாம் எனக்குக் கிடையாது. என்னை அழைத்து இந்தபாடலுக்கு நடனம் அமைத்துக் கொடுங்கள் என்று கேட்டுக் கொள்ளும் போது.கிர்யேட்டிவாகவும் ஜாலியாக பார்க்கிற மாதிரி, நான் எடுத்துக் கொடுக்கிறேன்.

    டைரக்டர், கேமராமேன், புரடியூசர் இவர்கள் முடிவு பண்ணிச் செய்வது என்னிடம் கேட்டால் ஒப்பீனியன்மட்டுமே தெரிவிப்பேன் . நாங்களாக இது வேணும், அது வேணும்னு முடிவு செய்வதில்லை.

    இன்னும் எவ்வளவு நாள் இப்படி கட்டை பிரம்மச்சாரியாக இருப்பதாக உத்தேசம்? தம்பி பிரபுதேவாவுக்காவது லைன் கிளியர் பண்ணலாமே?

    என்னைப் பொறுத்தவரை, வீட்டைக் கட்டிப்பார், கல்யாணத்தைப் பண்ணிப் பாரும்பாங்க. பார்க்கலாம். .

    தம்பி ஆடிய புக்கார் படத்தில் ஆடிய டான்ஸ் பார்த்தீர்களா?

    பார்த்தேன். வட இந்தியாவில், நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கு. நம்ம ஊர் மாஸ்டர்கள், டான்சர்களுக்கு அங்கேஎப்போதுமே நல்ல வரவேற்பு உண்டு.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X