"ஏமாந்தா ஏமாந்துட்டு போறோம் சார், அவ்வளவு விவரமா இருந்து என்னத்த பண்ண போறோம்" - பிரேம்குமார் பேட்டி!

சென்னை: "மனிதர்களின் பேரன்பை எதிர்கொள்வது எவ்வளவு நெருக்கடியான விஷயம்" என்றும் ஒருவர் உங்களை ஏமாற்றினால் ஏமாற்றி விட்டு போகட்டுமே என ரொம்பவே யதார்த்தமாக இயக்குநர் பிரேம்குமார் ஒரு பேட்டியில் கூறியது பலரையும் திரும்பி பார்க்க வைத்தது. எதிர்பார்ப்பில்லாமல் கிடைக்கும் அன்பை எப்படி கையாள்வது என்பதைப் பற்றி அவர் பேசியது ஆழமானதாக இருந்தது.

கோபிநாத் உடனான இந்த உரையாடலில், 96 மற்றும் மெய்யழகன் திரைப்படங்களின் மூலம் பிரபலமான பிரேம்குமார், தனது திரைப்பயணம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசினார். மனிதர்களின் உணர்வுகளையும், உறவுகளின் நுட்பத்தையும் தனது படங்களில் பிரதிபலிக்கும் பிரேம், தனிமையையும், மனிதர்கள் மீதான நம்பிக்கையையும் பற்றி பகிர்ந்துகொண்டார்.

Premkumar On Love 96 Meyyazhagan
Photo Credit:

"சின்ன வயசுல கிடைக்கக்கூடிய அனுபவங்கள்தான் நம்மள வடிவமைக்குது" என்று கூறும் பிரேம், பள்ளிக்காலத்தில் மற்றவர்களிலிருந்து சற்று வித்தியாசமாக இருந்ததாகவும், அதனால் தனிமையை நாடிச் சென்றதாகவும் கூறினார். தஞ்சாவூரில் இயற்கை சூழ்ந்த வீட்டில் வளர்ந்ததால், மிருகங்களோடு அதிக நேரம் செலவழித்ததாகவும், அது மனிதர்களுடனான தொடர்பை குறைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

பகத் பாசிலுடன் இணைந்து பணியாற்ற இருப்பது குறித்து பேசிய பிரேம்குமார், இது முற்றிலும் மாறுபட்ட ஜானரில் இருக்கும் என்றும், ஆனால் மனித உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் என்றும் தெரிவித்தார். ஸ்பீல்பெர்க் படங்கள் தனக்கு உத்வேகம் அளிப்பதாகவும், எமோஷனல் விஷயங்களை எந்த ஜானரிலும் சொல்ல முடியும் என்று தான் நம்புவதாகவும் அவர் கூறினார்.

96 திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சிகள் குறித்தும் பிரேம்குமார் பகிர்ந்து கொண்டார். குறிப்பாக, ராம் தனது காதலுக்காக சேர்த்து வைத்த பொருட்களை ஜானுவிடம் காட்டும் காட்சி, அவரது சொந்த வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது என்றார். தன் அப்பா Gulfல இருந்து வாங்கிட்டு வந்த பெட்டியை தன் நினைவுகளா வெச்சிருந்ததா சொன்னாரு.

ஆண் அழுகையை சுதந்திரமாக அளவிடுவது ஏன் பிடிச்சிருக்கு என்ற கேள்விக்கு, நம்மாழ்வார் சொன்ன உமிழ்நீர் மற்றும் கண்ணீர் குறித்த தத்துவத்தை நினைவு கூர்ந்தார். இதயம் மற்றும் மனம் இருந்தால் கண்ணீர் வரும் என்றும், அதை கிண்டல் செய்வது தவறு என்றும் அவர் கூறினார்.

படத்தின் ஒவ்வொரு ஷாட்டும் தனக்கு முக்கியமானதாக இருந்ததாகவும், வீட்டுக்கு பூட்டு போடும் காட்சியில் தனது சொந்த அனுபவத்தை நினைவு கூர்ந்ததாகவும் பிரேம்குமார் கூறினார். கமல்ஹாசனின் குரலில் ஒலிக்கும் "போய் வா" பாடல் தன்னை மிகவும் பாதித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

சினிமா தனக்கு கிடைத்த வரம் என்று கூறும் பிரேம்குமார், தான் ஒரு கமர்ஷியல் சினிமாவில் இருந்தாலும் கிளாசிக் படங்களை பார்த்து வளர்ந்ததாகவும் தெரிவித்தார். மேலும், ஒரு கதையை பொறுமையாக, நிதானமாக சொல்ல வேண்டும் என்றும், ஆடியன்ஸை அந்த உலகத்துக்குள் அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

எதிர்மறையான விஷயங்கள் இயல்பாக்கப்படுவதை சுட்டிக்காட்டிய பிரேம்குமார், அன்பையும், நல்லிணக்கத்தையும் மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் வந்துள்ளதாகவும் கூறினார். சினிமா மூலம் தன்னால் முடிந்த விஷயங்களை செய்ய விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

"ஏமாந்தா ஏமாந்துட்டு போறோம் சார், அவ்வளவு விவரமா இருந்து என்னத்த பண்ண போறோம்" என்று பிரேம் பேசியது சமூகத்தில் இருக்க வேண்டிய எதார்த்தத்தை அழகா சொன்னாரு. இந்த நேர்காணல் காதலில் எவ்வளவு பேசிய பிறகு ஒரு மிச்சம் இருக்கு அப்படிங்கற மாதிரி இன்னும் நிறைய பேச வேண்டியது இருக்குன்னு பிரேம் சொன்னது ஒரு நல்ல தொடக்கமா இருந்தது.

More from Filmibeat

Read more about: premkumar tamil cinema
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X