»   »  சந்திப்போமா?

சந்திப்போமா?

Subscribe to Oneindia Tamil

அழகிய தீயே படத்தின் வெற்றி, அதன் ஹீரோ பிரசன்னாவை பிஸியான நடிகராக்கியுள்ளது.

படம் ரிலீஸாகி நல்லபடியாக ரிசல்ட் வர ஆரம்பித்ததும், தயாரிப்பாளர் பிரகாஷ்ராஜ், நடிகர்கள் பிரசன்னா,குமரவேல், பாலா, ஜெயவர்மா, வசனகர்த்தா விஜி ஆகியோர் ஒவ்வொரு ஊராக சென்று ரசிகர்களை சந்தித்தனர்.மொத்தம் 8 நாட்கள், 3,700 கி.மீ. பயணம் செய்து 40 தியேட்டர்களில் ரசிகர்களைச் சந்தித்துள்ளனர்.

ரசிகர்களிடம் நேரடியாக பாராட்டைப் பெற்ற சந்தோஷத்தில் இருந்த பிரசன்னாவை நாம் சந்தித்தபோது படுஉற்சாகமாகப் பேசினார்.

என் வாழ்க்கையில் இது மறக்க முடியாத டூர். திருச்சியில் இன்ஜீனியரிங் படித்துக் கொண்டிருந்தபோது, பைவ்ஸ்டார் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதில் நான்கு பேரில் ஒருவனாக நடித்திருந்தாலும், எனது நடிப்பைஎல்லாரும் பாராட்டினார்கள். பின்னர் வந்த ரகசியமாய், காதல் டாட் காம் படங்கள் சரியாகப் போகவில்லை.

அப்போதுதான் ராதாமோகன் ஒரு எளிமையான கதை ஒன்றை சொன்னார். அதில் நான் நடித்தால் பொருத்தமாகஇருக்கும் என்று கருதினார். படத் தயாரிப்பாளர் பிரகாஷ்ராஜூம் சரி என்று கூறிவிடவே, அழகிய தீயே படத்தில்நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

நானும் என்னால் முடிந்த அளவுக்கு சிறப்பாக நடித்தேன். படத்தைப் பார்த்துவிட்டு பிரகாஷ்ராஜ், இயக்குநர்சேரன், என் முதல்பட இயக்குநர் சுசி கணேசன் உட்பட பலரும் பாராட்டினார்கள். இந்தப் படம் எனக்கும் எங்கள்குழுவிற்கும் மிகப் பெரிய மரியாதையை ஏற்படுத்தித் தந்திருக்கிறது.

இந்தப் படத்தின் மூலம் சினிமாவில் முன்னுக்கு வந்து விட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு வந்திருக்கிறது.தொடர்ந்து இது போன்ற படங்களில் நடிக்க விரும்புகிறேன்.

அழகிய தீயே படத்தில் பணியாற்றிய எல்லாரும் சேர்ந்து மீண்டும் ஒரு படம் பண்ணவிருக்கிறோம். படத்தின்கதை இன்னும் முடிவாகவில்லை. சேரனின் ட்ரீம் தியேட்டர்ஸ் தயாரிப்பில் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன்இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் நான் தான் ஹீரோ.

அதோடு இயக்குநர் கெளதமிடம் அசோசியேட்டாக இருந்த கிருஷ்ணா இயக்குநராக அறிமுகமாகும் ஒரு படத்தில்நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறேன். இந்தப் படத்தில் எனக்கு இரண்டு ஹீரோயின்கள் என்றார்.

கதாநாயகிகள் என்றதும் தங்கள் வாழ்வில் கதாநாயகி யாராவது வந்திருக்கிறார்களா என்று கேட்டபோது,

இதுவரை இல்லை. நான் ஆரம்பம் முதல் காலேஜ் வரை கோ- எட்டில் தான் படித்தேன். எல்லோரிடமும் சகஜமாகப்பழகுவேன் என்றாலும், இதுவரை காதலித்தது இல்லை. இப்போது என் கவனம் எல்லாம் சினிமாவில் ஜெயிக்கவேண்டும் என்பதில்தான் உள்ளது.

குடும்பம், காமெடி, ஆக்ஷன் என்று எந்த வேடம் கொடுத்தாலும் பின்னியெடுக்க வேண்டும் என்பது என் ஆசை.முதலில் கொஞ்சம் சாப்ட்டான ரோல்களில் நடித்து விட்டு, பிறகு ஆக்ஷன் படங்களுக்கு மாறுவேன் என்றுநம்பிக்கையுடன் சொன்னார்.

பேச்சின்போது படத்தின் தயாரிப்பாளரான நடிகர் பிரகாஷ்ராஜை விடாமல் பாராட்டிக் கொண்டேஇருந்தார் பிரசன்னா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil